290. உறவிற்கு முதலாய்

adam-and-eve

உறவிற்கு முதலாய்

 

உறவிற்கு முதலாய் ஆணும் பெண்ணும்

திறவுகோலாய் உலகில் உருவாக்கம்.

துறவு அல்ல துணையோடு சந்ததிச்

சிறகு விரித்தனர் ஆதாம் ஏவாள்.

 

உரமான சந்ததிக்கு உறவுத் தேவைகள்

சரவிளக்காகிப் பெருகி உயர்ந்தன உயர்ந்தன.

சாரமிகு சுக துக்கச் சுயதேவைகள்

சாதிப்பதில் காலச் சக்கரச் சுழற்சி.

 

உறவிற்கு முதலாய் உள்ளத்து உண்மை,

உரிமை அன்பு, உதவும் நெஞ்சு,

உற்சாக உள்ளம் உவப்பான உறவை

உரமாய்ப் பிணைத்து உன்னதம் காட்டும்.

 

உறவிற்கு முதலாய் ஆன்ம நிம்மதி.

கறக்கும் பணமோ பலரின் நிம்மதி.

துறக்கும் சடப் பொருளால் மனிதம்

மறந்து பிறக்கும் நிம்மதி பிராணவாயுவாகாது.

 

வெட்ட வெளியில் தன் சிறகடிக்கும்

சிட்டுக் குருவியும் உறவிற்கு முதலாய்

கொட்டும் தீனி பொறுக்கும் நிம்மதி

எட்டும் மகிழ்வே உறவிற்கு முதலாய்.

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

21-8-2005.

 

straight line

 

 

 

23 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. GOPALAKRISHNAN. VAI
  அக் 20, 2013 @ 07:17:10

  ’உறவுக்கு முதலாய்’ காட்டியுள்ள படம் தேவைதானோ என நான் நினைத்தேன். பிறகு சிந்தித்தேன்.

  கொடிய விஷமுள்ள பாம்புக்கே பழம் அளித்து கருணை காட்டும் தாயுள்ளம் கொண்டவளே பெண் என்பதைப் புரிய வைக்கும் படமாக உள்ளது., 😉

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 20, 2013 @ 07:22:45

   ஐயா எனக்கும் பிடிக்கவில்லைப் படம்.
   ஓம் என்று போடவும் எண்ணினேன் அனைத்தும் அதில் தொடங்குவதால்.
   பிறகும் பார்த்தவற்றில் இதுவே ஓரளவு நல்லது. அதனால் போட்டேன்.
   இப்போதும் திருப்தியற்றே உள்ளேன் .
   மிக்க நன்றி ஐயா.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  அக் 20, 2013 @ 07:40:11

  வித்தியாசமான சிந்தனை… பாராட்டுக்கள் சகோதரி…!

  மறுமொழி

 3. இளமதி
  அக் 20, 2013 @ 10:03:58

  வித்தியாசமான சிந்தனை… மிகச் சிறப்பு!

  //உறவிற்கு முதலாய் உள்ளத்து உண்மை,

  உரிமை அன்பு, உதவும் நெஞ்சு,

  உற்சாக உள்ளம் உவப்பான உறவை

  உரமாய்ப் பிணைத்து உன்னதம் காட்டும்.//

  என்னைக் கவர்ந்த வரிகள்!

  வாழ்த்துக்கள் சகோதரி!

  மறுமொழி

 4. ra,mani
  அக் 20, 2013 @ 11:18:29

  ஆதிமுதல் உறவு தொடங்கி உறவின் நீட்சியை
  நேர்த்தியாய்ச் சொன்னவிதம் அருமை
  சிகரமாய கடைசி வரி மிக மிக அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 5. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  அக் 20, 2013 @ 11:26:53

  வணக்கம்
  சகோதரி

  ஒரு வித்தியாசமான படைப்பு ஒவ்வொரு வரிகளும் கருத்தாழம் மிக்கவை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 6. Dr.M.K.Muruganandan
  அக் 20, 2013 @ 12:00:28

  வித்தியாசமான படைப்பு

  “..துறக்கும் சடப் பொருளால் மனிதம்
  மறந்து பிறக்கும் நிம்மதி பிராணவாயுவாகாது…”
  தெளிவான ஆழமான வரிகள்

  மறுமொழி

 7. Mani Kannaiyan
  அக் 20, 2013 @ 13:25:09

  //உறவிற்கு முதலாய் ஆணும் பெண்ணும்// சரி அவ்வாறென்றால் அதன் பின் வந்த நாம் அனைவரும் சகோதர உறவல்லவா பின் ஏன் மதவாதமும் பிடிவாதமும்?

  மறுமொழி

 8. kowsy
  அக் 20, 2013 @ 17:54:45

  துறக்கும் சடப் பொருளால் மனிதம்

  மறந்து பிறக்கும் நிம்மதி பிராணவாயுவாகாது.

  சிறப்பு வரிகள்

  மறுமொழி

 9. மகேந்திரன்
  அக் 20, 2013 @ 20:43:26

  உறவுகள் மேம்பட..
  கருத்தில் கொள்ளவேண்டிய
  இனிய கவிதை வேதாம்மா…

  மறுமொழி

 10. Karanthai Jayakumar
  அக் 21, 2013 @ 00:42:55

  வித்தியாசமான சிந்தனை. நன்றி

  மறுமொழி

 11. கோமதி அரசு
  அக் 21, 2013 @ 11:37:49

  உறவிற்கு முதலாய் உள்ளத்து உண்மை,

  உரிமை அன்பு, உதவும் நெஞ்சு,

  உற்சாக உள்ளம் உவப்பான உறவை

  உரமாய்ப் பிணைத்து உன்னதம் காட்டும்.//

  அருமை
  உறவின் உன்னதம்.

  மறுமொழி

 12. கோவை கவி
  அக் 22, 2017 @ 07:43:35

  Sakthi Sakthithasan:- அன்பினிய சகோதரி , அருமையான கவிதை . உலகின் மூலத்தின் ஆழத்தை அழகாய் வெளிப்படுத்தும் இனிய தமிழாலாபனையோடு சேர்ந்த கவிதை
  24 October 2013 at 12:14 ·

  சிறீ சிறீஸ்கந்தராஜா:- “உறவிற்கு முதலாய் ஆணும் பெண்ணும்
  திறவுகோலாய் உலகில் உருவாக்கம்.
  துறவு அல்ல துணையோடு சந்ததிச்

  சிறகு விரித்தனர் ஆதாம் ஏவாள்!””.
  *********************** அருமை! வாழ்த்துக்கள் அம்மா!!
  24 October 2013 at 17:46 ·

  Verona Sharmila:- உறவிற்கு முதலாய் உள்ளத்து உண்மை,
  உரிமை அன்பு, உதவும் நெஞ்சு,
  உற்சாக உள்ளம் உவப்பான உறவை
  உரமாய்ப் பிணைத்து உன்னதம் காட்டும்… அருமை
  26 October 2013 at 06:13 ·

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: