291. சுக்கானாகும் நல்லறிவு.

praanaayaamam

சுக்கானாகும் நல்லறிவு.

அறிவின் ஒளியகலச் சுடர் வீசும்
முறிவற்ற சுடர் முகத்தினிலும் வீசும்!
செறிவோடு இலையிட்ட உணவாகிப் பிறரிற்கும்
நெறியோடு பசியாற்றும் நிறைந்த அறிவாம்.

கொடு! கொடுத்தாலது வெகு புண்ணியமாகும்!
எடு! மனமுதிர்வில் மறுபடி யுரமாகும்!
படுக்குமிலை, புல் இற்றுப்போ யுரமாகும்.
அடுத்துக் கெடுத்தலிலுமிது வெகு உயர்வு!

ஒருவரிற்குக் கடத்து மறிவு பரந்து,
ஒரு குடும்பம் சமூகத்திற்காய் விரிவது,
பெரும் வழக்காகு மிப் பூலோகத்தில்.
தருக்குடன் தனக்குள் சுருளல் அறிவன்று.

சுகந்த மலராய் மணம் வீசுமறிவு,
சுவைக்கும் தேனா யினிக்கு மறிவு,
சுகிர்த குணம் தரும் நல்லறிவு
சுதந்திரம் நிறை நல்லறிவு சுக்கானாகும்!

(சுகிர்த – நற்குணம்)

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
22.10.2013.

sunburst

Advertisements

18 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. GOPALAKRISHNAN. VAI
  அக் 22, 2013 @ 10:34:29

  //சுகந்த மலராய் மணம் வீசுமறிவு,
  சுவைக்கும் தேனா யினிக்கு மறிவு//

  அருமை. பாராட்டுக்கள்.

  மறுமொழி

 2. Rajarajeswari jaghamani
  அக் 22, 2013 @ 12:15:00

  சுகந்த மலராய் மணம் வீசுமறிவு,
  சுவைக்கும் தேனா யினிக்கு மறிவு,
  சுகிர்த குணம் தரும் நல்லறிவு
  சுதந்திரம் நிறை நல்லறிவு சுக்கானாகும்!

  சுகிர்தமான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  அக் 22, 2013 @ 12:57:46

  அழகிய அருமையான சொல்லாடல்… ரசித்தேன்… வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 4. மகேந்திரன்
  அக் 22, 2013 @ 14:07:21

  நாளை எனும் நாட்களை
  நன்முறையில் கடத்திட..
  அறிவார்ந்தோர் சபைதனில்
  வீறுநடை போட்டிட…
  நல்லறிவை வளர்த்துக்கொள்
  அதுவே
  நமைச் செலுத்தும் சுக்கானாகும்..
  அழகிய வாழ்வியல் கவிதை வேதாம்மா…

  மறுமொழி

 5. கோமதி அரசு
  அக் 22, 2013 @ 14:32:36

  சுகந்த மலராய் மணம் வீசுமறிவு,
  சுவைக்கும் தேனா யினிக்கு மறிவு,
  சுகிர்த குணம் தரும் நல்லறிவு
  சுதந்திரம் நிறை நல்லறிவு சுக்கானாகும்!//

  அருமையான கவிதை.
  பாராட்டுக்கள்.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 6. வெற்றிவேல்
  அக் 22, 2013 @ 15:03:25

  சுகந்த மலராய் மணம் வீசுமறிவு,
  சுவைக்கும் தேனா யினிக்கு மறிவு,
  சுகிர்த குணம் தரும் நல்லறிவு
  சுதந்திரம் நிறை நல்லறிவு சுக்கானாகும்!…..

  அழகான கவிதை…தேர்ந்த சொல்லாடல்…. பாராட்டுகள்…

  மறுமொழி

 7. Mrs.Mano Saminathan
  அக் 23, 2013 @ 06:21:12

  சுகந்த மலராய், சுவைக்கும் தேனாய், நற்குணங்களை அள்ளித்தரும் நல்லறிவு என்றும் வாழ்க்கைக்கு சுக்கானாய் வழி காட்டும் என்ற அழகிய கவிதை தந்தமைக்கு இனிய வாழ்த்துக்கள்!!

  மறுமொழி

 8. Karanthai Jayakumar
  அக் 23, 2013 @ 13:12:39

  அறியாத பல சொற்கள் அறிந்தேன்
  அருமை
  நன்றி

  மறுமொழி

 9. sujatha
  அக் 28, 2013 @ 13:41:23

  அறிவின் ஒளியகலச் சுடர் வீசும்

  முறிவற்ற சுடர் முகத்தினிலும் வீசும்!

  செறிவோடு இலையிட்ட உணவாகிப்

  பிறரிற்கும் நெறியோடு பசியாற்றும் நிறைந்த அறிவாம்.
  அருமை…..அத்தனை வரிகளும் அறிவிற்கு விருந்தான கவிநயம்.
  வாழ்த்துக்கள்!!!!!!

  மறுமொழி

 10. கோவை கவி
  அக் 28, 2013 @ 15:58:03

  அன்புடை கருத்திற்கு மகிழ்ந்தேன்.
  மனமார்ந்த நன்றியுரியதாகுக

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: