289. பாடு படு.

65840_1718588212570_6804996_n

பாடு படு.

 

உழைத்துப் பாடு! உற்சாகப் படு!

உன்னத செயற்பாடு நற் பயன்பாடு.

உத்தம குணப்பாடு உதாரணக் கோடு!

உணர்வுக் கட்டுப்பாடு நல்வினைப்பாடு.

உன்னுயர் அனுபவ நிலைப்பாடு

உயர்த்தும் நல் லறிவுக்கோடு.

உவர்ப்பான சோம்பல் குறைபாடு.

உறங்கும் உற்சாகம் உடைத்தோடு.

 

உலகவழக்கோடு உரிமையாய் உறவாடு.

உதட்டோடு உண்மையாய் உலாப்போடு.

உரையாடு உணர்வின் உவப்போடு.

உடைந்திடும் ஒழுக்கம் தீவினைப்பாடு.

உன் மதிமயக்கம் காரியக் கேடு

உதாசீன உளப்பாடு உறவுக்கேடு.

உடற்கொழுப்பு கரைந்திட உறுதிப்படு.

உச்சிமோந்து தாயுளத்தோடு ஆசிகொடு.

 

 

 

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

11-9-2005.

 

 

line3

25 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  அக் 16, 2013 @ 07:13:00

  வணக்கம்
  சகோதரி

  ரசித்தேன் கவிதை அருமை வாழ்த்துக்கள்…சகோதரி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 2. GOPALAKRISHNAN. VAI
  அக் 16, 2013 @ 07:58:24

  அருமையான ஆக்கம். பகிர்வுக்கு நன்றிகள்.

  என் நேற்றைய வெளியீடான 4 பகுதிகளுக்கும் வந்து கருத்தளிக்க நேரமில்லை என்பது போல என் முதல் பதிவின் பின்னூட்டத்தில் சொல்லியுள்ளீர்கள்.

  மீதி 3 பகுதிகளிலும் வெறும் படங்கள் மட்டுமே.

  படிப்பதற்கு ஒன்றும் அதிக விஷயங்கள் இருக்காது.

  மேலும் தங்கள் பெயர் வெளியாகியுள்ள பகுதி-2 ஐ மட்டுமாவது பாருங்கள். இணைப்பு இதோ:

  http://gopu1949.blogspot.in/2013/10/65-2-4.html

  அன்புடன் VGK

  மறுமொழி

 3. ranjani135
  அக் 16, 2013 @ 08:58:05

  பாடு – படு இரண்டு சொற்களை வைத்துக்கொண்டு கவிதையில் வித்தை காட்டியுள்ளீர்கள்,சகோதரி.ஒவ்வொரு வரியையும் ரசித்தேன்.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 19, 2013 @ 17:21:36

   இப்படி வித்தை காட்ட எனக்குப் பிடிக்கும் சகோதரி.
   கவிதையை வார்த்தை விளையாட்டு என்றும் கூறுவதுண்டு.
   உங்கள் இனிய கருத்திற்கு மிகுந்த நன்றி.
   மகிழ்ந்தேன்.

   மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  அக் 16, 2013 @ 09:22:05

  ஆகா… ரசித்துப் படித்தேன்… அருமை அருமை… வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 5. Rajarajeswari jaghamani
  அக் 16, 2013 @ 11:54:37

  உலகவழக்கோடு உரிமையாய் உறவாடு.

  உதட்டோடு உண்மையாய் உலாப்போடு.

  உரையாடு உணர்வின் உவப்போடு.

  உகப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

  மறுமொழி

 6. கோமதி அரசு
  அக் 16, 2013 @ 14:33:19

  உதாசீன உளப்பாடு உறவுக்கேடு.

  உடற்கொழுப்பு கரைந்திட உறுதிப்படு.

  உச்சிமோந்து தாயுளத்தோடு ஆசிகொடு.//
  அருமையான கருத்துக்களை கொண்ட கவிதை அருமை.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 7. Karanthai Jayakumar
  அக் 16, 2013 @ 15:13:02

  ஆகா
  அருமை
  ரசித்தேன்
  சுவைத்தேன்

  மறுமொழி

 8. ramani
  அக் 16, 2013 @ 16:16:30

  ஆழமான கருத்துடன்
  அற்புதமான ஆக்கம்
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 9. கவிஞா் கி. பாரதிதாசன்
  அக் 16, 2013 @ 17:11:55

  வணக்கம்!

  உழைத்துப் பாடு கவி..கண்டேன்!
  உயா்வைச் சூடும் நிலை..கொண்டேன்!
  இழைத்துச் செய்த சிலைபோல
  எழுதும் கவிதை எழில்கண்டேன்!
  குழைத்துக் குழைத்துக் குளிர்தமிழைக்
  கொடுக்கும் ஆற்றல் ஓங்குகவே!
  தழைத்து வாழ்க கவிவேதா
  தமிழ்போல் வாழ்க பல்லாண்டே!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  மறுமொழி

 10. கவிஞர் இராய.செல்லப்பா (இமயத்தலைவன்)
  அக் 17, 2013 @ 01:38:00

  நல்ல கருத்துள்ள கவிதை. சுவையாக இருக்கிறது.

  மறுமொழி

 11. மகேந்திரன்
  அக் 17, 2013 @ 14:27:33

  உண்டு கொழுக்காது
  உழைத்து பாடுபடு என
  இயல்பாக உரைக்கும்
  இனிய கவிதை வேதாம்மா…

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 19, 2013 @ 17:29:16

   வாருங்கள் சகோதரரே மகேந்திரன் தங்கள் இனிய கருத்திற்கு மிக மிக நன்றியும், மகிழ்ச்சியும்.
   இறையாசி நிறையட்டும்

   மறுமொழி

 12. sujatha
  அக் 20, 2013 @ 06:26:31

  உலகவழக்கோடு உரிமையாய் உறவாடு.

  உதட்டோடு உண்மையாய் உலாப்போடு.

  உரையாடு உணர்வின் உவப்போடு.
  அருமை…….உறவில் பரந்தமனம் விரிகின்று. வாழ்த்துக்கள்!!! “கவிதாயினி வேதா“

  மறுமொழி

 13. கோவை கவி
  அக் 17, 2017 @ 08:19:47

  சரவண பாரதி :- என்
  முதல் வகுப்பிற்கு சென்று வந்தேன்
  மீண்டும் ஒருமுறை !
  மிக்க நன்றி ! தமிழே !
  19 October 2013 at 13:19 ·
  Verona Sharmil:- a உணர்வுக் கட்டுப்பாடு நல்வினைப்பாடு.
  உன்னுயர் அனுபவ நிலைப்பாடு
  உயர்த்தும் நல் லறிவுக்கோடு. அருமை..
  22 October 2013 at 13:18 ·

  Jeya Pathmananthan:- nice kavithai
  18 October 2013 at 10:19 ·

  கவிஞா் கி. பாரதிதாசன்
  ஒக் 16, 2013 @ 17:11:55 [Edit]

  வணக்கம்!

  உழைத்துப் பாடு கவி..கண்டேன்!
  உயா்வைச் சூடும் நிலை..கொண்டேன்!
  இழைத்துச் செய்த சிலைபோல
  எழுதும் கவிதை எழில்கண்டேன்!
  குழைத்துக் குழைத்துக் குளிர்தமிழைக்
  கொடுக்கும் ஆற்றல் ஓங்குகவே!
  தழைத்து வாழ்க கவிவேதா
  தமிழ்போல் வாழ்க பல்லாண்டே!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: