40. இன்னுமெந்தன் காதில்…

amma

இன்னுமெந்தன் காதில்…

இன்னுமெந்தன் காதிலுங்கள் குரல்
பின்னுகிறது பழைமை வேதமாக!
இன்னுமெந்தன் கனவில் உருவம்
சின்னத்திரை போல் மின்னுகிறது!
இன்னும் நீங்கள் பூவுலகில்
பின்னும் நினைவோடு தானம்மா.

நீங்கள் இல்லையென்று எதற்காக
நானிங்கு கலங்க வேண்டும்!
நீங்களென்றும் என்னுள் தானம்மா
நான் மறந்தாலன்றோ விலகிட
நீங்களென்னை விட்டுப் போகவில்லை.
தேன் நினைவு கனவிலுமென்றும்

பொறுமையாம் பெருமாயுதம் தந்தீர்கள்
பண்பெனும் நடைவண்டியிற் பிடித்து
பக்குவமாய் நடை பயிற்றனீர்கள்
பாரில் நிமிர்ந்துள்ளேன் பெருமையாயின்று.
என் மனிதத்தின் சாவியே
என் அப்பாவுடன் நீங்களுமன்றோ!

விநாயகராய் உங்களைச் சுற்றினேன்
விளக்கமிகு வாழ்வுக்கனி யேந்தினேன்.
அன்னையர் தினமெனவொரு நாளேன்!
குன்றிடாத நினைவுகள் என்றுமே!
நன்றிகள் நவில்வது மென்றுமே
நான் எண்ணுவதும் என்றுமே.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
30-3-2003.

anjali-2

Advertisements

25 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  அக் 26, 2013 @ 09:16:13

  வணக்கம்
  சகோதரி

  பொறுமையாம் பெருமாயுதம் தந்தீர்கள்
  பண்பெனும் நடைவண்டியிற் பிடித்து
  பக்குவமாய் நடை பயிற்றனீர்கள்
  பாரில் நிமிர்ந்துள்ளேன் பெருமையாயின்று.
  என் மனிதத்தின் சாவியே
  என் அப்பாவுடன் நீங்களுமன்றோ

  உங்களைப்பெற்ற தெய்வங்களுக்கு இன்நாளில் நல்லகவி படைத்துள்ளிர்கள் வரிகள் அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 2. GOPALAKRISHNAN. VAI
  அக் 26, 2013 @ 09:28:13

  தாயின் நினைவலைகளை அழகாகப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  மறுமொழி

 3. தி தமிழ் இளங்கோ
  அக் 26, 2013 @ 11:46:06

  // நீங்களென்றும் என்னுள் தானம்மா
  நான் மறந்தாலன்றோ விலகிட
  நீங்களென்னை விட்டுப் போகவில்லை. //

  உருக்கமான நினைவேந்தல்! மீள் பதிவே என்றாலும் மீள முடியாத நினைவுகள்!

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  அக் 26, 2013 @ 13:08:50

  சிறப்பிற்கு சிறப்பு சேர்த்துள்ளீர்கள்… வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 5. அ.பாண்டியன்
  அக் 26, 2013 @ 13:32:33

  உருக்கமான கவிதை சகோதரி. இருப்பினும் தங்கள் உறுதி பாராட்டத்தக்கது //நீங்கள் இல்லையென்று எதற்காக
  நானிங்கு கலங்க வேண்டும்!// அடுத்த வரியில் அதற்கான காரணமும் அருமை சகோ.. பகிர்வுக்கு வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள்..

  மறுமொழி

 6. Rajarajeswari jaghamani
  அக் 26, 2013 @ 14:00:20

  நான் மறந்தாலன்றோ விலகிட
  நீங்களென்னை விட்டுப் போகவில்லை.
  தேன் நினைவு கனவிலுமென்றும்

  தாயாய் தங்கும் நினைவலைகள்..

  மறுமொழி

 7. கவிஞா் கி. பாரதிதாசன்
  அக் 26, 2013 @ 18:29:15

  வணக்கம்!

  தாயே எனப்போற்றித் தந்த கவிபடித்தேன்!
  வாயே மணக்கும் மலா்ந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  மறுமொழி

 8. கோமதி அரசு
  அக் 26, 2013 @ 20:17:30

  விநாயகராய் உங்களைச் சுற்றினேன்
  விளக்கமிகு வாழ்வுக்கனி யேந்தினேன்.
  அன்னையர் தினமெனவொரு நாளேன்!
  குன்றிடாத நினைவுகள் என்றுமே!
  நன்றிகள் நவில்வது மென்றுமே
  நான் எண்ணுவதும் என்றுமே.//
  தாயின் நினைவுகள் அருமை . அன்னையர் தினம் அன்று மட்டும் அல்ல ! என்றும் தாய்க்கு நன்றிகள்பல சொல்ல வேண்டும்.
  என்றும் நம்முடன் இருந்து வாழ்த்துவார் தாய்..
  வாழ்த்துக்கள் கவிதைக்கு.

  மறுமொழி

 9. ra,mani
  அக் 26, 2013 @ 23:37:17

  அற்புதமான கவிதை
  என்னுள்ளும் என் தாய் குறித்த
  நினைவுகளில் மூழ்கச் செய்து போனது
  மனம் கவர்ந்த கவிதை தந்தமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 10. Karanthai Jayakumar
  அக் 27, 2013 @ 05:31:10

  நம்மை இவ்வுலகிற்கு
  அழைத்து வந்தவர
  நம்மைத்
  தனியே விட்டுச்
  செல்லமாட்டார்
  என்றென்றும்
  உடனிருப்பார்
  கலங்க வேண்டாம்

  மறுமொழி

 11. mahalakshmivijayan
  அக் 28, 2013 @ 04:56:19

  அம்மாவுக்கு அழகான ஒரு கவிதை!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 31, 2013 @ 09:39:36

   மிக்க நன்றியும் மகிழ்வும் சகோதரி (M.V ) நல்ல கருத்திடலிற்கு.
   இனிய தீபாவளி நல் வாழ்த்து

   மறுமொழி

   • mahalakshmivijayan
    அக் 31, 2013 @ 09:51:40

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரி 🙂

 12. கீதமஞ்சரி
  அக் 30, 2013 @ 06:57:07

  நெகிழவைத்த நினைவலைகள்… அம்மாவுக்கு என் வந்தனம்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: