30. இலக்கியத் தமிழ் வளவு.

Elkkiya......

இலக்கியத் தமிழ் வளவு.

பசும்பாலைப் பக்குவமாய்க் காய்ச்சிப் பின்
பதமாய் ஆறிடப் பிரை சேர்க்கின்
பாகமாகும் தயிர் கடைந்து வெண்ணெயாக்கும்
பாங்கு நல்லிலக்கியத் தமிழ் வளவு.

நூற்திரிகளின் திரிப்பு கயிறெனும் பிறப்பு.
நுட்ப மனப்பகுப்பால் இலக்கியப் பிறப்பு.
நூலறிவின் நுணுக்க அலசல் விரிப்பு.
நுகர்ந்த அறிவுணர்வின் மூத்தோர் தொகுப்பு.

வாழ்வினால் பிறக்கும், வாழ்வை வளமாக்கும்
வானுயர் சிந்தனையால் மனம் பண்படும்.
அறிவு, உணர்வை ஆளுமையாக்கும் இலக்கியம்.
அரும்பொருட் சொல்லோசை நயமிகு இலக்கியம்.

உள்ளதை மனம் உணர்ந்து மொழியும்.
உள்ளங் கவரும் சொல்லழகு ரதம்.
பள்ளம் மேடு பாயுமகண்ட நீரோட்டம்.
உள்ளபடி இயங்கும் மானுட அறிவாயுதம்.

குமுகாயம் சீராக்கும் ஓரின அறிவாயுதம்.
குமுகாய நெளிவைத் தட்டித் தட்டி
குறை தீர்க்கும் மொழிச் செயற்பாடு.
குணம்தரு மிலக்கியத் தமிழ் வளவு.

(குமுகாயம் -சமூகம். பிரை – உறை மோர்)

பா ஆக்கம் பா வானதி. வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
4-1-2004.

pachchai line

18 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. GOPALAKRISHNAN. VAI
  அக் 27, 2013 @ 20:35:24

  இலக்கியத் தமிழ் வளவு.பற்றிய ஆக்கம் அருமை. பாராட்டுக்கள்.

  மறுமொழி

 2. கோவை கவி
  அக் 27, 2013 @ 20:35:43

  23-1-2006 காற்றுவெளி சஞ்சிகையில் (uk – Mullaiyamuthan) இக்கவிதை பிரசுரமானது. பல திருத்தங்களுடன் மீண்டும் இங்கு.

  மறுமொழி

 3. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  அக் 27, 2013 @ 23:13:09

  வணக்கம்
  சகோதரி

  காற்றுவெளி சஞ்சிகையில் உங்கள் படைப்பு வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 03, 2013 @ 21:49:26

   மிக்க நன்றி ரூபன் கருத்திற்கு.
   மனம் மிக மகிழ்ந்தேன்.
   நல்ல ஓரு கவி வரிக்கு கருத்துகள் பெரிதாக விழவில்லை.
   ஆச்சரியம் தான்.

   மறுமொழி

 4. அ.பாண்டியன்
  அக் 28, 2013 @ 02:04:44

  அழகான ஒரு ஆழ்ந்த பார்வையால் விளைந்த கவிவரிகள் இவை என்பது நன்கு விளங்குகிறது. உலகில் மொழிகளிலேயே தமிழில் உள்ள இலக்கியங்களே மிகவும் சிறந்தது என்பதே வெளிநாட்டவர்களே கூறிய கூற்று நினைவுக்கு வருகிறது. நல்லதொரு சிந்தனைக்கு வாழ்த்துகளுடன் கூடிய நன்றிகள் சகோதரி..

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 03, 2013 @ 21:50:17

   மிக்க நன்றி அ.பாண்டியன் கருத்திற்கு.
   மனம் மிக மகிழ்ந்தேன்.
   நல்ல ஓரு கவி வரிக்கு கருத்துகள் பெரிதாக விழவில்லை.
   ஆச்சரியம் தான்.

   மறுமொழி

 5. திண்டுக்கல் தனபாலன்
  அக் 28, 2013 @ 03:15:09

  வரிகள் மிகவும் அருமை… வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 6. கீதமஞ்சரி
  அக் 30, 2013 @ 06:55:46

  முதல் பத்தியே மனம் கொள்ளை கொண்டது. தமிழிலக்கிய வளவின் சிறப்பு பகரும் கவி வரிகளுக்கு மனமார்ந்த பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 7. sujatha
  நவ் 09, 2013 @ 06:24:52

  உள்ளங் கவரும் சொல்லழகு ரதம்.

  பள்ளம் மேடு பாயுமகண்ட நீரோட்டம்.

  உள்ளபடி இயங்கும் மானுட அறிவாயுதம்.

  குமுகாயம் சீராக்கும் ஓரின அறிவாயுதம்.
  அருமை….இலக்கியம் தமிழோடு இணையும் போநு அதன் சுவை
  தமிழமுதம். வாழ்த்துக்கள்.!!!!!!!!!

  மறுமொழி

 8. கிரேஸ்
  பிப் 21, 2014 @ 08:01:33

  ஆஹா..மிக அருமை…குணம்தரு மிலக்கியத் தமிழ் வளவு மகிழ்ச்சி தருகிறது…
  பிரை – உறைமோர் என்று அறிந்துகொண்டேன்…நன்றி!

  மறுமொழி

 9. கோவை கவி
  பிப் 20, 2016 @ 21:38:34

  You, Dharma Ktm and கனி ஸ்ரீ like this.

  Dharma Ktm :- arumai akka
  Unlike · Reply · 1 · 1 hr

  Vetha Langathilakam :- Thank you Dharma….
  Like · Reply · 20-2-16

  மறுமொழி

 10. ராசமோகன்
  செப் 05, 2016 @ 07:56:37

  தமிழ் நாட்டில் தமிழ் மக்களிடம் தங்கத்தமிழ் இல்லையென்று ஏங்கினேன் ! கடல் கடந்தும் தமிழ் வளர்கிறதே வளர்க தமிழ் தமிழ் பனி தொடருட்டும்!!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: