34. திருமண வாழ்த்து.

75526_682090118468040_23422310_n

பெறா மக்கள், மருமக்கள் திருமண வாழ்த்து.

அப்பப்பா அம்மப்பா திரு தர்மலிங்கம்
அம்மம்மா அப்பம்மா திருமதி திலகவதியினரின்
அருமைப் புதல்வி சுகிர்தா(ஆசை) திரு வித்தியானந்தனை
திருமணம் இணைக்கிறது 19.10.2013 ஓகுஸ் நகரில்.

கண்ணிற்கு மையிட்டு அமுதூட்டிப் பஞ்சணைக்
கட்டிலில் எம்மைக் கொஞ்சிக் குலாவி
கிளியாக எங்களை வளாத்தார் ஆசையம்மா
கிங்கிணியாய் நெஞ்சில் நிறையும் ஆசையத்தை சுகிர்தா.

நோயிலே மனம் வாடி மார்பிலும் தோளிலும்
தாயாகத் தாங்கியெம்மை இரவு பகலேந்தி
வாயாரப் பாடி, விளையாட்டுக் காட்டி
வாரிவாரி அன்பை இறைத்துப் பார்த்தீர்கள்!

சேர்ந்து சிரித்தோம், சோர்ந்திடாது நாளும்
பார்த்துப் பார்த்தெமைப் பாசமாக உருவாக்கினீர்கள்!
கோர்த்த இவ்வுறவு எம் பிறவி யோகம்!
பார்த்திடுங்கள் திருமணத்துணையே! ”ஆசையை” பக்குவமாக.

உன் பிறக்காத மழலைகள் எங்களையணைத்து
அன்புச் சிறகால் ஆதரவோடு விரல் பிடித்து
நீராட்டி வாசைன பூசி கரிசனையாய்
ஆராட்டியமைக்கு ”ஆசையே!” எமது நன்றி.

இழைந்தோடும் திருமண வாழ்வு சிறக்க
மழையாகப் பொழிகிறோம் எம் ஆசை வாழ்த்துகள்!
தழைத்தோங்கி அன்புடன் இன்பமாய் வாழ
அழைக்கிறோம் எங்கள் ”ஆசைக்கு” இறையாசி பெருக!

வானம் பூமி வாழ்த்த நீவிர் நீடூழி வாழ்க!
வாழ்க பல்லாண்டு!

வாழ்த்துவோர் உங்கள் பெறா மக்கள்,
மருமக்கள்.
ஓகுஸ், டென்மார்க்.

24 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. bagawanjee
  அக் 29, 2013 @ 07:29:46

  உங்கள் வாழ்த்துப்பா மொய்யும் செய்யாத மெய்யான சுகத்தை தம்பதியர்களுக்கு தந்து இருக்கும் !

  மறுமொழி

 2. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  அக் 29, 2013 @ 07:32:40

  வணக்கம்
  சகோதரி

  இனிய திருமண வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம் வாழ்க……வாழ்த்துவோம்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 3. இளமதி
  அக் 29, 2013 @ 07:37:48

  அழகிய வாழ்த்துப்பா!
  அருமை!

  மணமக்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 4. GOPALAKRISHNAN. VAI
  அக் 29, 2013 @ 07:47:00

  ஆக்கம் அருமை. அவர்களுக்கு என் நல்வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

  மறுமொழி

 5. திண்டுக்கல் தனபாலன்
  அக் 29, 2013 @ 08:04:42

  மணமக்களுக்கு இனிய வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 6. Rajarajeswari jaghamani
  அக் 29, 2013 @ 09:55:51

  இழைந்தோடும் திருமண வாழ்வு சிறக்க
  மழையாகப் பொழிகிறோம் எம் ஆசை வாழ்த்துகள்!
  தழைத்தோங்கி அன்புடன் இன்பமாய் வாழ
  அழைக்கிறோம் எங்கள் ”ஆசைக்கு” இறையாசி பெருக!

  இனிய வாழ்த்துகள்..!

  மறுமொழி

 7. ra,mani
  அக் 29, 2013 @ 11:14:32

  இழைந்தோடும் திருமண வாழ்வு சிறக்க
  மழையாகப் பொழிகிறோம் எம் ஆசை வாழ்த்துகள்!
  தழைத்தோங்கி அன்புடன் இன்பமாய் வாழ
  அழைக்கிறோம் எங்கள் ”ஆசைக்கு” இறையாசி பெருக!

  மாதிரியாக வைத்துக் கொள்ளத்தக்க
  அற்புதமான வாழ்த்துப் பா
  தமபதிகளுக்கு எம் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 8. கோமதி அரசு
  அக் 29, 2013 @ 11:57:22

  இழைந்தோடும் திருமண வாழ்வு சிறக்க
  மழையாகப் பொழிகிறோம் எம் ஆசை வாழ்த்துகள்!
  தழைத்தோங்கி அன்புடன் இன்பமாய் வாழ
  அழைக்கிறோம் எங்கள் ”ஆசைக்கு” இறையாசி பெருக!

  வானம் பூமி வாழ்த்த நீவிர் நீடூழி வாழ்க!
  வாழ்க பல்லாண்டு!//
  அருமையான வாழ்த்துபா.

  வாழ்த்துக்கள் மணமகளுக்கு..
  வாழ்க வளமுடன்.

  மறுமொழி

 9. அ.பாண்டியன்
  அக் 29, 2013 @ 12:38:18

  திருமணத் தம்பதியினருக்கு எனது அன்பு வாழ்த்துக்கள். எல்லா வளமும் பெற்று நலமோடு வாழ வாழ்த்துவோம். பகிர்வுக்கு நன்றி சகோதரி.

  மறுமொழி

 10. கீதமஞ்சரி
  அக் 30, 2013 @ 06:53:09

  அழகான வாழ்த்துப்பா… உள்ளத்தின் குதூகலத்தை வெளிப்படுத்துகின்றன கவி வரிகள். தம்பதியருக்கு என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

  மறுமொழி

 11. மகேந்திரன்
  அக் 30, 2013 @ 08:25:18

  என்னுடைய மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்களும்
  உரித்தாகட்டும் வேதாம்மா….

  மறுமொழி

 12. தி தமிழ் இளங்கோ
  அக் 31, 2013 @ 12:36:52

  ஒரு மனதாயினர் தோழி! இந்த திருமண மக்கள் என்றும் வாழி! – புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

  கவிதைக்கு பாராட்டு! உங்களுக்கு எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ( மேலே சொன்ன கருத்துரையை தங்கள் பதிவில் நேற்று முன்தினமே எழுதி இருந்தேன். தொழில்நுட்பம் காரணமாக ஏனோ பதிவாகவில்லை )

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: