292. பிழையான எழுத்து நரகாசுரன்

-stamped

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

பிழையான எழுத்து நரகாசுரன்

தங்கத் தமிழ் எழுத்து
அங்கம் பிழையற எழுதுக!
சங்கத்தமிழ் புலம் பெயர்ந்தும்
ஓங்கியொளிரட்டும் தீப ஆவளியாக.

உழுத்த தமிழாக்காது எம்
எழுத்துப் பிழையெனும் நரகாசுரனின்
கழுத்து, கரம் துண்டாடுக!
இழுத்து வதைத்து அழிக்குக!

பங்கயம் மலர்ந்தது அன்ன
பங்கமின்றிப் பிழையற எழுதுக!
திங்களாகத் தமிழ் சிறக்க
மங்களத் தீபாவளி கொண்டாடுக!

எழுப்புக! உம் தமிழறிவை!
எழுந்திடுக! எழுத்தியல் கற்றிடுக!
எழுதுக பிழையற எழுதி
எழுந்தி டுக தமிழை உயர்த்த!

(அன்ன – போல)

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
1-11-2013.

Advertisements

38 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  நவ் 01, 2013 @ 23:18:33

  இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 2. Karanthai Jayakumar
  நவ் 02, 2013 @ 00:33:10

  உளங்கனிந்த இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 3. மகேந்திரன்
  நவ் 02, 2013 @ 01:59:22

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்
  மனம்கனிந்த இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள் வேதம்ம்மா..

  மறுமொழி

 4. GOPALAKRISHNAN. VAI
  நவ் 02, 2013 @ 02:04:29

  ஆக்கம் அருமை. வாழ்க தமிழ் ! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  மறுமொழி

 5. bganesh55
  நவ் 02, 2013 @ 02:19:28

  இனிய திருநாளில் மிக அவசியமான ஒன்றை சொல்லியிருக்கிறீர்கள்மா. எழுத்துப் பிழை அசுரன் அழிந்தால் கொண்டாடும் தீபாவளிக்கு அதிக சுவைதான்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!

  மறுமொழி

 6. Dr.M.K.Muruganandan
  நவ் 02, 2013 @ 02:38:18

  தீபத் திருநாளுக்கு ஏற்ற அருமையான கவிதை
  “..உழுத்த தமிழாக்காது எம்
  எழுத்துப் பிழையெனும் நரகாசுரனின்
  கழுத்து, கரம் துண்டாடுக!..”
  அத்தகைய தழிழுக்காக அனைவரும் முயல்வோம்.

  மறுமொழி

 7. Rajarajeswari jaghamani
  நவ் 02, 2013 @ 04:37:46

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்
  மனம்கனிந்த இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள் ..

  மறுமொழி

 8. அ. பாண்டியன்
  நவ் 02, 2013 @ 06:18:04

  அருமையான ஆக்கம் சகோதரி
  அன்பு சகோதரிக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

  மறுமொழி

 9. sujatha
  நவ் 02, 2013 @ 07:16:33

  நல்ல தமிழ் கற்கும் போது நாவில் தமிழும் தவழ்ந்திடும்…..
  எழுப்புக! உம் தமிழறிவை!

  எழுந்திடுக! எழுத்தியல் கற்றிடுக!

  எழுதுக பிழையற எழுதி

  எழுந்திடுக தமிழை உயர்த்த
  அருமை….அருமை…..வாழ்த்துக்கள் “கவிதாயினி வேதா“

  மறுமொழி

 10. kowsy
  நவ் 02, 2013 @ 07:41:31

  எழுப்புக! உம் தமிழறிவை!
  எழுந்திடுக! எழுத்தியல் கற்றிடுக!
  எழுதுக பிழையற எழுதி
  எழுந்தி டுக தமிழை உயர்த்த!
  குடும்பமாய்க் குதூகலித்து வெற்றியுடன் தீபத்திருநாள் கொண்டாடிட வாழ்த்துகிறேன்

  மறுமொழி

 11. தாரை கிட்டு
  நவ் 02, 2013 @ 09:09:33

  தமிழைப் பிழையற எழுதச் சொன்ன தாங்கள் “வாழ்த்துக்க”ளில் பிழை செய்து விட்டீர்களே அம்மா!

  மறுமொழி

 12. தி தமிழ் இளங்கோ
  நவ் 02, 2013 @ 09:17:14

  எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 13. Venkat
  நவ் 02, 2013 @ 14:00:08

  உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள்…..

  மறுமொழி

 14. yarlpavanan
  நவ் 02, 2013 @ 15:45:19

  சிறந்த பதிவிது.
  தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள் உரித்தாகட்டும்!

  மறுமொழி

 15. கோமதி அரசு
  நவ் 02, 2013 @ 18:40:58

  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 16. bharathidasan
  நவ் 02, 2013 @ 23:32:43

  இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
  ஆய கலைகள் அணிந்தொளிர! – மாயவனே!
  இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
  அன்பாம் அமுதை அளி!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  மறுமொழி

 17. இராய செல்லப்பா (இமயத்தலைவன்)
  நவ் 03, 2013 @ 01:02:25

  தீபாவளியன்று உருப்படியானதொரு சிந்தனை! எவ்வளவு கற்றாலும் இன்னும் கற்க ஏராளம் உண்டு ஒவ்வொரு மொழியிலும். அதிலும் தாய்மொழியைப் பொருத்தவரை ‘நமக்குத் தெரியாததா?’ என்ற மேலோட்டமான மனப்பாங்கு, நமது பிழைகளை அறியவொண்ணாது தடுத்துவிடுகிறது. அதை மீறி நாம் மேலெழுந்து மொழிப்பயிற்சியில் ஈடுபடவேண்டும். அவசியமான பதிவு. தீபாவளி வாழ்த்துக்கள்! – கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

  மறுமொழி

 18. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  நவ் 03, 2013 @ 12:28:04

  வணக்கம்
  சகோதரி

  கவிதையின் வரிகள் அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 19. சக்தி சக்திதாசன்
  நவ் 04, 2013 @ 15:07:39

  அன்பினிய சகோதரி , இனிய வாழ்த்துக்கள். அருமையான் கவிதை. அற்புதக் கண்ணோட்டம்
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: