10. தொலைத்தவை எத்தனையோ!….

untitled

கார்த்திகை விளக்கீடு.

கார்த்திகை விளக்கீடு என்றதும் நாம் வளர்ந்த காலத்து வீட்டு நினைவுகள் தான் வரும். வீட்டில் அம்மா கார்த்திகை விளக்கீடு நெருங்கும் போது சொல்லுவா அடுப்பெரிக்க

slide62

தென்னம் பாளைகளை எடுக்காதீர்கள் என்று. அவைகள் மழைக்கு நனையாதவாறு கொட்டிலின் ஓரத்தில் தொங்கும் அசைவுகளில் அடுக்கப்பட்டிருக்கும்.

கொட்டில் என்பது பல வகையில் இருக்கும். எங்களது கொட்டில் வீட்டிற்கு அருகில் நான்கு பெரிய கொன்கிரீட் தூணில், இரண்டு பெரிய அறைகள் அளவில் மிக உயரமாக அமைத்து,

imagesca79ynp3download

தென்னங்கிடுகுகளால் வேயப்பட்டது. நான்கு பக்கமும் திறந்த வெளியாகவே இருக்கும். ஒரு மூலையில் ஆடு கட்டுவோம். நடுவில் மா இடிக்க, மா வறுக்க என்று பாவிப்போம். இதை கூலிக்கு ஆட்களும் வந்து செய்வர், நாங்களும் அவசர தேவைகளிற்கும் செய்வோம்.

இன்னொரு பக்கத்தில் ஒரு இரும்புக் கட்டில் இருக்கும். அப்பா பகல் சாப்பிட்டதும்

Tamil-Daily-News-Paper_5329096318

விசிறி எடுத்து விசிறியபடி அமர்ந்து வாசிப்பார். மெத்தையும் போட்டிருக்கும். அடிக்கடி கொட்டிலின் உள்ளேயே இது இடம் மாறும். அப்பா காற்று வாங்குவதற்காகத் தன் வசதிப்படி மாற்றுவார். நாங்களும் படுத்து விளையாடுவோம்.
இந்த இரும்புக் கட்டில் மடக்கி மடிக்கக் கூடியது. இங்குள்ள சம்மர் கட்டில் போன்றது.

விளக்கீடு நாளில் பகல் நேரத்தில் தென்னம் பாளைகளை இரண்டு அங்குல அளவில் கீறிக் கிழித்து அளவாக வெட்டி, ஒரு நுனியில் பழைய துணிகனைச் சுற்றிப் பந்தமாகக் கட்டி வைப்போம். எண்ணை ஊற்றிய சட்டியுள் இவை ஊறியபடி இருக்கும்.

unnamed
மாலை இருட்டாக இவைகளைப்பற்ற வைத்து வீட்டைச் சுற்றிய வளவில் எல்லா இடமும் வைப்போம். வீட்டுப் படலை முன்பு பெரிய வாழைமரக் குற்றி ஒன்று கொண்டு வந்து நிறுத்தி,

12140660_459175247619277_1197041099213372218_n           இதில் சிரட்டை மேலே தெரிகிறது. நாங்கள் அங்கு ஒரு குழி  செய்து அதனுள் சிரட்டை வைத்து என்ணெய் துணிகள் வைத்து எரிப்போம்.
அது பெரிதாக எரியும்.

வீடடில் உள்ள பாவிக்காத அத்தனை விளக்குகளும் புளி போட்டுத் துலக்கமாக மினுக்கிப் பற்ற வைக்கப்படும்.

2012-11-26 18.17.34large_293382
ஓடி ஓடி அப்பாவுடன் வளவெல்லாம் மழை ஈரத்தில் பந்தம் நடுவது மிக ஆர்வமாக இருக்கும். பாளையின் கூர்ப் பகுதி சுலபமாக மண்ணுள்ளே இறங்கும்.
images
எமது வீட்டு வேலை முடிய ஆச்சி வீடு சென்று பார்ப்போம். வீட்டுப் படலையில் நின்று, அந்து ஒழுங்கையில் மற்றவர்கள் வீட்டுப் பந்தங்களையும் பார்ப்போம்.
பின்னர் நாம் வளர ஒரு தடவை மாமா வீட்டில் பெரிய பெட்டி நிறைய கொழும்பிலிருந்து சிட்டிகள் வரவழைத்து

oil-lamp-512

வீட்டின் மேல் சுற்றிவர சிட்டி வைக்க மாமா, மாமி ஆயத்தப் படுத்தியதும் நினைவு வருகிறது.
இப்படியாக திருக்கார்த்திகை என்றால் எனது தொலைந்து போன நினைவுகள்.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
26-11-2013.

hheee211

25 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. GOPALAKRISHNAN. VAI
  நவ் 26, 2013 @ 21:30:19

  அருமையான நினைவலைகளை பெருமையாகச்சொல்லியுள்ளீர்கள். திறமையான எழுத்துக்களுக்குப் பாராட்டுக்கள்.வாழ்த்துகள்.

  மறுமொழி

 2. கீதமஞ்சரி
  நவ் 26, 2013 @ 23:31:06

  தென்னம்பாளையில், வாழைமரக் குற்றியில் என்று இதுவரை அறிந்திராத வித்தியாசமான வகையில் விளக்கேற்றிய நினைவுகளை எம்மோடு பகிர்ந்துகொண்டதற்கு நன்றி தோழி. நிகழ்வுகளைத் தொலைத்தாலும் நினைவுகள் இன்றும் பசுமையாய்….

  மறுமொழி

 3. karanthaijayakumar
  நவ் 27, 2013 @ 00:08:16

  மலரும் நினைவுகள் என்றுமே இனிமையானவை

  மறுமொழி

 4. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  நவ் 27, 2013 @ 00:16:18

  வணக்கம்
  சகோதரி

  நினைவுகள் சுமந்த பதிவு.. அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 5. திண்டுக்கல் தனபாலன்
  நவ் 27, 2013 @ 00:24:35

  இனிமையான மலரும் நினைவுகள்… ம்…

  மறுமொழி

 6. கோமதி அரசு
  நவ் 27, 2013 @ 00:59:43

  இனிமையான மலரும் நினைவுகள். இப்படி நாம் தொலைத்தவைகள் நிறைய உண்டு. பழைய நினைவுகளை நினைந்து நினைந்து மகிழ வேண்டியது ஆகி விட்டது.

  மறுமொழி

 7. Rajarajeswari jaghamani
  நவ் 27, 2013 @ 03:01:52

  நினைவலைகள் ஏற்றி வைத்த தீபமாக ஒளிர்கின்றன..!

  மறுமொழி

 8. இளமதி
  நவ் 27, 2013 @ 08:27:00

  நீங்குமோ எமை விட்டு அந்த நினைவுகள்…

  அழைத்துச் சென்றுவிட்டீர்கள் அங்கு…

  அருமை!

  மறுமொழி

 9. yarlpavanan
  நவ் 27, 2013 @ 16:26:43

  அருமையாக நினைவுகளை மீட்டுள்ளீர்கள்
  பாராட்டுகள்

  மறுமொழி

 10. rajalakshmi
  நவ் 27, 2013 @ 16:35:23

  நினைவுகள் உங்களை சிறுமியாக்கி விட்டதோ?நினைவுகளை அழகாய் கோர்த்து விட்டீர்கள்..

  மறுமொழி

 11. ஸாதிகா
  நவ் 27, 2013 @ 18:12:50

  உங்கள் கார்திகை தீபநாள் நினைவுகள் உங்களுக்கே உரித்தான் பாணியில் அருமையாக பகிர்ந்துள்ளீர்கள்.

  மறுமொழி

 12. கோவை கவி
  டிசம்பர் 16, 2013 @ 14:02:44

  Yashotha Kanth:-
  அழகிய திருக்கார்த்திகை நினைவுகள் அக்கா.
  Vetha.Elangathilakam.
  Thank you sis

  மறுமொழி

 13. சசிகலா
  ஜன 25, 2014 @ 10:03:18

  எங்கள் ஊருக்கு சென்று வந்த மன நிறைவை தந்த தங்கள் பகிர்வுங்க.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: