288. அதிர்வுகள்.

484846_10200669553838847_1171911655_n

அதிர்வுகள்.

 

ஓன்றோடொன்று மோதும் உரசல்கள்

நின்றோடும் பக்க விளைவுகள் அதிர்வுகள்.

இன்ப அதிர்வுகள் கிரியா ஊக்கிகள்.

இசைகேடாம் ஒலியதிர்வு கர்ண கடூரம்.

சிந்தனையதிர்வு உதிர்ந்தால் சித்தப் பிரமை

விந்தை உடலதிர்வு உதிர்ந்தால் மரணம்!

இதய அதிர்வின்றே லுடலியக்க மில்லை

இரத்த நாளத் துடிப்புத் தடமுமில்லை.

 

உரத்த சிந்தனையதிர்வு உலகச் செயற்பாடு.

பரத்தும் அறிவின்றேல் சிறப்புக் குறைபாடு.

இறக்கும் நினைவுசில அதிர்வுச்  சம்பவத்தால்

திறக்கும் மறு அதிர்வுப் பரிகாரத்தால்.

பட்டுணரும் சம்பவ அதிர்வால் கவிஞர்கள்

கொட்டிப் பரத்துவார் கவி வரிகளால்.

அளவற்ற அதிர்வால் ஆபத்து முண்டு

உள உடல் சேதமுருக் கொண்டு.

 

மேளத்து அதிர்வு பலவகைத் தாளம்.

மேகத்து அதிர்வு இடி முழக்கம்.

இடியின் அதிர்வு மின்னல் ஒளிர்வு

அடியின் அதிர்வு மனக்கிலி யுணர்வு.

காற்றினதிர்வால் நிலப் பொருள் சாயும்.

ஆற்றி னதிர்வால் கரைகள் கரையும்.

ஆத்மார்த்தச் சிரிப்பு ஆனந்த அதிர்வு.

ஆறுதல் தருமந்த அமைதிப் பரப்பு.

 

அதிர்வால் பதட்டம், குளப்பம், கோபம்

அதிர்வை அடக்கும் ஆழ்ந்த தியானம்.

பிறக்கும் காத லதிர்வு காமமாகும்.

சிறக்கும் காமவதிர்வு உயிர்ப் படையலாகும்.

அறிவுச் செயற்பாட்டி லனுபவம் குதிர்வு.

புதியவைகள் அதிசயங்கள் நாளும் பிறப்பு.

உதிக்கின்ற அனுபவத்தால் வாழ்க்கை ஒளிர்வு

கதிர் பரப்பும் முதிர் ஞான உணர்வு.

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

19-10-2004.

 

( 14-11-2004 மலேசிய செம்பருத்தி இதழில்.

19-10-2004ல் ரி.ஆர்.ரி தமிழ் அலையில்.

27-6-2010ல் இலண்டன் தமிழ் வானொலியில் வெளியான கவிதை. இன்று மாற்றத்துடன்.)

 

 

11497627-vintage-dividers-and-borders-set-for-ornate-and-decoration

 

Advertisements

23 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
    அக் 12, 2013 @ 09:00:16

    வணக்கம்
    சகோதரி

    சிந்தனையதிர்வு உதிர்ந்தால் சித்தப் பிரமை
    விந்தை உடலதிர்வு உதிர்ந்தால் மரணம்!
    இதய அதிர்வின்றே லுடலியக்க மில்லை
    இரத்த நாளத் துடிப்புத் தடமுமில்லை

    கவிதையின் வரிகள் சிந்திக்க வைக்கிறது அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    மறுமொழி

  2. GOPALAKRISHNAN. VAI
    அக் 12, 2013 @ 09:29:26

    மிகவும் அதிர்வளித்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    மறுமொழி

  3. ranjani135
    அக் 12, 2013 @ 09:52:46

    படமே அதிர வைக்கிறதே!
    ஒவ்வொரு அதிர்விலும் ஒவ்வொரு பின்விளைவுகள்.//ஆத்மார்த்தச் சிரிப்பு ஆனந்த அதிர்வு.// ரசித்த வரிகள்.
    பாராட்டுகள்.

    மறுமொழி

    • கோவை கவி
      அக் 19, 2013 @ 06:22:27

      மிக மகிழ்வும் நன்றியும் சகோதரி ரஞ்சனி தங்கள் கருத்திற்கு.
      தங்கள் ரசனைக்கு மிக மகிழ்ந்தேன்.
      இறையாசி நிறையட்டும்.

      மறுமொழி

  4. Karanthai Jayakumar
    அக் 12, 2013 @ 10:29:09

    ஒவ்வொரு அதிர்வும் அருமை.

    மறுமொழி

  5. கோமதி அரசு
    அக் 12, 2013 @ 10:49:55

    அறிவுச் செயற்பாட்டி லனுபவம் குதிர்வு.

    புதியவைகள் அதிசயங்கள் நாளும் பிறப்பு.

    உதிக்கின்ற அனுபவத்தால் வாழ்க்கை ஒளிர்வு

    கதிர் பரப்பும் முதிர் ஞான உணர்வு.//

    அதிர்வுகள் அருமை.
    அதிர்வுகள்முதிர்ந்து ஞான உணர்வாய் மலரட்டும் எங்கும்.!
    வாழ்த்துக்கள் சகோதரி.

    மறுமொழி

  6. திண்டுக்கல் தனபாலன்
    அக் 12, 2013 @ 11:25:16

    அருமையான அதிர்வுகள்… படத் தேர்வும்…!

    வாழ்த்துக்கள் சகோதரி…

    மறுமொழி

  7. ramani
    அக் 12, 2013 @ 12:54:47

    ஆழ்மான சிந்தனையுடன் கூடிய
    அற்புதப் பதிவு
    எம்முள்ளும் பெரும் அதிர்வை
    ஏற்படுத்திப்போனது தங்கள் பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த
    நல்வாழ்த்துக்கள்

    மறுமொழி

  8. Rajarajeswari jaghamani
    அக் 12, 2013 @ 12:58:14

    ஆத்மார்த்தச் சிரிப்பு ஆனந்த அதிர்வு.

    ஆறுதல் தருமந்த அமைதிப் பரப்பு.

    ஆனந்தப்பகிர்வுகள் அருமை..பாராட்டுக்கள்..!

    மறுமொழி

  9. மகேந்திரன்
    அக் 12, 2013 @ 14:35:03

    நெஞ்சில் ஆத்ம அதிர்வை
    உண்டாக்குகிறது கவிவரிகள் வேதம்மா…

    மறுமொழி

  10. தி தமிழ் இளங்கோ
    அக் 12, 2013 @ 17:55:25

    அதிர்வுகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். அதிர்வே உலகின் இயக்கம் என்று எடுத்துச் சொன்ன கவிதை.

    மறுமொழி

  11. பழனிவேல்
    அக் 21, 2013 @ 10:29:02

    அழகிய ஆக்கம்.
    அதற்கேற்ற படம்.

    அருமை.

    மறுமொழி

  12. கோவை கவி
    அக் 15, 2017 @ 09:06:36

    Jalaja Ragunathan:- super vetha
    15 October 2013 at 12:24 ·

    Vetha Langathilakam :- Jalaja என்ன சத்தமே காணோமே!….mikka nanry..
    15 October 2013 at 20:59 ·

    Verona Sharmila :- உரத்த சிந்தனையதிர்வு உலகச் செயற்பாடு.
    பரத்தும் அறிவின்றேல் சிறப்புக் குறைபாடு. ..<3
    22 October 2013 at 13:20

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: