30. ஆராத ஆசை

580989_130759073731917_932147182_n

ஆராத ஆசை

 

ஊரான பிறந்த ஊரை

யாராலே மறக்க முடியும்!

ஆராத ஆசையங்கு

சீராட எம்முறவுகளோடு.

 

வேராகவிருந்த பல

ஏராளம் உறவுகள் இன்று

ஊராள உலகில் இல்லை

சீராட முடியா நிலை.

 

தோராயம் கொண்ட ஆசை

நேராதல் கடும் சிரமம்.

பேராசையென்பதில்லை.

தீராது இந்த ஆசை.

 

(தோராயம் – எதிர்பார்ப்பு.  நேராதல் -சரியாதல்.)

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

25-9-2013.

 

 

chainborder

Advertisements

31 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  செப் 25, 2013 @ 07:22:15

  தொழில்நுட்பக் கோளாறால் படம் இட முடியவில்லை பின்னர் வலையேற்றுவேன்.

  மறுமொழி

 2. கிரேஸ்
  செப் 25, 2013 @ 07:34:32

  வருத்தத்தை உணர முடிகிறது…

  மறுமொழி

 3. தி தமிழ் இளங்கோ
  செப் 25, 2013 @ 08:22:04

  // ஊரான பிறந்த ஊரை
  யாராலே மறக்க முடியும்! //

  உண்மைதான். எங்கள் ஊர் என்று சொல்வதில்தான் எவ்வளவு பெருமை. உறவுகளை மறக்க முடியாத உங்கள் கவிதை. நானும் எனது ஊரும் என்ற தலைப்பில் நிறைய பதிவர்கள் தொடர் பதிவு எழுதினார்கள். நீங்கள் எழுதினீர்களா இல்லையா என்று தெரியவில்லை. ஆனாலும் உங்கள் பழைய நினைவுகளை படித்து இருக்கிறேன். நன்றி!

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 25, 2013 @ 08:53:49

   தொடர் பதிவு எழுதவில்லை .
   இங்கு ” தொலைத்தவை எத்தனையோ..” என்று தொடர்ந்து எழுதுகிறேன்.
   தங்கள் இனிய கருத்திற்கு மகிழ்ந்தேன்
   மிகுந்த நன்றி.

   மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  செப் 25, 2013 @ 08:37:21

  ஆசையா…? நல்லது… இதோ உங்களுக்குக்காக :

  http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Desire-Greedy.html

  அன்புடன் DD

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 25, 2013 @ 08:49:16

   டி.டி தங்கள் ஆசை பார்த்து கருத்திட்டு விட்டேனே!!!!!!…ha!…ha!………
   மிக நன்றாக இருந்தது பதிவு. here…
   தங்கள் கருத்திற்கும் மிக மிக நன்றி.

   மறுமொழி

 5. GOPALAKRISHNAN. VAI
  செப் 25, 2013 @ 09:37:49

  அருமையான ஆக்கம். பகிர்வுக்கு நன்றிகள்.

  மறுமொழி

 6. karanthaijayakumar
  செப் 25, 2013 @ 11:18:24

  மறத்தல்ஊரை மறத்தல் யாரால் இயலும்

  மறுமொழி

 7. karanthaijayakumar
  செப் 25, 2013 @ 11:22:25

  சொந்த ஊரை மறத்தல் யாரால் இயலும்

  மறுமொழி

 8. கோமதி அரசு
  செப் 25, 2013 @ 11:31:50

  வேராகவிருந்த பல

  ஏராளம் உறவுகள் இன்று

  ஊராள உலகில் இல்லை

  சீராட முடியா நிலை.//

  படிக்கும் போது மனது வேதனைப் படுகிறது.
  உறவுகளையும், சொந்தங்களையும் எப்படி மறக்க முடியும் நம்மால்!

  மறுமொழி

 9. raveendran sinnathamby
  செப் 25, 2013 @ 12:37:44

  good.

  மறுமொழி

 10. maathevi
  செப் 25, 2013 @ 13:08:57

  எல்லோருக்கும் உள்ள ஆசைதான்.

  மறுமொழி

 11. வேல்முருகன்
  செப் 25, 2013 @ 13:49:13

  புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கை

  மறுமொழி

 12. bagawanjee
  செப் 25, 2013 @ 17:42:37

  இன்று என்ன ஆசை தினமா ?நண்பர் ddஅவர்களும் ஆசைப் படுகிறார் .நீங்களும் உங்கள் ஆசையை சொல்லி இருக்கிறீர்கள் …ஆசைகள் நிறை வேறட்டும்!

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 25, 2013 @ 18:53:10

   எப்படி பதிவுகள் போட்டாலும் தமிழ்மணத்தில் 40ம் இலக்கத்திற்குக் கீழே வந்தாலும் மளமளவென 40க்கு ஏறுது. உடனே ஏதாவது போட வேண்டும் என்று முன்பு எழுதிய ஓர் ஆக்கம் போட்டேன் அதுவே ஆசை.
   மிக்க நன்றி கருத்திற்கு.
   ஏன் இந்தப் பெயர் பகவான்ஜி?

   மறுமொழி

 13. Rajarajeswari jaghamani
  செப் 26, 2013 @ 15:53:54

  தோராயம் கொண்ட ஆசை

  நேராதல் கடும் சிரமம்.

  பேராசையென்பதில்லை.

  தீராது இந்த ஆசை.

  தீராத ஆசை என்னும் சுழல்..!

  மறுமொழி

 14. kowsy
  செப் 26, 2013 @ 19:16:03

  காலம் போகும் திசையில் போகின்றோம் . எதிர்பார்ப்புக்கள் ஏராளம் .நிறைவேறல் அருமை

  மறுமொழி

 15. கோவை கவி
  செப் 29, 2013 @ 15:14:25

  IN FB:-
  Desingh Paramasivan likes this..
  Desingh Paramasivan ஆராத ஆசையெனக்கு
  அமுதான கவிகேட்டிட
  தேனாக இனித்ததுவே
  தீந்தமிழாய் இக்கவிதை!

  Vetha ELangathilakam:- மிகுந்த நன்றி கருத்திற்கு. இறையாசி நிறையட்டும்.

  மறுமொழி

 16. பழனிவேல்
  அக் 14, 2013 @ 12:08:42

  “தோராயம் கொண்ட ஆசை
  நேராதல் கடும் சிரமம்.
  பேராசையென்பதில்லை.
  தீராது இந்த ஆசை.”

  ஆம், அழகாய் சொன்னீர்கள்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: