287. போதுமெனும் வரை…

538377_530272506991682_30645066_n

போதுமெனும் வரை…

 

காலவெள்ளமடித்துச் செல்லும்

கோல வண்ணம் இளமை.

பார்த்திருக்கப் பறந்திடுமிளமை

பாதுகாத்தல் நம் கடமை.

பாதுகாக்கலாம் மனது வைத்தால்

போதுமெனும்வரை நீ நினைத்தால்.

கேது ராகுவெனும் சேம்பலையழித்து

தோது வழியைத் தொடரலாம்.

 

தீதுடை மனவிருள் விலக்கி

தோதற்ற சினத்தை நொறுக்கி

பாதகச் சிந்தனைப் பாறையுடைக்கலாம்.

சாதக எண்ணக் கேணியிலிறங்கலாம்.

அகவையொன்றொன்றாயகல

மிக அனுபவம் திரள

உகவை கொள்ளல் உவப்பு

உள்ளம் உடலிற்குச் சிறப்பு.

 

தப்பாமலுடற் பயிற்சியூக்கம்

அப்பாலு முண்டி சுருக்கம்.

முப்பாற்சுவையில் அகவிதழ்

தெப்பமாய் இன்பத்தில் நனையும்.

சிரிப்பலை பாதம் தழுவும்.

பூரிப்பலையாலங்கம் இளமையில்

செப்பமுடை அட்சயபாத்திரமாகும்.

செறிவாய்  இளமை காக்கப் படும்.

 

பா ஆக்கம் பா வானதி. வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்

18-2-2002

இதனையொட்டிய இன்னொரு கவிதை இணைப்பு இதோ!…   

https://kovaikkavi.wordpress.com/2011/08/02/2-%e0%ae%b5%e0%ae%9a%e0%af%80%e0%ae%95%e0%ae%b0-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/

 

This was made by Neelamegam. in Fb :–

1383465_688812311148636_2101845313_n

 

 

12720-22coloured

 

Advertisements

25 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  அக் 03, 2013 @ 08:47:58

  900 hundred..!!!!!!! Pathivu……

  மறுமொழி

 2. GOPALAKRISHNAN. VAI
  அக் 03, 2013 @ 08:59:34

  இளமை பற்றிய கவிதையைக் கேட்கவே இன்பாய் உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  மறுமொழி

 3. GOPALAKRISHNAN. VAI
  அக் 03, 2013 @ 09:01:48

  900 hundred..!!!!!!! Pathivu……

  ஆஹா, அதற்குள் 900 பதிவுகளா ? மிகச்சிறப்பான சாதனை தான்.

  மனம் நிறைந்த இனிய அன்பான நல்வாழ்த்துகள்.

  விரைவில் 1000 ஆகட்டும். அதற்கும் வாழ்த்துகள். ;)))))

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  அக் 03, 2013 @ 09:36:48

  ஆகா… மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்…

  மறுமொழி

 5. திண்டுக்கல் தனபாலன்
  அக் 03, 2013 @ 09:37:30

  மிக்க சந்தோசம் சகோதரி… பாராட்டுக்கள்..

  மறுமொழி

 6. Rajarajeswari jaghamani
  அக் 03, 2013 @ 10:58:59

  பூரிப்பலையாலங்கம் இளமையில்

  செப்பமுடை அட்சயபாத்திரமாகும்.

  செறிவாய் இளமை காக்கப் படும்.

  அழகான வரிகள்..பாராட்டுக்கள்

  மறுமொழி

 7. Rajarajeswari jaghamani
  அக் 03, 2013 @ 10:59:51

  900 வது பதிவுக்கு இனிய வாழ்த்துகள்..

  மறுமொழி

 8. ramani
  அக் 03, 2013 @ 11:17:54

  இளமை தொடர சூட்சுமம் சொல்லும்
  அருமையான பதிவுக்கும்
  900 மாவது பதிவுக்கும் எமது
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 9. ranjani135
  அக் 03, 2013 @ 11:22:19

  இளமையைக் காக்க நல்லதொரு வழியை சொல்லியிருக்கிறீர்கள், சகோதரி. 900 மாவது பதிவிற்கு வாழ்த்துகள்!

  மறுமொழி

 10. கோமதி அரசு
  அக் 03, 2013 @ 14:24:53

  பூரிப்பலையாலங்கம் இளமையில்

  செப்பமுடை அட்சயபாத்திரமாகும்.

  செறிவாய் இளமை காக்கப் படும்.//
  நன்றாக சொன்னீர்கள்.
  மனமகிழ்ச்சி எப்போதும் இளமை காக்கும், கவலைதானே ஆளை உருகுலைக்கும்..
  900 மாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோதரி.
  மேலும் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 11. Karanthai Jayakumar
  அக் 04, 2013 @ 23:51:40

  900 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் சகோதரியாரே.
  தொடருங்கள், தொடர்கிறோம்

  மறுமொழி

 12. sujatha
  அக் 06, 2013 @ 06:34:16

  காலவெள்ளமடித்துச் செல்லும்

  கோல வண்ணம் இளமை.

  பார்த்திருக்கப் பறந்திடுமிளமை

  பாதுகாத்தல் நம் கடமை.

  பாதுகாக்கலாம் மனது வைத்தால்

  போதுமெனும்வரை நீ நினைத்தால்.

  கேது ராகுவெனும் சேம்பலையழித்து

  தோது வழியைத் தொடரலாம்.
  உடல் அழகு ஆரோக்யத்தின் அடித்தளம். பாதுகாக்கும் வரையில்
  ஆரோக்யத்திற்கு அழகு. அருமை….வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டியவை. வாழ்த்துக்கள்!!! “கவிதாயினி வேதா“

  மறுமொழி

 13. கோவை கவி
  அக் 09, 2013 @ 06:50:35

  வாழ்த்திற்கு கருத்திற்கும் மிக்க நன்றி SUJATHA
  மகிழ்ந்தேன்.

  மறுமொழி

 14. கோவை கவி
  அக் 13, 2013 @ 05:42:15

  IN FB:-
  முத்து பாலகன் likes this..

  முத்து பாலகன்:- ஹா ஹா ஹா இளமைக்காக எத்தனைத் துறவுகள்….
  Vetha ELangathilakam:- mikka nanry.

  மறுமொழி

 15. பழனிவேல்
  அக் 21, 2013 @ 10:19:59

  “போதுமெனும் வரை…”

  “900 hundred..!!!!!!! Pathivu……”

  900 பதிவுக்கான தலைப்பு மிக அருமை.
  மனம் நிறைந்த பணி தொடரட்டும்…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: