10. கலையும் கற்பனையும்.(கைவினை)

mine 338 mine 339

10. கலையும் கற்பனையும்.(கைவினை)

இங்கு நீங்கள் பார்ப்பது கரடிக் குட்டியின் முகம். என்னால் காகிதக் கூழில் செய்த முகமூடி.
இங்கு குழந்தைகள் நிகழ்ச்சியாக பம்ச,(Bamse) குயிலிங் (kylling) – கரடிக்குட்டியும் கோழிக் குஞ்சும் என்ற நிகழ்வு மிகப் பிரபலமானது. அதில் வரும் கரடிக் குட்டியின் முகம் இப்படி இருக்கும். குழந்தைகள் பராமரிப்புப் பற்றி 3 வருடம் டெனிஸ் மொழியில் படித்த போது முதலாவது வருடம் கைவேலைப் பாடத்தில் இதைச் செய்ய விரும்பினேன்.
இது முதலில் பலூனை ஊதிக் கட்ட வேண்டும்.
செய்திப் பத்திரிகைகளைத் துண்டு துண்டாகக் கிழித்துத் தண்ணிரில் இரவு முழுக்க ஊற வைத்து, மறுநாள் கைளால் பிசைந்தால் காகிதக் கூழாக வரும். இந்தக் கூழை பலூனின் மேல் மிகத் தடித்த பட்டையாக சம அளவில் போட வேண்டும். பசையும் பாவிக்க வேண்டும். சுவர் பேப்பர் ஒட்டும் பசை அல்லது நாங்களாக நீர் கொதிக் வைத்து சிறிது ஆற விட்டு மாவைக் கலந்தும் பசை செய்யலாம்.
பின்னர் ஓரிரு நாட்கள் காய விட்டு முகத்திற்கு ஏற்ற அளவில் வெட்ட வேண்டும்.
மேலும் ஒரு சிறிய பலூனில் இது போலச் செய்து அரை வட்டமாக வெட்டி மூக்குப் போன்று முகத்தில் ஒட்ட வேண்டும். (மண்ணிறம் பூசிய பகுதி)
இவைகள் நன்கு காய மஞ்சள் நிறம் தீட்ட வேண்டும். இங்கு அந்தத் தொலைக் காட்சி நிகழ்ச்சிக்கு மஞ்சள் நிறமே பாவித்தார்கள்.
கண்களிற்கு இரண்டு வட்டம் வெட்டல், தோல் துணியில் காது உரு வரைந்து வெட்டி, பசையால் காதுகளை உரிய இடத்தில் ஒட்ட வேண்டும். 1990ம் ஆண்டு என் முதல் வருடப் படிப்பில் செய்தது.
இந்த முறை அதை வெளியே எடுத்து பேரனுக்குக் காட்டிய போது, நான் போட, சிரித்தார். தான் போட மறுத்து விட்டார்.
கண்ணாடிப் பொலிதீன் உறையில் போட்டு தூசிகள் படாது வெளியே தெரியக் கூடியதாக உயரத்தில் வைத்திருந்தேன்.
பார்த்து ரசியுங்கள்.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
1-12-2013.

48176-Royalty-Free-RF-Clipart-Illustration-Of-A-Border-Of-Rainbow-Lines

23 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. Rajarajeswari jaghamani
    டிசம்பர் 01, 2013 @ 14:14:10

    பேரனுக்குக் காட்டிய போது, நான் போட, சிரித்தார். தான் போட மறுத்து விட்டார்.

    ரசிக்கவைத்த நிகழ்வுகளின் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    மறுமொழி

  2. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
    டிசம்பர் 01, 2013 @ 14:15:32

    வணக்கம்
    சகோதரி

    அருமையான ஆக்கம்.. செய்முறை விளக்கமும் நன்று வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    மறுமொழி

  3. GOPALAKRISHNAN. VAI
    டிசம்பர் 01, 2013 @ 14:24:48

    ரஸித்தேன்.

    மறுமொழி

  4. karanthaijayakumar
    டிசம்பர் 01, 2013 @ 15:09:24

    கரடியின் முகம் அருமை
    தங்களின் கைவண்ணத்திற்கு வாழ்த்துக்கள்

    மறுமொழி

  5. ranjani135
    டிசம்பர் 01, 2013 @ 16:19:03

    வெகு அருமை சகோதரி. பொறுமை ரொம்பவும் வேண்டும் அல்லவா? பேரனின் சந்தோஷத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்!

    மறுமொழி

  6. ramani
    டிசம்பர் 01, 2013 @ 19:11:52

    கரடி உருவம் அருமையாக அமைந்துள்ளது
    செய்முறைப் பயிற்சி விளக்கம்
    எளிமையாகச் சொல்லிப்போனவிதம்
    எங்களையும் செய்து பார்க்கத் தூண்டுகிறது
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    மறுமொழி

  7. திண்டுக்கல் தனபாலன்
    டிசம்பர் 02, 2013 @ 05:26:30

    மிகவும் ரசித்தேன்… வாழ்த்துக்கள் சகோதரி….

    தங்களின் தகவலுக்கு :

    கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

    மறுமொழி

  8. yarlpavanan
    டிசம்பர் 02, 2013 @ 15:44:04

    சிறந்த பதிவு…
    வரவேற்கிறேன்.

    மறுமொழி

  9. கீதமஞ்சரி
    டிசம்பர் 03, 2013 @ 01:12:48

    அழகான கற்பனையும் கலைநயமும் அசத்துகின்றன. பேரனோடு விளையாடும் சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றும் ரசிக்கத்தக்கன. பாராட்டுகள் தோழி.

    மறுமொழி

  10. ஸாதிகா
    டிசம்பர் 04, 2013 @ 07:10:46

    மிகவும் அருமையாக வந்துள்ளது.தேர்ந்தெடுத்த நிறங்களும் அருமை.

    மறுமொழி

  11. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
    மே 08, 2014 @ 23:43:27

    வணக்கம்

    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது எனதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி..http://blogintamil.blogspot.com/2014/05/blog-post_9.html?showComment=1399591985382#c28829283573722993

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    மறுமொழி

  12. கோவை கவி
    மார்ச் 26, 2019 @ 11:26:32

    Naguleswarar Satha:- Lovely one!
    2014
    Sakthi Sakthithasan :- அன்பினிய சகோதரி. அருமையான வேலைப்பாடு. அழகாக இருக்கிறது. அதை மற்றவர்களுக்கு நீங்கள் பயிற்றுவிக்க எடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது.

    Vetha Langathilakam :- Thank you all of you.
    2014

    மறுமொழி

கோவை கவி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி