24. ஆன்ற கலைகளிற்கு ஆராதனை.

625581_487087371346612_304887616_n

ஆன்ற கலைகளிற்கு ஆராதனை.

மூன்று தேவியரை மூலமாக்கி

ஆன்ற கலைகளின் வாசனை

ஊன்றி நிலைத்திட யாசனை

தோன்றியது பூசை ஆராதனை.

வீரதீரபராக்கிரமம் கல்வியுடன் சேர,

தூரம் போகாதிருக்க

சாரமுடை தூய பக்தி

வேருடன் வீரமாள துர்க்காவை

செல்வம் செல்லாது நிலைக்க

செல்வாக்கு அதனோ டிணைக்க

செல்லிடம்  இலட்சுமியைசேவிக்க

செலவிடும் நடு மூன்று தினங்கள்.

முல்லை மலர் தூவி

கல்வி கலைக்காய் கலைவாணியை

சொல்லிப் பணியும் இறுதி

வெல்லும் விசயதசமியின் நாட்கள்.

(செல்வாக்கு – புகழ்,மதிப்பு. செல்லிடம் – பலிக்குமிடம்.  ஆன்ற – மாட்சிமைப்பட்ட )

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

7-10-2013.

T – 30-9-2014

thiri

 

53. சத்தமிடா நித்தியங்கள்.

Rain1

 

சத்தமிடா நித்தியங்கள்.

 

 

மழை நீரிலழுந்தும் தவளையின் இரவு ராகம்

குழை நீரிற் சொட்டும் மழைநீரின் தாளம்

சளைக்காது கீச்சிடும் இராப்பூச்சி ரீங்காரம்

குழைந்து கலந்த சேற்று மண்வாசம்….

இழைந்து மனதில் இனிமையாய் ஆடும்.

நெல்லிக் கனியாய் ஆழச்சுவை ஊடாடும்

சொல்லி விளங்காத ஏக்க நிலை கூடும்.

அள்ளி அனுபவித்த மனம் மிக வாடும்.

உண்மைகள் சில சத்தமிடா நித்தியங்கள்.

ஊனில் கலந்த உன்னத அனுபவங்கள்.

தேன் கலந்த வாழ்வின் நினைவுச் சுவைகள்.

மண், வானோடு என்றும் மாறாத நித்தியங்கள்.

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

27-7-2001.

bar line

287. போதுமெனும் வரை…

538377_530272506991682_30645066_n

போதுமெனும் வரை…

 

காலவெள்ளமடித்துச் செல்லும்

கோல வண்ணம் இளமை.

பார்த்திருக்கப் பறந்திடுமிளமை

பாதுகாத்தல் நம் கடமை.

பாதுகாக்கலாம் மனது வைத்தால்

போதுமெனும்வரை நீ நினைத்தால்.

கேது ராகுவெனும் சேம்பலையழித்து

தோது வழியைத் தொடரலாம்.

 

தீதுடை மனவிருள் விலக்கி

தோதற்ற சினத்தை நொறுக்கி

பாதகச் சிந்தனைப் பாறையுடைக்கலாம்.

சாதக எண்ணக் கேணியிலிறங்கலாம்.

அகவையொன்றொன்றாயகல

மிக அனுபவம் திரள

உகவை கொள்ளல் உவப்பு

உள்ளம் உடலிற்குச் சிறப்பு.

 

தப்பாமலுடற் பயிற்சியூக்கம்

அப்பாலு முண்டி சுருக்கம்.

முப்பாற்சுவையில் அகவிதழ்

தெப்பமாய் இன்பத்தில் நனையும்.

சிரிப்பலை பாதம் தழுவும்.

பூரிப்பலையாலங்கம் இளமையில்

செப்பமுடை அட்சயபாத்திரமாகும்.

செறிவாய்  இளமை காக்கப் படும்.

 

பா ஆக்கம் பா வானதி. வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்

18-2-2002

இதனையொட்டிய இன்னொரு கவிதை இணைப்பு இதோ!…   

https://kovaikkavi.wordpress.com/2011/08/02/2-%e0%ae%b5%e0%ae%9a%e0%af%80%e0%ae%95%e0%ae%b0-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/

 

This was made by Neelamegam. in Fb :–

1383465_688812311148636_2101845313_n

 

 

12720-22coloured

 

Next Newer Entries