286. பரிமாணம் – பிரமாணம்.

4202462447_c7f65b0196

பரிமாணம் – பிரமாணம்.

 

ஆர்வ மனம் ஆரோக்கியமுடன்

தீர்மானங்கள் தீட்டுகிறது திறனுடன்.

நிர்மாணிக்க வாழ்நாளை முழுமையுடன்

நிர்மாணிக்கிறோம் ஊக்கமுறுதியுடன்.

 

தீர்மானித்தலும் நல் தீர்வை

நிர்ணயித்தலும் கூர்ப்புடை சுயகாரியம்.

தீர்மானத் திட்டம் தீட்டலில்

தீர்கிறது சிலரது சீவியம்.

 

தீர்மானம் வருடா வருடம்

நிர்ணயிப்பதும், வாழும் முறையால்

தீர்மானமாவதும் சுய பிரயத்தனம்.

தீர்வு செயலாகுதல் பிரதானம்.

 

தீர்மானப் பரிமாணம் உகந்திடில்

சேர்மானமாகிறது செயற் திட்டத்தில்.

நேர்மைக் கருத்து குமுகாயத்தில்

கீர்த்தியடையும் வெகு ஈர்ப்புடன்.

 

கரைகாணா ஆளுமைச் சிதறல்

வரையிடும் பயணப் பரிமாணத்தில்.

தரையில் நின்று நிதானித்தல்

புரையற்ற பயண அடித்தளம்.

 

(பரிமாணம் – அளவு.  பிரமாணம் -விதி, ஆதாரம்.

புரை – குற்றம்.  வரையிடும் – எல்லையிடும்.

கூர்ப்புடன் – கூர்மை, அறிவுநுட்பம். குமுகாயத்தில் – சமுதாயத்தில் )

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

2012.

 

 

last line

Advertisements

21 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. GOPALAKRISHNAN. VAI
  செப் 30, 2013 @ 06:37:54

  அருமையான ஆக்கம். பகிர்வுக்கு நன்றிகள்.

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  செப் 30, 2013 @ 08:31:31

  வரிகள் அருமை…

  இனிய வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 3. Rajarajeswari jaghamani
  செப் 30, 2013 @ 14:17:49

  கரைகாணா ஆளுமைச் சிதறல்

  வரையிடும் பயணப் பரிமாணத்தில்.

  தரையில் நின்று நிதானித்தல்

  புரையற்ற பயண அடித்தளம்.

  பரிமாணமும் , பிரமாணமும் வியக்கவைத்தது..
  பாராட்டுக்கள்..!

  மறுமொழி

 4. karanthaijayakumar
  செப் 30, 2013 @ 14:41:25

  அருமை

  மறுமொழி

 5. கீதமஞ்சரி
  அக் 01, 2013 @ 10:28:36

  \\தீர்மானித்தலும் நல் தீர்வை

  நிர்ணயித்தலும் கூர்ப்புடை சுயகாரியம்.

  தீர்மானத் திட்டம் தீட்டலில்

  தீர்கிறது சிலரது சீவியம்.\\

  உண்மைதான். வாழ்நாள் முழுவதுமே திட்டங்கள் தீட்டுவதிலேயே கழிந்துவிட்டால் செயலாற்றுவது எக்காலம்? வரிக்கு வரி ஆமோதிக்கிறேன். அருமையான வாழ்வியல் திட்டத்தை அமோகமாக எடுத்துரைக்கும் சிறப்பான ஆக்கம். பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 6. கோமதி அரசு
  அக் 01, 2013 @ 19:30:43

  கரைகாணா ஆளுமைச் சிதறல்

  வரையிடும் பயணப் பரிமாணத்தில்.

  தரையில் நின்று நிதானித்தல்

  புரையற்ற பயண அடித்தளம்.//
  நன்றாக சொன்னீர்கள். நிதானம் மிக அவசியம்.
  நன்றாக இருக்கிறது.கவிதை.

  மறுமொழி

 7. வெற்றிவேல்
  அக் 04, 2013 @ 07:09:17

  அழகான வரிகள்…
  திட்டமும் செயலும் முக்கியமே…

  மறுமொழி

 8. கோவை கவி
  அக் 04, 2013 @ 14:55:57

  IN FB:-
  P.v. Govindarajan:-
  அருமை.கடல் கடந்து எங்கு சென்று வாழ்ந்தாலும், நம் தாய்மொழியாகிய தமிழையும், தமிழரது பண்பாட்டையும் என்றும் மறவாமல் இருப்போம்.
  Vetha ELangathilakam :_
  மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு.
  இறையாசி நிறையட்டும்.

  மறுமொழி

 9. sujatha
  அக் 04, 2013 @ 20:04:10

  தீர்மானப் பரிமாணம் உகந்திடில்

  சேர்மானமாகிறது செயற் திட்டத்தில்.

  நேர்மைக் கருத்து குமுகாயத்தில்

  கீர்த்தியடையும் வெகு ஈர்ப்புடன்.
  அருமை……நம்மையும் சிந்திக்கவைக்கின்றது. பரிமாணம்….பரிமாணம் வாழ்க்கைக்கு அவசியம். வாழ்த்துக்கள்
  “கவிதாயினி வேதா“

  மறுமொழி

 10. சக்தி சக்திதாசன்
  அக் 07, 2013 @ 03:41:34

  அன்பினிய சகோதரி,
  பரிமாணத்தைப் பற்றி சிந்தை கவரும் அன்னைத் தமிழில் அழகுற கவிபாடிய உங்களௌக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

 11. கோவை கவி
  அக் 09, 2013 @ 06:25:35

  கருத்திற்கு மிக்க நன்றி சகோதரா மகிழ்ந்தேன். சக்தி சக்திதாசன்.

  மறுமொழி

 12. பழனிவேல்
  அக் 21, 2013 @ 10:16:37

  அழகான வரிகள்.
  அருமையான ஆக்கம்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: