21. இரண்டு எண்ணுவோம்.

number2mathcount

இரண்டு எண்ணுவோம்.

இரண்டு ஒன்றுகள்
இரண்டாகிறது சேர்ந்து.
முரண்டு பண்ணாது
இரண்டு எண்ணுவோம்.
உருண்டு பார்க்கிறது
இரண்டு கண்கள் (இனிதாயின்று இரண்டு எண்ணுவோம்.)

புரண்டு மூடும்
இரண்டு இமைகள்.
திரண்ட உடம்பில்
இரண்டு புருவங்கள்.
இரண்டு கன்னங்கள்.
இரண்டு காதுகள். (இனிதாயின்று இரண்டு எண்ணுவோம்.)

மிரண்டால் அணைக்க
இரண்டு கைகள்.
இரண்டெட்டு நடைக்கு
இரண்டு கால்கள்.
இரண்டு பேரிணைவு பெற்றோர்.
இரண்டிரண்டாய் எண்ணுவோம். (இரண்டு ஒன்றுகள் இரண்டாகிறது சேர்ந்து.)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
7-11-2013.

3367133-263573-vintage-digits-and-numbers-set-with-decorations

17 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  நவ் 07, 2013 @ 10:57:33

  வணக்கம்

  மனதை கவர்ந்த சிறுவர் பாடல் மிக அருமை வாழ்த்துக்கள்…
  பாடலுக்கு ஏற்ப படமும் அருமை…

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 2. கோமதி அரசு
  நவ் 07, 2013 @ 11:59:51

  மிரண்டால் அணைக்க
  இரண்டு கைகள்.
  இரண்டெட்டு நடைக்கு
  இரண்டு கால்கள்.
  இரண்டு பேரிணைவு பெற்றோர்.
  இரண்டிரண்டாய் எண்ணுவோம். (இரண்டு ஒன்றுகள் இரண்டாகிறது சேர்ந்து.)//
  அருமையான கவிதை.
  வெற்றிக்கு இப்படி அழகாய் எண்களை கவிதை பாடி சொல்லித் தர கிடைத்தது பாக்கியம்,மகிழ்ச்சி.

  மறுமொழி

 3. GOPALAKRISHNAN. VAI
  நவ் 07, 2013 @ 12:17:13

  ஆஹா !

  [ இரண்டே எழுத்துக்களில் என் பாராட்டும் ; ) ]

  மறுமொழி

 4. Rajarajeswari jaghamani
  நவ் 07, 2013 @ 12:41:14

  ஆக்கம் அருமை..!

  மறுமொழி

 5. பி.தமிழ் முகில்
  நவ் 08, 2013 @ 20:30:03

  அருமையான சிறுவர் பாடல் கவியே…

  மறுமொழி

 6. yarlpavanan
  நவ் 09, 2013 @ 13:26:37

  இரண்டு காதுகள் ஒரு கேட்டல்
  இரண்டு கண்கள் ஒரு பார்வை
  இரண்டு மூக்குத்துளை ஒரு மணத்தல்
  இரண்டு எண் தந்த
  ஓர் உண்மை – அந்த
  இரண்டை
  எங்க சின்னஞ் சிறுசுகளுக்கு
  நன்றாக ஊட்டியுள்ளீர்கள்!

  மறுமொழி

 7. அ.பாண்டியன்
  நவ் 10, 2013 @ 14:00:14

  ஆஹா! அருமை சகோதரி. தங்களின் படைப்பை ஆரம்ப சாலையில் எண்கள் சொல்லித் தர பயன்படுத்தலாம் போல் இருக்கிறதே. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி..

  மறுமொழி

 8. Trackback: தூ…….தூ…….போ……போ………!  | ranjani narayanan
 9. கோவை கவி
  டிசம்பர் 24, 2015 @ 17:02:26

  Ranjany Narayanan:-
  வேதாவின் வலை

  கோவைக்கவி திருமதி வேதா இலங்காதிலகம் நவீன பார்த்தசாரதி(யாரைச் சொல்லுகிறார்?) யுடன் சென்றது எங்கே என்று தெரிந்துகொள்ள படியுங்கள் இதை

  வேதாவின் ஆத்திச்சூடி

  பேரன் வெற்றிக்காக இவர் பாடும் சிறுவர் பாடல்கள் ஒன்று எண்ணுவோம்

  இரண்டு எண்ணுவோம்

  *************
  Vetha:- Mikka nanry sakothary..

  மறுமொழி

 10. கோவை கவி
  மார்ச் 25, 2019 @ 21:52:57

  சுந்தரகுமார் கனகசுந்தரம்:- இனிய காலை வணக்கம்.
  2014
  சுந்தரகுமார் கனகசுந்தரம்:- சூப்பரு.நன்றி.
  2014
  Vetha Langathilakam:- இனிய காலை வணக்கம். ………நன்றி.
  2o14

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: