63. கவிதை பாருங்கள்(photo,poem)

bbb

மொழிக் கர்வம்

துண்டிகைக் கொடி மொழி!
தெண்டிரை மொழி அகழ்ந்தும்
மண்டிலத்துப் பண்டிதனென்றும்
பண்டிதம் பாவலாம், முன்னர்
இண்டிடுக்கில் மொழி விதைக்காது
கண்டிதம், கிண்டுதல் சண்டித்தனம்.

மொழிக் கர்வ மயக்கம்
அழிதகை, அழிமதி முயக்கம்.
எழில் வளர்ச்சித் தடிப்பம்.
செழிப்பு தடை இயக்கம்
இழித்துரைக்கும் துணிபு தரும்.

(துண்டிகை –கொப்பூழ். தெண்டிரை – கடல்.
மண்டிலத்து –வட்டம், தொகுதி. கண்டிதம் – கண்டிப்பு.
அழிதகை – தகுதிக் கேடு. அழிமதி – கெடுமதி.
கழிபடர் -மிகு துன்பம்)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
9-12-2013

divider4

19 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. GOPALAKRISHNAN. VAI
  டிசம்பர் 09, 2013 @ 10:08:09

  மொழி கர்வம் பற்றிய பாடல் எனக்கு சுத்தமாக புரிந்து கொள்ள முடியாமல் இருப்பினும் அருமையாக எழுதியுள்ளதாகத் தெரிகிறது. பாராட்டுக்கள்..

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 21, 2013 @ 18:48:55

   ஐயா கடின சொற்கள் அதாவது பழக்கத்திலில்லாச் சொற்களிற்கு கருத்து தந்துள்ளேனே!
   இதை இணைத்துப் பார்த்தால் கருத்து சுலபமாக விளங்கிடுமே!
   தங்கள் வரிகளுக்கு நன்றி.

   மறுமொழி

 2. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  டிசம்பர் 09, 2013 @ 10:20:50

  வணக்கம்
  சகோதரி

  செந்ததமிழ் ததும்பும் அழகிய தமிழில் தந்த கவிதை அருமை வாழ்த்துக்கள் ..சகோதரி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 3. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  டிசம்பர் 09, 2013 @ 10:32:27

  வணக்கம்
  சகோதரி
  செந்தமிழ் ததும்பும் அழகிய தமிழில் தந்த கவிதை அருமை வாழ்த்துக்கள்..சகோதரி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  (முதலாவது போட்ட கருத்தை அழிக்கவும்)

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  டிசம்பர் 09, 2013 @ 15:36:43

  அருமை…

  வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 5. Rajarajeswari jaghamani
  டிசம்பர் 09, 2013 @ 16:20:48

  எழில் வளர்ச்சித் தடிப்பம்.
  செழிப்பு தடை இயக்கம்
  இழித்துரைக்கும் துணிபு தரும்.

  அருமையான கவிதை..!

  மறுமொழி

 6. ramani
  டிசம்பர் 09, 2013 @ 21:15:00

  அறியாத அருமையான தமிழ்
  சொற்களை தங்கள் அற்புதமான கவிதையின்
  மூலம் அறிய முடிகிறது
  பகிர்வுக்கும் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 7. மகேந்திரன்
  டிசம்பர் 09, 2013 @ 21:47:57

  நிறைய அரிய சொற்கள் தெரிந்துகொண்டேன் வேதாம்மா…
  அருமையான பாடல்.
  மொழிக் கர்வம் நம்மை ஏறெடுத்து நடக்கச் செய்யும்
  அதுவே கெடுமதியை ஏற்படுத்தி விடக்கூடாது என்று
  இயம்பும் அழகுக் கவிதை.

  மறுமொழி

 8. karanthai jayakumar
  டிசம்பர் 10, 2013 @ 00:32:49

  இதுவரை அறியா தமிழ்ச் சொற்கள்
  அற்புதம் சகோதரியாரே

  மறுமொழி

 9. இளமதி
  டிசம்பர் 10, 2013 @ 13:45:37

  நான் பயின்றது கையளவுகூட இல்லை என்பதை அறிந்துகொண்டேன்.

  அரும்பத விளக்கமுடன் ரசித்தேன்!
  வாழ்த்துக்கள் சகோதரி!

  மறுமொழி

 10. கோவை கவி
  ஜன 07, 2014 @ 19:59:23

  கலாநிதி தீண்டா மெழுகுகள் and Yashotha Kanth like this..in FB ஒன்றே குலம் ஒருவனே தேவன்.
  Yashotha Kanth :-
  ஆகா அருமை அக்கா

  Vetha ELangathilakam:-
  Mikka nanry Y.Kanth and K.Th.M

  மறுமொழி

 11. கோவை கவி
  டிசம்பர் 15, 2016 @ 19:46:27

  Maniyin Paakkal :- சொல்லாடல் சிறப்பு
  Unlike · Reply · 1 5-12-2016
  Vetha Langathilakam:- மிகுந்த அன்புடன் நன்றி Mani
  மகிழ்ந்தேன்.

  Subi Narendran :- கவிதை வரிகளில் அருமையான தமிழ் கண்டேன். வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 15-12-2916

  Vetha Langathilakam:- மிகுந்த அன்புடன் நன்றி தோழி.
  மகிழ்ந்தேன்.

  Mageswari Periasamy:- அதிக புழக்கத்தில் இல்லாத சொற்களை பயன்படுத்தி, அவற்றின் பொருளையும் விளக்கி நன்மை செய்துவிட்டீர்கள். நனிநன்றி தோழி.
  Unlike · Reply · 15-12-2016

  Vetha Langathilakam :- மிகுந்த அன்புடன் நன்றி தோழி.
  மகிழ்ந்தேன்.

  மறுமொழி

 12. கோவை கவி
  டிசம்பர் 15, 2018 @ 16:17:57

  சுந்தரகுமார் கனகசுந்தரம்:- Super.thank U.
  2013
  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan :- அழகான சொற்களுடன் அருமையாகச் சொன்னீர்கள்
  2013
  Kalaimahan Fairooz :- அருமை!

  Kalaimahan Fairooz:- http://www.kalaimahanfairooz.blogspot.com

  Mageswari Periasamy :- கருத்திட எனக்கு தெரியவில்லை. அருமை தோழி.
  2013
  சிறீ சிறீஸ்கந்தராசா :- அருமை அம்மா!! வாழ்த்துக்கள்!!
  2013
  Verona Sharmila :- அற்புதமான அரும்பத சொற்கள் மூலம் கவிதை வடித்திட்ட உங்களுக்கு என் வாழ்த்துக்கள்..
  2013
  Chembiyan Valavan :- அகழ்ந்து அகழ்ந்து என் தாய் தமிழ் மொழி அகழ்ந்து … நீங்கள் இட்ட இக்கவிதை அமுது அம்மா ….
  2013
  Vetha Langathilakam:- Thank you all of you.
  2014

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: