25. முருகா

Muruga88[1]-----m

அழகான மயிலேறி ஆறுபடை வீட்டினிலே
அருள் முகம் காட்டும் முருகா
அன்பர்கள் மனமிரங்க ஞானப் பழமாக
அறிந்து கொண்ட முருகா!

வளமாக எமது தேசம் வாழ
குளமாக ஆனந்தம் பொங்கி வழிய
உளமார அருட்பார்வை தாராய்
தளமாக அறிவினைத்தாராய்!

என்றும் இளமையான அழகு முருகா
வென்று நம் தமிழ் அழகுற
நன்று அருட் பார்வை வீசாய்!
குன்றில் குடி கொண்ட முருகா!

முத்துத் தீவை மொத்தமாய் மாற்றி
சொர்க்கத் தீவாய் ஆக்கித் தருவாய்!
சொக்கநாதர் செல்வனே முருகா! நீ
தக்கது அறிவாய் அழகு முருகா!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
24-10-2013

anjali-2

29 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  அக் 24, 2013 @ 08:37:44

  /// வளமாக எமது தேசம் வாழ
  குளமாக ஆனந்தம் பொங்கி வழிய
  உளமார அருட்பார்வை தாராய்
  தளமாக அறிவினைத்தாராய்! ///

  அருமை… முருகா…. முருகா….

  வாழ்த்துக்கள் சகோதரி….

  மறுமொழி

 2. Dr.M.K.Muruganandan
  அக் 24, 2013 @ 09:24:56

  உங்கள் வேண்டுதல் பலிக்கட்டும்.
  “..முத்துத் தீவை மொத்தமாய் மாற்றி
  சொர்க்கத் தீவாய் ஆக்கித் தருவாய்!..”
  அருமையான கவிதை

  மறுமொழி

 3. GOPALAKRISHNAN. VAI
  அக் 24, 2013 @ 09:47:00

  முருகனைப்போலவே அழகான ஆக்கம். பாராட்டுக்கள்.

  மறுமொழி

 4. Rajarajeswari jaghamani
  அக் 24, 2013 @ 10:19:40

  வளமாக எமது தேசம் வாழ
  குளமாக ஆனந்தம் பொங்கி வழிய

  ஆனந்தமான ஆக்கம்..!

  மறுமொழி

 5. ra,mani
  அக் 24, 2013 @ 10:25:25

  தமிழ் என்றால் அழகுதான்
  முருகன் என்றாலும் அழகுதான்
  அழகின் மூலம் அழகைப் பாடிய
  இக்கவிதை மிக மிக அழகு
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 6. கோமதி அரசு
  அக் 24, 2013 @ 11:59:50

  வளமாக எமது தேசம் வாழ
  குளமாக ஆனந்தம் பொங்கி வழிய
  உளமார அருட்பார்வை தாராய்
  தளமாக அறிவினைத்தாராய்!//
  குளமாக ஆனந்தம் பொங்கி வழிய செய்வார் முருகன்.
  வாழ்க வளமுடன்.

  மறுமொழி

 7. தி தமிழ் இளங்கோ
  அக் 24, 2013 @ 12:07:11

  // முத்துத் தீவை மொத்தமாய் மாற்றி
  சொர்க்கத் தீவாய் ஆக்கித் தருவாய்!
  சொக்கநாதர் செல்வனே முருகா! நீ
  தக்கது அறிவாய் அழகு முருகா! //
  சகோதரியின் கனவு நனவாக வேண்டும். அதற்கு முருகள் அருல் புரிய வேண்டும்!

  மறுமொழி

 8. maathevi
  அக் 24, 2013 @ 12:58:42

  அழகன் முருகனிடம் வேண்டுவோம். வாழ்த்துகள்.

  மறுமொழி

 9. கவியாழி கண்ணதாசன்
  அக் 24, 2013 @ 13:05:04

  அருமை… முருகா…. முருகா….

  மறுமொழி

 10. bagawanjee
  அக் 24, 2013 @ 17:38:53

  வேண்டுதலை நிறைவேற்று முருகா !

  மறுமொழி

 11. இளமதி
  அக் 24, 2013 @ 18:08:32

  முருகன் துதி மிக அருமை!

  அழகானவன் அன்பர்க்கினியன் ஆறுமுகவேலன்
  அடிதொழ நொடியில் வினை அகலுமே!
  எம் பிரார்த்தனைகள் பலிக்கட்டும்!
  வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 12. bganesh55
  அக் 25, 2013 @ 05:20:03

  அழகுத் தமிழ்க் கடவுளிடம் தன்னலமாய் வேண்டாமல் அனைவருக்காகவும் வேண்டிய உங்களின் கவி (என்றும்போல்) இனிமை; அருமை!

  மறுமொழி

 13. இரவின் புன்னகை- வெற்றிவேல்
  அக் 25, 2013 @ 16:57:20

  அழகான கவிதை…

  இனிமை…!

  மறுமொழி

 14. கோவை கவி
  அக் 29, 2013 @ 08:19:11

  இனிய சகோதரா (இரவின் புன்னகை- வெற்றிவேல் ) மிக மகிழ்ந்தேன்.
  தங்கள் கருத்திற்கு.
  இனிய நன்றி கூறுகிறேன்

  மறுமொழி

 15. sujatha
  நவ் 02, 2013 @ 08:04:52

  வளமாக எமது தேசம் வாழ

  குளமாக ஆனந்தம் பொங்கி வழிய

  உளமார அருட்பார்வை தாராய்

  தளமாக அறிவினைத்தாராய்!
  கரம் கூப்பி வேண்டுவோம். பாடலாக இசை அமைத்து தங்கள்
  வரிகளை பாடும் போதும் அருமையாக இருக்கும். அருமை…..வாழ்த்துக்கள்.!!!!!!

  மறுமொழி

 16. கோவை கவி
  அக் 29, 2014 @ 21:21:42

  Subajini Sriranjan :-
  மகிழ்ச்சி ,,,
  உங்கள் முருக கடவுள் பற்றிய பாடல்,, அருமை!!
  29-10-14

  மறுமொழி

 17. கோவை கவி
  அக் 31, 2017 @ 10:23:33

  Sakthi Sakthithasan:- அன்பினிய சகோதரி , ததித் தரும் முத்தித் திருநகை முத்துக் குமரனின் பெருமையைச் சாற்றும் இனிய கவிதை கண்டு அகமகிழ்ந்தேன். வெல்லட்டும் உங்கள் தமிழ். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்
  1 November 2013 at 10:55 ·

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: