294. நோயெனும் கருமை.

imagesCA7N1HL6

நோயெனும் கருமை.

இன்பச் சோலையாம் உலக வாழ்வது
இனிய மயக்கத்தில் மூழ்கும் போது
இருண்ட நிழலாய்ப் படர்ந்து மூடும்.
மருண்டு மனதை மலங்க வைக்கும்
மனித உடலை மருவும் நோய்
மனஅமைதியை உருவும் நோய்.

அறிவுக் கண் மலர் விரியாத
குறி யற்ற பலர் வாழ்வினிலும்
செறிந்த பரிவுப் போர்வை யற்ற
நெறி கெட்ட வாழ்வினிலும்
குறி வைக்கும் நோயொரு வேகத்தடை
முறியாத ”நான்”ஐ வளைக்கும் கொடை.

இயற்கையாணையின்றிப் பலர் பெறுவது.
செயற்கை நிழலாக சிலரில் குவிவது.
இடம் கொடுப்பதால் இணைந்து வருவது.
வடம் போட்டு மனிதனை மாற்றுவது
அடம் பிடித்துப் பலகாலம் நிற்பது.
தடம் பதித்துத் தளர்வாய் விலகுவது.

உறுப்புகளின் அருமை உணர்த்தும் நோய்
உறவுகளின் பெறுமதி உயர்த்தும் நோய்
வாழ்வின் பெருமையை உணர்த்தும் நோய்.
வருகின்ற நாட்களை நேசிக்கும் நோய்.
பாயில் சாயும் கணத்திலும் மெய்;
பாடம் பல உணர்த்தும் நோய்.

நிதானம் வாழ்வில் அவசியம் என்று
நல் விதானம் அமைக்கும் நோய்.
ஆழ்கடலின் அடியில் அமிழ்ந்து
மூழ்கிடாதே விழி! என முழங்கி
வாழ்வெனும் தேரோட்டத்தை ஆட்ட
வீழ்கின்ற தடைக் கட்டை நோய்.

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
21.8.2001

Swirl divider v2

Advertisements

21 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. GOPALAKRISHNAN. VAI
  நவ் 19, 2013 @ 08:02:33

  நோய் என்னும் கருமையை அருமையாக வித்யாசமாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  மறுமொழி

 2. ramani
  நவ் 19, 2013 @ 09:46:06

  நிதானம் வாழ்வில் அவசியம் என்று
  நல் விதானம் அமைக்கும் நோய்.
  ஆழ்கடலின் அடியில் அமிழ்ந்து
  மூழ்கிடாதே விழி! என முழங்கி

  வாழ்வெனும் தேரோட்டத்தை ஆட்ட
  வீழ்கின்ற தடைக் கட்டை நோய்.

  அருமையாகச் சொன்னீர்கள்
  புரிந்து கொண்டவர்கள் புத்திசாலிகள்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

 3. கிரேஸ்
  நவ் 19, 2013 @ 10:52:45

  //நிதானம் வாழ்வில் அவசியம் என்று
  நல் விதானம் அமைக்கும் நோய்.
  ஆழ்கடலின் அடியில் அமிழ்ந்து
  மூழ்கிடாதே விழி! // நோய் சொல்லும் வாழ்வு பாடங்கள் அழகைச் சொல்லியுள்ளீர்கள்! வாழ்த்துகள்!

  மறுமொழி

 4. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  நவ் 19, 2013 @ 13:39:41

  வணக்கம்
  சகோதரி
  அழகான மொழி நடையில் அழகான கவித்துவம்.. அருமை வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 5. பி.தமிழ் முகில்
  நவ் 19, 2013 @ 16:31:59

  உண்மையான வரிகள் கவியே. வாழ்த்துகள்.

  நம் உறுப்புகளின் பயனையும், பெருமையையும் நமக்கு உணர்த்துபவை நம் உடல் உபாதைகளும் நோய்களுமே.

  பகிர்ந்தமைக்கு நன்றிகள் கவியே.

  மறுமொழி

 6. திண்டுக்கல் தனபாலன்
  நவ் 20, 2013 @ 04:27:21

  அருமை… உண்மை… வாழ்த்துக்கள் சகோதரி….

  மறுமொழி

 7. bagawanjee
  நவ் 20, 2013 @ 07:13:20

  ‘பாயில் படுத்து நோயில் விழுந்தால் காதல் கானல் நீரே ‘ங்கிற பாடலை நினைவுபடுத்திய உங்கள் கவிதை அருமை !

  மறுமொழி

 8. T.N.MURALIDHARAN
  நவ் 20, 2013 @ 17:03:15

  வித்தியாசமான நடையில் தங்கள் கவிதை அமைவது சிறப்பு. தங்கள் கவிதைகளை முக நூலில்படித்து விடுகிறேன். நேரமின்மை காரணமாக வர இயலவில்லை, தவறாக நினைக்க வேண்டாம் . இனி வந்து விடுகிறேன்.

  மறுமொழி

 9. அ.பாண்டியன்
  நவ் 22, 2013 @ 12:14:06

  வணக்கம் சகோதரி.
  முற்றிலும் உண்மை வாழ்க்கையெனும் தேருக்கு முட்டுக்கட்டையாய் அமைவது நோய் தான். அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். தொடர வாழ்த்துக்களும் வணக்கங்களும்..

  மறுமொழி

 10. கோவை கவி
  நவ் 26, 2013 @ 06:42:51

  Gowry Sivapalan:-
  இப்போது இக்கவிதைக்கு என்ன அவசியம் வந்தது . நோயை நோவா நோயாய் மாற்ற இருக்கவே இருக்கிறது பேஸ்புக். ஆழ்கடலின் அடியில் அமிழ்ந்து
  மூழ்கிடாதே விழி!

  Vetha ELangathilakam:-
  @ Gowry…..this is 2001 poem.. Turned my file and uploaded……Thank you….

  மறுமொழி

 11. yarlpavanan
  நவ் 27, 2013 @ 15:14:02

  “உறுப்புகளின் அருமை உணர்த்தும் நோய்
  உறவுகளின் பெறுமதி உயர்த்தும் நோய்” என்ற
  அடிகளில் மின்னும் கருத்துரை
  பயன்தரும் தகவல்!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: