11. தமிழில் குறும்பூ!…!……

mine 187

தமிழில் குறும்பூ!…!……

தமிழில் ஆண்பால் பெண்பால் என்று
அப்பப்பா – அப்பம்மா.
தாத்தா –பாட்டி
என வழங்குகிறது அனைவரும் அறிவர்.

குளப்பம் வராது தவிர்க்கச் செய்த ஏற்பாடாக
எங்கள் பேரனுக்கு அப்பப்பா, அப்பம்மா என்று எங்களை அழைக்கப் பழக்கினோம்.
தாயாரின் பெற்றோரைத் தாத்தா பாட்டி என்று அழைப்பார்.
நன்றாக என் கணவரை அப்பப்பா என்று அன்பொழுக அழைப்பார். அப்பம்மா என்பது சிறிது குறைவு தான், ஆனால் கணவரிலும் பார்க்க நன்கு என்னோடு பழகுவார். காரணம் அவரோடு நான் பழகுவது அதிக நேரம் தான்.
இப்படியிருக்க திடீரென ஒரு நாள் என்னை தாத்தி என்று அழைத்தார். எங்களிற்கு ஆச்சரியமான ஆச்சரியம்!
யாரும் சொல்லியும் கொடுக்கவில்லை. என்னைப் பார்த்து என்னைக் கூப்பிடுகிறார் தாத்தி என்று.
எங்கள் அனைவருக்கும் சிரிப்பான சிரிப்பு.
சமாளித்துக் கொண்டு சரி இப்போது கூப்பிடுங்கள் வளர மாறலாம் என்று விட்டு விட்டோம்.
நான் கூறுவது என்னவென்றால் அப்பம்மா கவிதை எழுதுகிறார் பேரனும் நன்கு இயற்றப் பழகுகிறார் என்று.
ஆகையால் அவர் கவிதை எழுதுகிறார் என்பேன்.
பின்னே என்ன!…தானாகவே ஒரு சொல் புதிதாகப் பெண் பாலில் தாத்தி…..என்று!

இது எப்பூடியிருக்கூ…..!!!!!!!!!………

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-11-2013.

straight line

one_partridge[1]-niram

(பேரனுடன் நான் பாடும் பாடல்.
வடிவாகக் கவனிப்பார்.
சிலவேளை உனக்கு வேற வேலையில்லைப் பாடு என்பது போல விளையாடுவார்.
நான் அவர் காதில் அதை விழுத்த வேண்டுமென்று பாடி முடிப்பேன்.
அவர் காதில் விழுத்துவார்)

ஒன்று எண்ணுவோம்

ஒன்று ஒன்று
ஒன்று என்று
இன்று எண்ணுவோம்
நன்று எண்ணுவோம்.

தலை ஒன்று
நெற்றி ஒன்று
மூக்கு ஒன்று
நாடி ஒன்று (ஒன்று என்று இன்று எண்ணுவோம்)

வாய் ஒன்று
கழுத்து ஒன்று.
வயிறு ஒன்று
முதுகு ஒன்று (ஒன்று என்று இன்று எண்ணுவோம்.)

அப்பா ஒன்று.
அம்மா ஒன்று.
வெற்றி ஒன்று.
பற்றுவோம் தொடர்ந்து. (ஒன்று என்று இன்று எண்ணுவோம்.).

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
29-10-13.

baby-items

28 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. GOPALAKRISHNAN. VAI
  நவ் 05, 2013 @ 19:59:25

  தாத்தாவின் பெண்பால் தாத்தி … அதுவும் அழகாகத்தான் உள்ளது. தங்கள் பேரனுக்கு என் பாராட்டுக்கள். மகிழ்ச்சிப் பகிர்வுக்கு நன்றிகள்.

  மறுமொழி

 2. பி.தமிழ் முகில்
  நவ் 05, 2013 @ 20:00:37

  மழலைகள் நமக்கு கற்றுத் தருவார்கள் பல விஷயங்களை.
  சிறுவனுக்கு வாழ்த்துகள்.

  மறுமொழி

 3. கோவை கவி
  நவ் 05, 2013 @ 22:44:26

  இப் பதிவை 5-11-13 இரவிலிருந்து தமிழ் மணத்தில் சேர்க்க முடியவில்லை.
  ஏதாவது தொழில் நுட்பப் பிரச்சனையா?

  மறுமொழி

 4. அ.பாண்டியன்
  நவ் 06, 2013 @ 02:23:00

  வணக்கம் சகோதரி.
  தாத்தி எனும் பெண்பால் சொல் அழகாகத் தான் இருக்கிறது. சின்ன குழந்தையின் வார்த்தை அல்லவா கண்டிப்பாக இனிக்கும். தங்கள் பேரன் கவிஞராக மட்டுமல்ல நல்ல மொழியறிஞராகவும் வருவார். அவருக்கு எனது அன்பான வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

  மறுமொழி

 5. Tamil Blogger
  நவ் 06, 2013 @ 09:22:14

  இனி தமிழ் பதிவாளர்களும் (Tamil Bloggers), ஆங்கில பதிவாளர்களுக்கு (English Bloggers) இணையாக வருமானம் பெற முடியும்.
  தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in ல் பதிவுசெய்து, Ad30days Network விளம்பரங்களை தங்கள் தலத்தில் காண்பிப்பதன் மூலம் மாதம் நிரந்திர வருமாணம் பெற முடியும்.

  தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே உங்கள் தளத்தை பதிவு செய்யுங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php .

  பதிவுசெய்துவது முற்றிலும் இலவசம் .

  வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம். ( Bank Transfer, Paypal)

  மறுமொழி

 6. Rajarajeswari jaghamani
  நவ் 06, 2013 @ 09:31:30

  குறும்பூ ரசிக்கவைத்தது..!

  மறுமொழி

 7. mahalakshmivijayan
  நவ் 07, 2013 @ 04:04:25

  கோவை கவியின் பேரன் என்றால் சும்மாவா!! சூப்பர் குட்டி பையா 🙂

  மறுமொழி

 8. yarlpavanan
  நவ் 07, 2013 @ 05:29:04

  ‘தாத்தி’ என்ற சொல் அமைந்தது சுவையானது.
  “இப்போது கூப்பிடுங்கள் வளர மாறலாம்” என்று விடுவது நல்லதல்ல. இப்போதே சரியான முறையை பிஞ்சுகளுக்குப் பழக்குவது நல்லது.

  மறுமொழி

 9. sasikala
  நவ் 07, 2013 @ 08:45:37

  ஆமாம் உங்க பெயர் சொல்ல பேரன் ஹஹ மிக்க மகிழ்ச்சிங்க.

  மறுமொழி

 10. கோமதி அரசு
  நவ் 07, 2013 @ 20:29:48

  தாத்திக்கு ஏற்ற பேரன். வாழ்த்துக்ககுள் பேரனுக்கு.

  மறுமொழி

 11. Kanagasundram Sundrakumar
  நவ் 08, 2013 @ 07:21:06

  தாத்தியும் நன்றாகத்தான் உள்ளது. நன்றி தாத்தி.

  மறுமொழி

 12. Kanagasundram Sundrakumar
  நவ் 08, 2013 @ 07:22:02

  தாத்தியும் நன்று. விடை பெரறுகிறேன் தாத்தி.

  மறுமொழி

 13. கோமதி அரசு
  டிசம்பர் 28, 2013 @ 01:21:59

  அன்பு சகோதரி, இந்த பதிவு இன்றைய வலைச்சரத்தில்.
  http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_28.html#comment-form

  5.தமிழில் குறும்பூ

  //அப்பா ஒன்று.
  அம்மா ஒன்று.
  வெற்றி ஒன்று.
  பற்றுவோம் தொடர்ந்து.//
  வழங்கியவர் :கோவை கவி.
  வலைத்தளம்: “வேதாவின் வலை”

  மறுமொழி

 14. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  டிசம்பர் 28, 2013 @ 01:44:01

  வணக்கம்
  இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 15. கோவை கவி
  நவ் 10, 2017 @ 11:24:44

  Sundrakumar Thanuja SUPER.I have already commented.
  10 November 2013 at 09:37 ·

  Naguleswarar Satha Chuttippayal! Kurummpuppayal!
  See translation
  10 November 2013 at 09:56 ·

  Vi Ji arumai sis…nalladhoru muyarchi…naamum edhavadhoru pudhumai padaippome..
  10 November 2013 at 10:57 ·

  Sakthi Sakthithasan அருமையான அனுபவம் சகோதரி. உங்களின் பேரனின் ஆற்றல் இப்பொழுதே துல்லியமாகத் தெரிகிறது.
  11 November 2013 at 17:00 ·

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: