12. துணிந்தவர்!……

vethri3 270

துணிந்தவர்!……

பிள்ளை வாசிப்பில் மிக ஆர்வமாக உள்ளார் என்று அவருக்கு படிக்க ஒரு மேசை கதிரை வாங்கினார்கள் பெற்றோர்.
அழகாக அமர்ந்திருந்து வாசிப்பார் அதாவது புத்தகம் புரட்டுவார், படங்கள் பார்ப்பார்.

ஒரு நாள் மங்கும் மாலைப் பொழுதில் தாயார் அருகிலுள்ள சமையல் அறையில் நின்ற போது. இவர் இருக்கையறையிலிருந்து அம்மா…அம்மாவென்று ஆர்வமாக அழைத்த சத்தம் கேட்டு தாயார் ஓடி வந்து பார்த்த போது, தனது படிக்கும் மேசையில் இவர் ஏறி நின்று கூத்தாடுகிறார்.
தாயார் அதிர்ச்சியடைந்து விட்டார். இனி அவரைத் தனியே சிறிது நேரம் கூட விடக் கூடாது (அதாவது கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்)
என்பது தெரிந்தது.
கதிரையில் ஏறி மேசை மேல் எறிவிட்டார்.

காலையில் பெற்றோருக்கு முன்னதாக ஆறு மணியளவில் எழுகிறார். அவராக சிறிது நேரம் விளையாட பெற்றோர் எழுந்து வருவார்கள். இப்போது இந்த மேசையைக் கீழே படுக்கப் போட்டு விட்டே இரவு படுக்கப் போகிறார்கள்.
காலையில் தனியே விளையாடும் போது மேசையில் ஏறி விழுந்தால் என்ன செய்வது!……ம்…ம்…..

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
10-11-2013.

line3

11 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. GOPALAKRISHNAN. VAI
  நவ் 10, 2013 @ 13:46:29

  இளம் கன்று பயமறியாது. நாம் சற்றே கவனமாக, அவர்களை நம் கண்காணிப்பில் தான் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்திச்சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  மறுமொழி

 2. அ.பாண்டியன்
  நவ் 10, 2013 @ 13:54:05

  சகோதரிக்கு வணக்கம்.
  குழந்தைகளைக் கண்காணித்து வளர்ப்பதற்குள் பெற்றோர்கள் படும்பாடு சொல்லி முடியாது. மேசைக் கதிரை மடக்கி வைத்து விட்டு செல்வது ரொம்ப நல்லது. தங்கள் பேரன் எல்லாத் திறன்களையும் பெற்று வாழ்வில் சிறக்க எனது வாழ்த்துக்கள்..

  மறுமொழி

 3. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  நவ் 10, 2013 @ 23:31:13

  வணக்கம்
  சகோதரி

  தங்களின் இந்தப்பகிர்வு பல பெற்றோர்களுக்கு படிப்பினையாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை சின்னப்பிள்ளைகளை தனியாக விட்டால் .இப்படி எல்லாம் நடக்கும் என்பதை மிக அழகாக எடுத்துச்சொல்லிய விதம் அருமை ….. வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 4. இளமதி
  நவ் 14, 2013 @ 20:51:21

  நீங்கள் கூறும்போதே அவரின் குறும்பினை மனக்கண்ணில் காண்கிறேன். துருதுருன்னு இருக்கும் பிள்ளைகள் நல்ல திறமைசாலிகளாக வருவார்களென எங்கள் ஊரில் சொல்வார்களே…
  அதுதான் இவரும் இத்தனை துடியானவர்… கேட்க மகிழ்வாயிருந்தாலும் இளங்கன்று பயமறியாது என்பதனால் பாதுகாப்பினை மேற்கொள்வது மிக அவசியம்.

  இந்தப் பருவத்தில் விழுவதும் எழுவதும் சாதாரணந்தான்..
  ஆனாலும் அடிபட்டு அதனால் வரும் விளைவுகளை உத்தேசிப்பது சிறந்ததே…

  குட்டிச் செல்வனுக்கு அன்பு வாழ்த்துக்கள்!

  மிகுந்த தலைவலியால் கணினிப்பக்கம் வரவில்லை… அதனால்தான் உங்கள் பதிவுகளைப் பார்த்திருக்கவில்லை நான்..
  அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி!

  மறுமொழி

 5. rajalakshmiparamasivam
  நவ் 16, 2013 @ 07:55:04

  பாட்டியின் ஆதங்கமும், அக்கறையும், வெளிப்படுகிறது எழுத்தில்.
  கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டிய வயது என்பது போட்டோவைப் பார்க்கும் போது தெரிகிறது.

  மறுமொழி

 6. கோவை கவி
  நவ் 16, 2013 @ 18:15:13

  IN FB:-
  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan :_
  இன்றைய பிள்ளைகள் மிகவும் சூட்டிகையானவர்கள். வாழ்த்துக்கள்
  Vetha ELangathilakam:_
  Mikka nanry doctor..

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: