295. அறிவு அதிகமா! அறியாமையா!

General-Knowledge-_left

அறிவு அதிகமா! அறியாமையா!

காதலுக்கு உரமிடும் வெண்ணிலவில்
காலம் கழிக்கும் காலமிது.
கணனித் தகவல் குவிந்து அருகுகிறது.
கடவுள் கதைகள் கணக்கில் நழுவுகிறது.

பூசை புனஸ்காரங்கள் புரையேறுகிறது.
பூகோளம் விரல் நுனியில் அடங்குகிறது.
அன்பு, பாசம், கால் விலையாகி
அரை விலையாகி அத்துவானமாகிறது.

அவசர தேவைகள் அவசியமாகி
அப்பா, அம்மா அனாவசியமாகிறது.
அனர்த்தத்தை அறுதியிட முடியாத
அறிவு அதிகமா! அறியாமையிதுவா!

அறியமுடியாமை இதுவா!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
14-5-2002.

DecorativeLine1-2

24 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. GOPALAKRISHNAN. VAI
  நவ் 22, 2013 @ 08:41:58

  //அறியாமையிதுவா!

  அறியமுடியாமை இதுவா!//

  அழகான கேள்வியுடன் ஓர் கவிதை, அசத்தல்.

  பதில் அறிந்தும் அறியாமலேயே இருக்க வேண்டியதாக உள்ளது.

  //அவசர தேவைகள் அவசியமாகி
  அப்பா, அம்மா அனாவசியமாகிறது.//

  கொடுமை தான்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 01, 2013 @ 07:38:51

   கணவன் மனைவி உறவும் கடுப்பாகிறது… இன்னம் பல மாற்றங்கள் உலகிலே.
   அனைத்தையும் ஓரு கவிதையில் எழுதிட முடியாதே!
   இனிய நன்றி கருத்திடலிற்கு ஐயா.
   மனமகிழ்ந்தேன்.

   மறுமொழி

 2. கிரேஸ்
  நவ் 22, 2013 @ 09:04:46

  அனைத்தையும் அறிவோம் என்ற அறியாமையை அறியமுடியாமை தானோ?
  அருமைக் கவிதை!

  மறுமொழி

 3. இளமதி
  நவ் 22, 2013 @ 10:46:37

  அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சாம்…

  அதுதான் இது!

  அருமை! வாழ்த்துக்கள் சகோதரி!

  மறுமொழி

 4. கவியாழி கண்ணதாசன்
  நவ் 22, 2013 @ 11:00:38

  அறியாமையே

  மறுமொழி

 5. திண்டுக்கல் தனபாலன்
  நவ் 22, 2013 @ 11:21:12

  அருமை… நல்ல கேள்வி…

  அறிய முடியாத அறியாமையே…

  மறுமொழி

 6. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  நவ் 22, 2013 @ 11:46:37

  வணக்கம்
  சகோதரி
  சிந்திக்க வைக்கும் கவிதை அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 7. அ.பாண்டியன்
  நவ் 22, 2013 @ 12:01:47

  சகோதரிக்கு வணக்கம்..
  வாழ்க்கையின் முரண்களை முறையாக கவியில் வடித்த விதம் அற்புதம் சகோதரி. அழகானக் கருத்துக்கள். தொடர வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி..

  மறுமொழி

 8. Rajarajeswari jaghamani
  நவ் 22, 2013 @ 12:55:52

  அவசர தேவைகள் அவசியமாகி
  அப்பா, அம்மா அனாவசியமாகிறது.
  அனர்த்தத்தை அறுதியிட முடியாத
  அறிவு அதிகமா! அறியாமையிதுவா!

  சிந்திக்கவேண்டிய வரிகள்..!

  மறுமொழி

 9. T.N.MURALIDHARAN
  நவ் 22, 2013 @ 15:25:59

  அதிகமான அறிவு சில நேரங்களில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். சில நேரங்களில் அறியாமை கூட மகிழ்ச்சி தரும்

  மறுமொழி

 10. கீதமஞ்சரி
  நவ் 26, 2013 @ 23:34:54

  வாழ்க்கையை வாழவிடாத அறியாமையும் அறியாமையென்பதை அறியமுடியாமையும்… கவிதை மனம் தொட்டது. நன்றி தோழி.

  மறுமொழி

 11. yarlpavanan
  நவ் 27, 2013 @ 16:07:21

  “அறிவு அதிகமா! அறியாமையிதுவா!
  அறியமுடியாமை இதுவா!” என்று
  வாசகரைச் சிந்திக்க வைக்கும் பதிவிது!

  மறுமொழி

 12. கோவை கவி
  நவ் 26, 2017 @ 10:30:04

  Vetha Langathilakam Notes:- பகுதியில் எனது விருப்பப்படி 4 வரிகள், 6 வரிகளாக – கவிதை வரிகளைப் போட்டால் இது தானியங்கி முறையில் கட்டுரை போல அமைப்பில் கிளம்புகிறது.
  முன்பெல்லாம் அப்படியல்ல….this is sad….
  26 November 2013 at 12:02
  n
  Sakthi Sakthithasan :- அன்பினிய சகோதரி , நீங்கள் விரும்பிய வடிவில் கவிதை வெளிவரவில்லை என்று கலங்காதீர்கள். அதிலுள்ள கருத்துகள் தான் முக்கியமானவை அவை எப்போதும் போல தப்பாமல் நன்றாக அற்புதமாக இருக்கின்றது கலங்காதீர்கள்
  27 November 2013 at 12:40
  Vetha Langathilakam:- Thanks to all of you….
  27 November 2013 at 16:52

  மறுமொழி

 13. கோவை கவி
  மார்ச் 26, 2019 @ 11:18:31

  Vetha Langathilakam .- Thanks to all of you….
  2014

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: