293. உடன் பிறப்புகள்.

1185311_549579678446598_1615863275_n

உடன் பிறப்புகள்.

உன்னத உறவென்று உலகில்
உன்னுதல், உணர்வோடு உருகும்
உடன் பிறப்புகள் என்பது
உடன்படும் வாழ்வின் உண்மை.

உயிராய் ஒட்டி உறவாட
உதவியவர் உயர்வான பெற்றோர்.
இரத்தக் கலப்பு பிரத்தியேகம்.
இரத்த சம்பந்தம் தெய்வீகம்.

வயிரமான புனித பந்தம்
பயிரான அத்திவார அடிநாத
உயர் நிலை, ஊடாடும்
உயிருள்ள காலம் வரை.

அங்கை மாணிக்கம், பவளம்
தங்கை தம்பியுடன் பிறப்புகள்.
நங்கூரமாவார் வாழ்வுக் கடலில்.
மங்காத மங்கலம் பங்கயம்!

சங்கடம் வாழ்வில் அணுகிடில்
பொங்கும் சஞ்சலம் கடல்.
தங்கு தடையற்ற இறையருள்
சங்கமமாகட்டும் பெரு நிதியமாய்.
(அங்கை – உள்ளங்கை. உன்னுதல் – நினைத்தல். பங்கயம் – தாமரை.
பிரத்தியேகம் – சிறப்பு.)

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
11-11-2013.

2686814t0wzzlw0rl

Advertisements

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. GOPALAKRISHNAN. VAI
  நவ் 12, 2013 @ 08:40:12

  உடன்பிறப்புகள் பற்றிய சிறப்பான கவிதைக்குப் பாராட்டுக்கள்.

  மறுமொழி

 2. ramani
  நவ் 12, 2013 @ 10:23:45

  உடன்பிறப்புகளின் உன்னதம்
  சொல்லிப்போகும் அற்புதமான பதிவு
  புகைப்படத்துடன் பகிர்வு தந்தது
  மனம் கவர்ந்தது
  பகிர்வுக்கும் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 3. Rajarajeswari jaghamani
  நவ் 12, 2013 @ 14:57:14

  தங்கு தடையற்ற இறையருள்
  சங்கமமாகட்டும் பெரு நிதியமாய்.
  இனிய வாழ்த்துகள்..!

  மறுமொழி

 4. karanthaijayakumar
  நவ் 13, 2013 @ 00:10:30

  உடன் பிறப்புகளின்
  உன்னதம்
  அருமை
  நன்றி சகோதரியாரே

  மறுமொழி

 5. அ.பாண்டியன்
  நவ் 13, 2013 @ 17:45:10

  வணக்கம் சகோதரி..
  உடன்பிறப்புகளின் உன்னதமான உறவை அழகாக கவிதையில் காட்சியாய் அமைத்து சொல்லிய விதம் மனம் கவர்கிறது. சொல்லுக்கு பொருள் தந்தது நல்ல சிந்தனை. பகிர்வுக்கு நன்றி, தொடர வாழ்த்துக்கள் சகோதரி..

  மறுமொழி

 6. Stella
  நவ் 18, 2013 @ 07:48:37

  அழகான கவிதை. உடனில்லாவிடனும் உயிரில் உறைந்திருக்கும்
  உடன்பிறப்புகள். ஏதோ சிறு பொறி தட்டி ஞாபகங்கள உயிர் பெற்று சிரிக்க வைக்கும். கலங்க வைக்கும். சமயத்தில் சிந்திக்கவும் வைக்கும்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: