21. ஓன்றுக்கு ஒன்று.

TwoLorenzOrbits

 ஓன்றுக்கு ஒன்று.

 

ஒரு விதிக்குள் அடங்கல் என்று

இரு புனித நதிகளின் சங்கமமென்று

பெரும் உடல்நல முடிவிதுவென்று

உருவான எழுதாத சட்டமன்று.

 

பதித்தனர் திலமிடும் வார்த்தைகள்

ஒருத்திக்கு ஒருவன், ஒருவனுக்கொருத்தி.

திருத்தச் செயலுடையோருடன் பொருத்தம்.

விருத்தியுளப் பங்காளியுடன் மிகப்பொருத்தம்.

 

உருத்து உண்டொரு நல்லுரிமைக்கு.

யாருக்கு வெறுப்பு, மறுப்புமில்லை.

சேருமிரு பொருந்திய மனங்களிற்கு

ஒருவனிற்கு ஒருத்தி, ஒருத்திக்கொருவன்.

 

வருத்தம் தினம் தரும் வன்முறையாளருடன்

திருத்தவியலாத ஒரு மனச்சீக்காளியுடன்

பொருத்தமற்ற பொல்லாத பங்காளியுடன்

அருத்தமில்லா அமில வார்த்தையிது.

 

 

பா ஆக்கம் பா வானதி  வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

22-8-2005

divider1

23 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. GOPALAKRISHNAN. VAI
  அக் 17, 2013 @ 13:45:11

  ஒன்றுக்கு ஒன்று சளைக்காத சலிக்காத படைப்பு. அருமை. பாராட்டுக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 17, 2013 @ 13:53:50

   மிக நன்றி ஐயா உடன் கருத்திற்கு.
   (நான் களைத்து விட்டேன்.
   ஓரு மாதிரி தமிழ் மணத்தில் இலக்கம் 39ல் வந்தேன்.
   மறுபடி மளமளவென ஏறி 60ல் வந்து நிற்கிறது.
   நான் களைத்து விட்டேன் தான்.)

   மறுமொழி

 2. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  அக் 17, 2013 @ 13:49:09

  வணக்கம்
  சகோதரி

  பதிவு அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 17, 2013 @ 13:56:23

   ரூபன் இன்னும் ஏற்றி முடியவில்லை…
   இன்னும் ரமிழ் 10 இன்லிக்கு போட வேணும்.
   உடன் கருத்திற்கு மிக்க நன்றிடன் மகிழ்வும் சகோதரா.

   மறுமொழி

 3. இளமதி
  அக் 17, 2013 @ 14:19:52

  ஒன்றுக்கு ஒன்று உண்மைதான் உணரும்வரை..

  அருமை! வாழ்த்துக்கள் சகோதரி!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 17, 2013 @ 14:41:23

   இக்கவிதை ஊடறு டொட் கொம் இணையத்தளத்தில் 2005ல் வந்தது.(பிரசுரமானது.)
   நன்றி சகோதரி இளமதி தங்கள் இனிய கருத்திற்கு மிக நன்றி. மகிழ்ந்தேன்.

   மறுமொழி

 4. மகேந்திரன்
  அக் 17, 2013 @ 14:21:40

  பூவிற்கு மணம் போல…
  பாலுக்கு சுவைபோல…
  ஒருவனுக்கு ஒருத்தியாய்
  ஒருத்திகொருவனாய்
  ஒன்றுக்கு ஒன்றாய்
  பிணைந்த இல்லறம் நன்று…

  அழகான கவிதை வேதாம்மா…

  மறுமொழி

 5. திண்டுக்கல் தனபாலன்
  அக் 17, 2013 @ 14:39:25

  அருமை… வாழ்த்துக்கள் சகோதரி…

  தலைப்பு “ஒன்றுக்கு ஒன்று” என்று வர வேண்டுமோ…?

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 17, 2013 @ 14:44:34

   இல்லை ஒருத்திக்கு ஒருவன் அல்லது ஒருவனுக்கு ஒருத்தி என்றும் வரலாம். இது இப்படி 2005ல் ஊடறுவில் வந்தது. அப்படியே போட்டேன். நன்றி டி.டி கருத்திற்கு நல்வரவு.

   மறுமொழி

 6. Karanthai Jayakumar
  அக் 17, 2013 @ 14:50:19

  ///திருத்தவியலாத ஒரு மனச்சீக்காளியுடன்

  பொருத்தமற்ற பொல்லாத பங்காளியுடன்///
  அனுபவ வரிகள் சகோதரியாரே

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 21, 2013 @ 09:00:01

   ஆம் சகோதரா எத்தனை விடயங்கள் உலகில் நடக்கிறது.. !!!
   தங்கள் உணர்ந்த வரிகளிற்கு மிக்க நன்றி.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 7. கோமதி அரசு
  அக் 17, 2013 @ 19:15:48

  ஒன்றுக்கு ஒன்று அருமையான கவிதை.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 8. கவியாழி கண்ணதாசன்
  அக் 17, 2013 @ 21:41:12

  உண்மைதான் நன்று

  மறுமொழி

 9. வெற்றிவேல்
  அக் 18, 2013 @ 04:42:41

  புரிந்துகொள்ளும் வரை கஷ்டம் தான்…

  அழகான கவிதை…

  மறுமொழி

 10. Rajarajeswari jaghamani
  அக் 18, 2013 @ 06:16:42

  பதித்தனர் திலமிடும் வார்த்தைகள்

  ஒருத்திக்கு ஒருவன், ஒருவனுக்கொருத்தி.

  திருத்தச் செயலுடையோருடன் பொருத்தம்.

  விருத்தியுளப் பங்காளியுடன் மிகப்பொருத்தம்.

  சளைக்காத அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  மறுமொழி

 11. அ.பாண்டியன்
  அக் 19, 2013 @ 05:53:23

  அருமையான வரிகள் சகோதரி. இன்றைய நிலையில் தேவையான ஒன்றும். நல்ல சிந்தனைக்கு நன்றீங்க. தாமதமான வருகைக்கு மன்னிக்கவும். சந்திப்போம் சகோதரி. நன்றி.

  மறுமொழி

 12. sujatha
  அக் 23, 2013 @ 14:20:58

  ஒரு விதிக்குள் அடங்கல் என்று

  இரு புனித நதிகளின் சங்கமமென்று

  பெரும் உடல்நல முடிவிதுவென்று

  உருவான எழுதாத சட்டமன்று.
  யாவும் மனிதன் தனக்குத்தானே போட்ட முடிச்சு. நாமாக திருந்தும்போது அடுத்தவர்க்கு எடுத்துக்காட்டு. அருமை…..வளர்க
  தமிழ்!!!!!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: