39. புரிந்துணர்வு.

2017 – 4 –  14

tamil-new-year-wishes-2016

பூக்காரி கவிதைகள் to முத்தமிழ்க்களம்

முத்தமிழ்க்களம் குழுமத்தில் இடம்பெற்ற ஏப்ரல் மாதத்திற்கான கவிதைப் போட்டியில் பாராட்டுச் சான்றிதழ் பெறுபவர் கவிதாயினி
Vetha langathilakam

 புரிந்துணர்வு
===================


அன்பு அமைதி புரிந்துணர்வின் ஊஞ்சலாம்.
தென்பு தரும் வாழ்வின் காரணமாம்.
கன்னல் இல்லறம் புரிந்துணர்வின் அன்படை.
மன்னிப்பு விட்டுக் கொடுத்தலின் அடிப்படை.

பரிவு நெஞ்சத்தின் அறிவு விரிந்து
சொரியும் உறவே புரிந்த உணர்வது.
சரியான சுய உணர்வு அனுசரிப்பது.
செரிக்கும் பக்குவம் புரிந்துணர்வுச் சிம்மாசனம்.

தரிக்கும் இசைவு, பகிர்வு, இணக்கம்,
சிரிக்குமுடன்பாடு, இளகிய மனப் பொருத்தம்.
சரியாது தாங்கும் தந்தையின் தோளும்
மரிக்காத தாய்மையணர்வும் ஆனந்தப் புரிந்துணர்வே.

நாடுகளின் முனனேற்றம், குடிகளின் முன்னேற்றம்
ஏடுகளில்; ஆவணமாகும் நற் புரிந்துணர்வால்.
காடுகளைப் பேணினால் இயற்கை மகிழ்ந்து
ஈடு செய்யும் மழையாம் கொடையால்.

ஓன்றை யொன்று புரிந்து ஈடுகட்டல்
நன்றான பிரதிபலனாம் புரிந்துணர்வுப் புத்தாண்டே!
அன்றி அனைத்தும் எதிர்மறை கேடாம்!
அழிவான சரியுமெரியுமுணர்வின்றி வரவேற்போம் புத்தாண்டை

P1040865

  புரிந்துணர்வு.

 

வெளியுலக முதலுறவு அம்மா

துளியுதிரத் தொடர்புறவு அப்பா.

வழிமுழுதும் இரு உறவும் தப்பாது

மொழியோடு உரு தருமே ஒப்பேது.

 

முனிவோடு முயன்று நம் தனிமையை

கனிவோடு தவிர்த்திடும் நல் அக்கறையாய்

இனிய உறவாம் உடன் பிறப்புகளை

இணைத்தனரிருவரும் எம்மின்பக் கூட்டுறவை.

 

உழைப்பு, ஊக்கம், உதிரம் எமக்காய்

உணர்ந்து உவப்பாய் அன்பாய் உதிர்த்தனர்.

உன்னத நற்பெயரை அவருக்காய் உலகில்

உணர்ந்து நாம் உயர்வாய்க் கொடுக்கலாம்.

 

பெற்றவர் மகிழ்வே பிள்ளைகள் மகிழ்வு

பிள்ளைகள் மகிழ்வே பெற்றவர் மகிழ்வு

என்ப துணர்ந்தால் இருபக்க வாழ்வும்

அன்புலக சொர்க்கமாய் இவ்வுலகில் குவியுமே!

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

1-8-2004.

 

 

floral-divider_9_lg236

Advertisements

24 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. இளமதி
  அக் 10, 2013 @ 07:23:45

  புரிந்துணர்வெனப் புரியவைத்த நல்லுறவன்றோ இது!…

  அருமை உங்கள் கவிதை!

  வாழ்த்துக்கள் சகோதரி!

  மறுமொழி

 2. இராய. செல்லப்பா.
  அக் 10, 2013 @ 07:41:08

  ஆம். இரு பக்கமும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவு காட்டி வாழும் வாழ்க்கையே அமைதி தரும் வாழ்க்கையாகும்.

  Typed with Panini Keypad

  மறுமொழி

 3. GOPALAKRISHNAN. VAI
  அக் 10, 2013 @ 07:41:59

  படத்தேர்வும் ஆக்கமும் அருமை.

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  அக் 10, 2013 @ 07:50:22

  அருமை… உண்மை… வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 5. Rajarajeswari jaghamani
  அக் 10, 2013 @ 09:28:30

  பெற்றவர் மகிழ்வே பிள்ளைகள் மகிழ்வு

  பிள்ளைகள் மகிழ்வே பெற்றவர் மகிழ்வு

  என்ப துணர்ந்தால் இருபக்க வாழ்வும்

  அன்புலக சொர்க்கமாய் இவ்வுலகில் குவியுமே!

  அழகான புரிந்துணர்வு..!

  மறுமொழி

 6. கோமதி அரசு
  அக் 10, 2013 @ 11:56:52

  பெற்றவர் மகிழ்வே பிள்ளைகள் மகிழ்வு

  பிள்ளைகள் மகிழ்வே பெற்றவர் மகிழ்வு

  என்ப துணர்ந்தால் இருபக்க வாழ்வும்

  அன்புலக சொர்க்கமாய் இவ்வுலகில் குவியுமே!//

  ஆம்,உண்மை.
  புரிந்துண்ர்வு இருந்தால் சொர்க்கம் தான்.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 7. ranjani135
  அக் 11, 2013 @ 08:01:30

  ஒருவரையொருவர் புரிந்து கொண்டால் உறவுகள் இனிக்கும்.
  நல்ல கவிதை வரிகள்.
  வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 8. அ.பாண்டியன்
  அக் 11, 2013 @ 18:23:35

  அழகான வரிகள் ஆழமான புரிதல்கள். சிறப்பான வரிகளுக்கு நன்றி.

  மறுமொழி

 9. மஞ்சுபாஷிணி
  அக் 12, 2013 @ 08:53:13

  எளிய வரிகள் தான் நீங்கள் இட்டது வேதாம்மா.. ஆனால் அதில் எத்தனை ஆழ்ந்த கருத்து. அம்மா அப்பாவின் அன்பு எப்போதுமே எதிர்ப்பார்ப்பில்லாத அன்பாக இருப்பதால் தான் பிள்ளைகள் நிம்மதியாக தான் விரும்பியதை பெற முடிகிறது பெற்றோரிடமிருந்து. அதே அன்பை பிள்ளைகள் வளர்ந்து தனக்கென்று ஒரு குடும்பம் ஆனப்பின் பெற்றோரிடம் பகிர்ந்தார்கள் என்றால் இரு மனதுக்கும் இடையே இருக்கும் புரிந்துணர்வை ரசிக்க இயலும். ஆனால் அப்படி இல்லாமல் தன் நலத்துக்காக மட்டுமே சிந்திக்கும் பிள்ளைகளின் செயலால் பெற்றோருக்கு ஏற்படும் மன வேதனைகள்… மிக அற்புதமான வரிகளில் எத்தனை அழகான ஒரு வாழ்வுக்கு ஆதாரமான விஷயத்தை சொல்லிட்டீங்க. படத்தில் இருக்கும் பேரக்குழந்தையின் தொடுதல் மொழி உங்க மனதுக்கு ஸ்பரிசத்தில் உணர்த்துகிறது தன் அன்பை… அற்புதம் வேதாம்மா… அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.

  மறுமொழி

 10. sujatha
  அக் 13, 2013 @ 17:30:11

  பெற்றவர் மகிழ்வே பிள்ளைகள் மகிழ்வு

  பிள்ளைகள் மகிழ்வே பெற்றவர் மகிழ்வு

  என்ப துணர்ந்தால் இருபக்க வாழ்வும்

  அன்புலக சொர்க்கமாய் இவ்வுலகில் குவியுமே!
  அருமை…… புரிந்துணர்வு இருக்கும் போது அன்பையும் புரிகின்றோம். வாழ்த்துக்கள்“ கவிதாயினி வேதா“

  மறுமொழி

 11. பழனிவேல்
  அக் 21, 2013 @ 10:40:29

  “பெற்றவர் மகிழ்வே பிள்ளைகள் மகிழ்வு
  பிள்ளைகள் மகிழ்வே பெற்றவர் மகிழ்வு
  என்ப துணர்ந்தால் இருபக்க வாழ்வும்
  அன்புலக சொர்க்கமாய் இவ்வுலகில் குவியுமே!”

  அழமான கருத்து.
  அழகாய் சொன்னீர்கள்..
  அருமை.

  மறுமொழி

 12. sasikala
  அக் 28, 2013 @ 08:24:36

  புரிதல் இல்லாமல் தான் எத்தனை எத்தனை குடும்பங்களில் பிரிவு வேதனை அழகாக சொன்னீர்கள். படமும் அழகு உங்கள் பேரன் மற்றும் உங்கள் கை விரல்கள் சரியா?

  மறுமொழி

 13. கோவை கவி
  ஏப் 14, 2017 @ 09:45:49

  Sujatha Anton :- தரிக்கும் இசைவு, பகிர்வு, இணக்கம்,
  சிரிக்குமுடன்பாடு, இளகிய மனப் பொருத்தம்.
  சரியாது தாங்கும் தந்தையின் தோளும்…மரிக்காத தாய்மையணர்வும் ஆனந்தப் புரிந்துணர்வே
  அருமையான தமிழ் உணர்வு கலந்த வரிகள்!!! வளர்க தமிழ்ப்பணி!!
  17 April 2016 at 11:22

  .

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: