285. வேர்கள்.

buttress-roots-eastern-amazon-ecuador-1920x1080

வேர்கள்.

வேர்கள் ஓடி வேளாண்மையாக

வேதனமானது வாழ்வெனும் தேர்.

அன்பு நம்பிக்கையின் வேர்

இன்ப உறவின் ஊர்

தென்புடன் அன்பைச் சேர்!

நம்பிக்கை நேர்மையின் வேர்

நேர்மை நற்பண்பின் வேர்

நேரான மனிதனாய் வாழ்ந்து பார்!

நற்பண்பு நல் மனிதத்து வேர்.

சொற்பண்பு தூய்மைக்குத் தூர்.

உறவு சமுதாய ஆணிவேர்

துறவைத் தூரத்தள்ளும் பார்!

ஆசை எதிர் பார்ப்பின் வேர்

எதிர்பார்ப்பு கவலையின் ஊர்

மனிதரின் நோய்க்கு ஊர்.

மாட்டிக் கொள்ளாதோர் யார்!

காதல் கல்யாணத்தின் வேர்.

காதலில் வீழாதார் யார்!

கல்யாணம் சந்ததியின் வேர்

பல்லாண்டாய் உலகத்து நார்.

சந்ததி சமுதாயத்து வேர்

சமுதாயம் உலகத்து வேர்.

வேரோடி விழுது வரும்

ஊரோடி உறவு வரும்.

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

6-5-2002.

divider1

Advertisements

18 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. GOPALAKRISHNAN. VAI
  செப் 18, 2013 @ 10:14:50

  //வேரோடி விழுது வரும் …. ஊரோடி உறவு வரும்.//

  சிறப்பான ஆக்கம். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  மறுமொழி

 2. கோமதி அரசு
  செப் 18, 2013 @ 10:49:27

  அன்பு நம்பிக்கையின் வேர்

  இன்ப உறவின் ஊர்
  //தென்புடன் அன்பைச் சேர்!//

  அன்பு அது தரும் தெம்பு.. அன்பு நம்பிக்கையின் வேர் உண்மை.
  அழகான அருமையான கவிதை.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  செப் 18, 2013 @ 13:25:53

  அருமை… அருமை… வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 4. இரவின் புன்னகை- வெற்றிவேல்
  செப் 18, 2013 @ 14:40:26

  வணக்கம் வேதா. இலங்காதிலகம்,

  அழகான கவிதை இயைபு வசப்பட சிறப்பாக பாடியுள்ளீர்கள். தங்கள் தளம் wordpressல் உள்ளதால் பின் தொடர்ந்து என்னால் வர இயலவில்லை. தங்கள் பின்னூட்டம் பார்த்த பிறகே, என் தள பின்னூட்டம் வழியாக மட்டுமே வர இயலுகிறது… வேறு வழி உள்ளதா…?

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 28, 2013 @ 07:04:28

   ஆம் இயல்பாக ஒன்றை வேட் பிரசில் திறவுங்கள் ஆக்கம் போடவேண்டும் என்று அவசியமில்லை. நான் புளொக்கில் அப்படித்தான் செய்துள்ளேன்.
   ஊக்கம் தரும் கருத்திற்கு
   மனம் நிறைந்த நன்றியும் மகிழ்வும் சகோதரா. ….

   மறுமொழி

 5. தி தமிழ் இளங்கோ
  செப் 18, 2013 @ 18:17:54

  தங்கள் கவிதைகளைப் படிக்கும் போது அடிக்கடி புதுப்புது சொற்களைக் காண நேரிடும். அப்போதெல்லாம் தமிழ் அகராதியை எடுத்துப் பார்ப்பேன். இந்த கவிதையில் “வேதனமானது வாழ்வெனும் தேர்.” என்பதில் வேதனம் எனக்கு புதிய சொல். அகராதியில் இல்லாததால் இண்டர்நெட்டில் லிப்கோ அகராதியை நாட வேண்டி இருந்தது. உங்கள் கவிதைகளால் எனக்கு பல புதிய சொற்கள் அறிமுகம் ஆகின்றன. நன்றி

  வேதனம் : (1) சம்பளம் wages; (2)அறிவு knowledge; (3) வேதம் the Vedas; (4) உணர்ச்சி feeling; (5) வேதனை agony; (6) பொன் gold; (7) துளைத்தல் boring; piercing through. ( லிப்கோ தமிழ்ப் பேரகராதி தமிழ்-தமிழ்-ஆங்கிலப் பேரகராதி) http://www.lifcobooks.com/tamildictionary

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 28, 2013 @ 07:18:24

   Mika makilchchy.
   கபாலங்களையுமுடைக்கும் கடின பாறைகளாக என் கவி வரிகள் சில காலத்திற்கு முன். இருந்தது. என் முதல் விமரிசகர் கணவர். எல்லாம் வாசிக்கமாட்டார். நான் enkku நெருடும் கவிதைகளைக் கேளுங்கள் என்று வாசித்துக் காட்டிக் கருத்துக் கேட்பேன்.
   என் சொற்பிரயோகங்கள் அவருக்கும் கடினமாக இருந்து ..” இது யாருக்கு விளங்கும். எனக்கே விளங்கவில்லையே..

   என இடித்து இடித்துக் கூறி சிறிது நெகிழ்த்தியுள்ளேன்.
   கடலில் தேனைக் கொட்டுவது போல உணர்வு இருந்தது. …anru…
   இனிய கருத்திற்கு நன்றி. மனதிற்கு தெம்பு தரும் வரிகள். மிக்க நன்றி…நன்றி.

   மறுமொழி

 6. Rajarajeswari jaghamani
  செப் 19, 2013 @ 04:01:21

  வேரோடி விழுது வரும்

  ஊரோடி உறவு வரும்.
  ஆணிவேராய் அருமையான கவிதை..!

  மறுமொழி

 7. Karanthai Jayakumar
  செப் 19, 2013 @ 14:36:59

  நம்பிக்கை நேர்மையின் வேர்
  நேர்மை நற்பண்பின் வேர்
  நேரான மனிதனாய் வாழ்ந்து பார்!
  அருமை சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 8. கீதமஞ்சரி
  செப் 24, 2013 @ 13:26:05

  வாழ்க்கை விருட்சம் ஆட்டங்கண்டுவிடாதபடிக்குப் பற்றிக்கொள்ளும் வேர்களாய் அன்பு, நற்பண்பு, நம்பிக்கை, நேர்மை என பல்வேறு நற்குணங்களையும் சுட்டிய கவிதையும் கவிமொழியும் அசத்துகின்றன. பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 9. sujatha
  செப் 30, 2013 @ 13:42:01

  காதல் கல்யாணத்தின் வேர்.

  காதலில் வீழாதார் யார்!

  கல்யாணம் சந்ததியின் வேர்

  பல்லாண்டாய் உலகத்து நார்.

  சந்ததி சமுதாயத்து வேர்

  சமுதாயம் உலகத்து வேர்.

  வேரோடி விழுது வரும்

  ஊரோடி உறவு வரும்.
  அருமை………..உறவுகள் தொடர்கதை…..சந்ததி பெருக்கம்….. வளர்க
  தமிழ்!!!!

  மறுமொழி

 10. பழனிவேல்
  அக் 14, 2013 @ 11:40:47

  தாமததிற்கு மன்னிக்கவும்.

  “காதல் கல்யாணத்தின் வேர்.
  காதலில் வீழாதார் யார்!
  கல்யாணம் சந்ததியின் வேர்
  பல்லாண்டாய் உலகத்து நார்.
  சந்ததி சமுதாயத்து வேர்
  சமுதாயம் உலகத்து வேர்.
  வேரோடி விழுது வரும்
  ஊரோடி உறவு வரும்.”

  அழகு…
  அருமையான விளக்கம்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: