45. எனக்கிது புதிது.

254610_225421057501959_2224213_n

எனக்கிது புதிது.

களியிது மெல்லக் கனியுது.

குளிருது இளம் தளிரிது.

மலரிது என்னை மயக்குது.

மதுவிது நல் மாதிது.

எனக்கேயிது புதிது.

படியுது நிறை பாசமிது.

நெடியது நீண்டு வருவது.

மெலியது இளம் கொடியிது.

வலியது வாழ்வுக் கோலமிது.

பலமிது உறவுப் பாலமிது.

துணைக்கிது வெகு தேவையிது.

இணையுது எதற்கிணையிது!

அணைக்கவிது தீ அணையுது.

அன்பிது பழகி அறிவது.

துன்பமிது பழகி விலகுவது.

தேடுவதிது சுகம் நாடவிது.

பாடலிது பக்குவ இராகமிது.

நடிப்பிது அன்றேல் இனிப்பது.

வெடிப்பது, கடிப்பது, விதைப்பது,

துடிப்பது எல்லாமுமான அரங்கிது.

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

9-2013.

Nyt billede

30 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தி தமிழ் இளங்கோ
  செப் 28, 2013 @ 00:15:25

  அகத்திணை அரங்கேறுகையில் எனக்கங்கே வேலையில்லை. கவிஞரின் கற்பனைக்கு தடை இல்லை!

  மறுமொழி

 2. karanthaijayakumar
  செப் 28, 2013 @ 01:45:22

  தாலாட்டுப் பாடல் போல் மனதிற்கு இதம்தரும் கவிதை

  மறுமொழி

 3. Rajarajeswari jaghamani
  செப் 28, 2013 @ 02:48:52

  புதிதான பார்வை அழகு..!

  மறுமொழி

 4. ramani
  செப் 28, 2013 @ 03:18:34

  படிக்கப் படிக்க நாவில் திகட்டாத தேன் சுவை
  கருத்தைச் சுவைக்கச் சுவைக்க நெஞ்சில்
  இனம் புரியா இன்ப வாதை
  மனம் தொட்ட அருமையான
  அகத்திணைப் பாடல் பகிர்விற்கு
  மனமார்ந்த வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 30, 2013 @ 08:43:54

   மிக நன்றி தங்கள் ரசனையான கவனிப்பிற்கு, கருத்திடலிற்கு.
   மிக மகிழ்ச்சி.
   ஊக்குவிப்புக்கு இணையில்லை.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 5. திண்டுக்கல் தனபாலன்
  செப் 28, 2013 @ 03:53:17

  ரசிக்க வைக்கும் வரிகளை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது… வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 30, 2013 @ 08:44:37

   மிக நன்றி தங்கள் ரசனையான கவனிப்பிற்கு, கருத்திடலிற்கு.
   மிக மகிழ்ச்சி.
   ஊக்குவிப்புக்கு இணையில்லை.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 6. GOPALAKRISHNAN. VAI
  செப் 28, 2013 @ 06:56:58

  பாடல் அருமையாய் இருக்’கிது’.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 30, 2013 @ 08:44:54

   மிக நன்றி தங்கள் ரசனையான கவனிப்பிற்கு, கருத்திடலிற்கு.
   மிக மகிழ்ச்சி.
   ஊக்குவிப்புக்கு இணையில்லை.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 7. இளமதி
  செப் 29, 2013 @ 09:20:25

  வாழ்வரங்கின் நிகழ்வதனை
  பாடலரங்கில் பகர்ந்தவிதம்
  ரகசியமாய், ரசனையாய் அற்புதமாய் உள்ளது!

  வாழ்த்துக்கள் சகோதரி!

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 30, 2013 @ 08:45:20

   மிக நன்றி தங்கள் ரசனையான கவனிப்பிற்கு, கருத்திடலிற்கு.
   மிக மகிழ்ச்சி.
   ஊக்குவிப்புக்கு இணையில்லை.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 8. Dr.M.K.Muruganandan
  செப் 29, 2013 @ 17:20:06

  ஓசை நயத்துடன் அழகான கவிதை

  மறுமொழி

 9. mahalakshmivijayan
  செப் 30, 2013 @ 04:50:27

  மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன் சகோதரி 🙂

  மறுமொழி

 10. sasikala
  செப் 30, 2013 @ 09:06:38

  எல்லாமுமான அரங்கிது.. அழகா சொல்லிட்டிங்க.

  மறுமொழி

 11. கீதமஞ்சரி
  அக் 01, 2013 @ 10:30:39

  இணையற்ற இணையைக் கொண்டாடும் மனத்தில் ஆர்த்தெழும் அன்பின் அரவணைப்பு. மயக்கும் கவிச்சந்தம். பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 12. இராமாநுசம்
  அக் 03, 2013 @ 09:54:16

  கவியிது கனியிது பூவிது சொட்டுது தேனிது நாவது சுவையது
  நன்றிது!வாழ்த்திது

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 04, 2013 @ 06:10:52

   மிக நன்றி தங்கள் கவனிப்பிற்கு, கருத்திடலிற்கு.
   மகிழ்ந்தேன்
   இனிய ஆதரவு தொடரட்டும்.
   இறையாசி நிறையட்டும்..sir…

   மறுமொழி

 13. கோவை கவி
  அக் 03, 2013 @ 15:23:15

  Annan Pasupathyposted toVetha ELangathilakam

  ‘எனக்கிது புதிது’ க்கான கருத்தூட்டம்:
  இயல்பான கவிதையோட்டம். spontaneous overflow of powerful emotions

  (the comment button isn’t visible in mobile)
  You like this..

  Vetha ELangathilakam:- மிக்க நன்றி ஐயா- மிக மகிழ்ந்தேன்-
  இறையாசி நிறையட்டும்.

  மறுமொழி

 14. பழனிவேல்
  அக் 21, 2013 @ 09:44:33

  “தேடுவதிது சுகம் நாடவிது.
  பாடலிது பக்குவ இராகமிது.
  நடிப்பிது அன்றேல் இனிப்பது.
  வெடிப்பது, கடிப்பது, விதைப்பது,
  துடிப்பது எல்லாமுமான அரங்கிது.”

  ஆழமான கருத்தை
  அழகிய வார்த்தைகளில்
  அமுதம் படைத்துவிட்டீர்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 23, 2013 @ 09:25:27

   மிக நன்றி பழனிவேல் தங்கள் கவனிப்பிற்கு, கருத்திடலிற்கு.
   மகிழ்ந்தேன்
   இனிய ஆதரவு தொடரட்டும்.
   ஊக்குவிப்புக்கு இணையில்லை.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 15. கோவை கவி
  மார்ச் 06, 2015 @ 09:08:51

  You, பிரபா சரவணா, Baba Muthu, Mullai Amuthan and 17 others like this.

  கார்த்திக் சரவணன் like this.

  Mani Kandan :-
  அருமை அருமை

  Sharmila Dharmaseelan
  Sharmila Dharmaseelan’s photo.

  மகாதேவன் செல்வி :-
  சொல்லாடல் அருமை5-3-15

  Rathy Srimohan :-
  அழகான வரிகள்…

  Gomathy Arasu :-
  அருமையான கவிதை.

  Rajaji Rajagopalan :-
  இனிப்பிது, வாசிப்பது களிப்பிது.

  சிறீ சிறீஸ்கந்தராஜா \\களியிது மெல்லக் கனியுது. குளிருது இளம் தளிரிது. மலரிது என்னை மயக்குது. மதுவிது நல் மாதிது.\\ ****** அருமை!! வாழ்த்துக்கள் அம்மா!!

  கவின் மகள் :-
  அருமை

  Vetha Langathilakam:-
  அன்பான மணிகண்டன், ஷர்மிளா,
  மகாதேவன் செல்வி மிக மகிழ்வு தங்கள் கருத்தையிட்டு.
  மிக்க நன்றி.6-3-2015
  Vetha Langathilakam:-
  அன்பான ரதி, கோமதி, ராஜாஜி,
  சிறீ, கவின்மகள்.மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு.
  மிக மகிழ்ந்தேன். 6-3-2015

  மறுமொழி

 16. கோவை கவி
  மார்ச் 25, 2019 @ 20:58:45

  புலவர்குரல் இராமாநுசம் :- அருமை!

  Vetha Langathilakam:- நன்றி ஐயா!.
  இறையாசி நிறையட்டும்.
  i
  Pushpalatha Gopalapillai :- அருமை.
  2014
  சிறீ சிறீஸ்கந்தராசா:- “களியிது மெல்லக் கனியுது.
  குளிருது இளம் தளிரிது.
  மலரிது என்னை மயக்குது.
  …மதுவிது நல் மாதிது”
  ********அருமை! வாழ்த்துக்கள் அம்மா!!
  2014
  Krishnan Balaa :- எனக்கும்கூட இது புதிது….உங்களிடமிருந்து வரும் இந்தச் சந்தம் புதிது.
  2014
  Venkatasubramanian Sankaranarayanan :- படிக்க நாவிற்கும்
  படித்துக் கேட்க செவிக்கும்
  இனிமை சேர்க்கும் அருமையான
  சந்தக் கவி
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
  2014
  Verona Sharmila :- அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் …தான் உங்களிடமிருந்து பிரவாகம் எடுத்து ஊறும் இனிய கவிதைகள் .. வாழ்த்துக்கள்
  2014
  Mageswari Periasamy :- புதிது இது புதிது… மனதில் நிரந்திரமாகியது… அருமை சகோதரி..
  2014
  Loganadan Ps :- கனி இது, சுவை இது,
  2014
  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan:- Nice
  2014
  இராஜ. தியாகராஜன்:- கேபிஎஸ் பாடிய வரிகள் நினைவுக்கு வருகின்றன. பாவலனுக்கு ஒவ்வொரு முறை எண்ணத்தில் உருவாகி, வரிவடிவம் கொள்ளும், பாடலென்றும் புதியதே!
  2014

  மறுமொழி

 17. கோவை கவி
  ஏப் 01, 2019 @ 09:53:08

  அமீரக சஞ்சிகையில் வெளியானது தை- 2015ல்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: