20. ஒன்று எண்ணுவோம்

one_partridge[1]-niram

ஒன்று எண்ணுவோம்

ஒன்று ஒன்று
ஒன்று என்று
இன்று எண்ணுவோம்
நன்று எண்ணுவோம்.

தலை ஒன்று
நெற்றி ஒன்று
மூக்கு ஒன்று
நாடி ஒன்று (ஒன்று என்று இன்று எண்ணுவோம்)

வாய் ஒன்று
கழுத்து ஒன்று.
வயிறு ஒன்று
முதுகு ஒன்று (ஒன்று என்று இன்று எண்ணுவோம்.)

அப்பா ஒன்று.
அம்மா ஒன்று.
வெற்றி ஒன்று.
பற்றுவோம் தொடர்ந்து. (ஒன்று என்று இன்று எண்ணுவோம்.).

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
29-10-13.

purple line  one

292. பிழையான எழுத்து நரகாசுரன்

-stamped

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

பிழையான எழுத்து நரகாசுரன்

தங்கத் தமிழ் எழுத்து
அங்கம் பிழையற எழுதுக!
சங்கத்தமிழ் புலம் பெயர்ந்தும்
ஓங்கியொளிரட்டும் தீப ஆவளியாக.

உழுத்த தமிழாக்காது எம்
எழுத்துப் பிழையெனும் நரகாசுரனின்
கழுத்து, கரம் துண்டாடுக!
இழுத்து வதைத்து அழிக்குக!

பங்கயம் மலர்ந்தது அன்ன
பங்கமின்றிப் பிழையற எழுதுக!
திங்களாகத் தமிழ் சிறக்க
மங்களத் தீபாவளி கொண்டாடுக!

எழுப்புக! உம் தமிழறிவை!
எழுந்திடுக! எழுத்தியல் கற்றிடுக!
எழுதுக பிழையற எழுதி
எழுந்தி டுக தமிழை உயர்த்த!

(அன்ன – போல)

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
1-11-2013.

Next Newer Entries