16 கூவிடுவாய் குயிலே!

sb[1]

*

கூவிடுவாய் குயிலே!            ( பாரதி பற்றிய  – 2வது)

*

மார்கழி பதினொன்று சுப்பிரமணியபாரதியின்
பிறந்த நாளிது நீ அறிவாயா
குயிலே! நீ அறிவாயா!

பனுவல்ககளின் மனு அவன்- உலக
பாவலர்களின் கனவு அவன்- குயிலே
பாவலர்களின் கனவு அவன்.

அவன் பாட்டுத் திறன் தமிழுலகை
பாலித்திடுவது பார்த்தாயா குயிலே!
பாலித்திடுவது பார்த்தாயா!

காயிலே இனிப்பு கனியிலே இனிப்பல்ல
காலமுழுதுமவன் பாடலினிப்பு –குயிலே
காலமுழுதுமவன் பாடலினிப்பு.

கருநீலத்து வயிரத்துளி பாரதிகவியெமை
கட்டும் மொழிச்சுடர் -குயிலே
கட்டும் மொழிச்சுடர் தான்.

பெண்விடுதலை எழுச்சிக் குரலெடுத்து
பெண்மையை வாழ்த்திய கவியவன் – குயிலே
பெண்மையை வாழ்த்திய கவியவன்.

இன்று புதிதாயெத்தனை பாரதிகள்
நன்று பல கவிகள் புனைகிறார் -குயிலே
நல்ல பல கவிகள் புனைகிறார்.

இன்று மகாகவியை நினைத்து கௌரவிப்போம்
குயிலே நீயும் எம்மோடு
தீங்குரலில் கூவிடுவாய்.

கவியாக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
11-12.2003.

வேறு

சுட்டும் விழிச்சுடரே…..

சுட்டும் விழிச்சுடரால் தீர்க்கமாய் உன்
கட்டும் தமிழ்க் கதிரின் ஆளுமையை
எட்டுத் திக்கும் கொட்டிய எட்டயபுரத்தானே!
கட்டுப்படாது பலர் இங்கு கட்டறுந்துள்ளனர்.

கெட்டு அழிந்ததால் இனியெம் வருங்காலப்
பட்டுத் தமிழ்ப் பாலகரையாவது உன்
பாட்டுத் திறத்தாலே பாலித்திட வேண்டுமென்று
வீட்டுக்கொரு தமிழனும் திட்டமிட வேண்டும்.

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 11-12.2017.

*

வா ரதி இன்று 

பாரதி நாள்!

பாராளும் கவி

ஏராளம் தந்தான்!

வேராழம் ஊன்றினான்.

தாராளமாய் வாழ்த்துவோம்

December 11, 2014

*

 

12965393-se

40 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. GOPALAKRISHNAN. VAI
  டிசம்பர் 11, 2013 @ 21:15:10

  இன்று மகாகவியை நினைத்து கௌரவிப்போம். குயில் பாட்டு அருமை. பாராட்டுக்கள்.

  மறுமொழி

 2. மகேந்திரன்
  டிசம்பர் 11, 2013 @ 21:40:20

  எம்மையும் கவியாக்கி
  கவிக்கு கருவாகி
  வடிக்கும் எழுத்துக்கு
  அழகாய் உருவாகி
  எம் மனம் நிறைந்த
  முண்டாசுக் கவிக்கு பிறந்தநாள்…
  எட்டையபுரக் கவிஞனுக்கு
  அழகிய வாழ்த்துக் கவிதை
  படைத்தீர்கள் வேதாம்மா…

  மறுமொழி

 3. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  டிசம்பர் 12, 2013 @ 00:07:47

  வணக்கம்
  சகோதரி

  பாரதிக்கு புனைந்த கவிமாலை.. அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 4. ramani
  டிசம்பர் 12, 2013 @ 02:09:04

  குயில் பாட்டுத் தந்த மகா கவிக்கு
  அந்தக் குயில் வாயிலாகவே தந்த
  பிறந்த நாள் சிறப்புக் கவிதை அருமை
  வித்தியாசமான சிந்தனையுடன்
  அற்புதமான கவிதை தந்தமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 5. அ.பாண்டியன்
  டிசம்பர் 12, 2013 @ 02:11:34

  சகோதரிக்கு வணக்கம்
  தங்கள் கவிதையால் பாரதிக்கு மகுடம் சேர்த்துள்ளீர்கள். இந்நன்னாளில் பாரதியை நினைவு கூர்ந்து கவியால் சிறப்பு சேர்த்தமைக்கு நன்றிகளும் பாராட்டுகளும். தொடர்க.

  மறுமொழி

 6. திண்டுக்கல் தனபாலன்
  டிசம்பர் 12, 2013 @ 03:12:00

  பாட்டு மிகவும் அருமை சகோதரி…

  வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 7. manikannaiyan
  டிசம்பர் 12, 2013 @ 03:57:02

  பாரதி இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அது தங்களைப் போன்ற கவிகளின் கவிகளில்தான்

  மறுமொழி

 8. Rajarajeswari jaghamani
  டிசம்பர் 12, 2013 @ 04:13:31

  அவன் பாட்டுத் திறன் தமிழுலகை
  பாலித்திடுவது பார்த்தாயா குயிலே!

  பாட்டு அருமை..!
  பாராட்டுக்கள்..!

  மறுமொழி

 9. kandasan61
  டிசம்பர் 12, 2013 @ 04:49:39

  பாவலர்களின் கனவு அவன்//உண்மையே

  மறுமொழி

 10. கோவை கவி
  டிசம்பர் 12, 2013 @ 10:41:42

  IN FB:- தமிழ்ச் சங்கம் —-புலமைக்கு மட்டுமே
  முத்து பாலகன் likes this..

  முத்து பாலகன்:-
  பாரதிப் பாட்டனை பாடாமல் போவேனோ…

  சிந்து வேந்தனை
  சிந்தையில் வேய்ந்தால்
  சிலிக்கும் ரோமமும்…

  இவன் சுயநலமில்லா
  உணர்ச்சிகளின் இமயம்…

  இவன் முண்டாசுக்குள்
  முட்டாள்களின் சமாதி யுள்ளது

  இவனின் இன்னும் ஒரு
  பிறப்புக் கேட்கும்
  எத்தனையோ இதயங்கள்…
  அவரவரின் மனக்குறையைப் போக்க…

  இவன் புள்ளிகளிடமுங்
  கேள்வி கேட்பான்
  ஏன் தொடரக்கூடாது என்று…
  சமதர்ம சாதகத்திற்காக…

  இவன் புள்ளிகளே
  வேண்டாமென்பான்
  ஏழ்மையின் இடுப்பொடிப்பதற்காக…

  நீ சீருவதைப் போல்
  நாங்கள் சீருவதில்லை…

  நீ பாரதத்தின் குடும்பத் தலைவன்
  நாங்களோ…
  எங்கள் குடும்பத்திற்கு மட்டும்

  வெள்ளையனிடமாவது
  கொஞ்சம் கண்ணியம் உண்டு
  எங்கள்…
  கொள்ளையரிடம்
  எதுவுமே யில்லையே…

  இன்னும் நாங்கள்
  அடிமைகள் தான்
  சுதந்திர நாட்டின்
  நிரந்தரமாக…
  சுரண்டல் கூட்டின்
  சுதந்திரமாக..

  சாதிகள் இல்லையென்றாய்
  அதனால் சாதிக் கட்சிகள்
  உன்னைக் கைவிட்டது…

  குருவிக்கும் நீ
  கருணை செய்தாய்
  தீமையை எதிர்த்து
  கோதித் தெழுந்தாய்
  முரண்பாடுகள் எனினும்
  தவமாய்ச் செய்தாய்
  முன்னுக்குப் பின்
  முரணின்றி…

  உன்னைப் பாடிக்கொண்டே
  உன்னைப் புதைத்தவர் பலர்
  அவரின் வியாபார விளம்பரக்
  கதாநாயகனாய் அவ்வப்போது…

  நீ விட்ட உன் கூடு
  நிலத்தில் கலந்துவிட்டது
  யார் விட்டார்கள் உன்னை
  தோண்டி எடுத்து மீண்டும்
  புதைத்து விடுவார்…
  அவரவரின் தேவைக்காக…

  உந்தன் ஒருமைப்பாடு
  உதடுகளுக்கு மட்டும் போதும்
  பிரித்தாளும் பக்குவம்
  பிரியாத பாரதமாய்
  பலர் உள்ளத்தில்…

  தமிழையே தேசியமாய்க்
  கண்டாய்… இன்று
  தேசியமாய்த் தமிழு மானது
  துண்டு துண்டாய்…!

  உன் பிறந்த நாள் எங்களுக்கு
  எங்கள் ஏக்கங்களின்
  ஏகாதசி விரதத்தை
  நினைவூட்டுகின்றன
  கவிப்பாட்டனே…

  எஞ்சியது உன் நினைவுகள்
  என்ற மிச்சம் மீதி தான்…

  ஒன்றே ஒன்று செய்…
  யார் உடலிலாவது
  வந்து இருந்து… உன்
  ரௌத்திர ராகத்தில்
  ருத்ர யாகத்தைச் செய்
  மீண்டும் ஒரு விடுதலைக்காக
  எங்கள் வேள்வி என்று மிதுவே…

  உன் வரவுக்காக
  உயிர் மேல்
  விழிவைத்துக் காத்திருக்கும்
  பாலகன் இவன்.

  Vetha. Elangathilakam:-
  மிகுந்த நன்றி.
  இறையாசி நிறையட்டும்.…

  மறுமொழி

 11. iniya
  டிசம்பர் 12, 2013 @ 12:13:10

  யாருக்கு வரும் பாரதியின் பக்குவம்
  அவர் வாழும் போதும் வீழும் போதும்
  வரித்தார் இல்லையே அவர் மரித்த பின்னர்
  ஏனும் நாம் மகுடம் சூட்டுவோம்.

  அருமையன் வரிகள் ஆதங்கம் பளிச்சிட
  நன்றி வாழ்த்துக்கள் …! முதல் வருகை தொடர்கிறேன்

  மறுமொழி

 12. maathevi
  டிசம்பர் 12, 2013 @ 14:23:04

  “குயிலே நீயும் எம்மோடு
  தீங்குரலில் கூவிடுவாய்”.

  மகாகவியை வாழ்த்துவோம்.

  மறுமொழி

 13. karanthai jayakumar
  டிசம்பர் 13, 2013 @ 00:53:56

  மகாகவியின்
  நினைவினைப்
  போற்றுவோம்

  மறுமொழி

 14. கீதமஞ்சரி
  டிசம்பர் 13, 2013 @ 04:07:32

  குயில் பாட்டு பாடியவனுக்கு குயில் பாட்டாலேயே ஓர் ஆராதனை. வணக்கத்துக்குரிய வைர வரிகள். நன்றி தோழி.

  மறுமொழி

 15. வெற்றிவேல்
  டிசம்பர் 13, 2013 @ 06:53:54

  வணக்கம் அம்மா…

  பாரதிக்கு இயற்றிய குயில் பாட்டு அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 16. ஸாதிகா
  டிசம்பர் 13, 2013 @ 13:10:05

  குயில் பாட்டு அருமை.

  மறுமொழி

 17. Mrs.Mano Saminathan
  டிசம்பர் 13, 2013 @ 17:01:10

  குயில் வழியே பாரதிக்கு அழகிய சமர்ப்பணம் உங்களின் கவிதை!

  மறுமொழி

 18. அ.பாண்டியன்
  டிசம்பர் 14, 2013 @ 18:30:49

  வணக்கம் சகோதரி
  பாரதிக்கு நிகரேது இப்பூமிதனிலே! முண்டாசுக் கவிஞனின் பிறந்த நாளில் தங்களது கவியால் மகுடம் சேர்த்த விதம் மிக அருமை. தொடருங்கள் தங்கள் கவிப்பயணத்தை பாரதியின் வழிதடத்தில். பகிர்வுக்கு நன்றி சகோதரி…

  மறுமொழி

 19. கோவை கவி
  ஜன 07, 2014 @ 19:55:01

  கலாநிதி தீண்டா மெழுகுகள் and Yashotha Kanth like this..in FB ஒன்றே குலம் ஒருவனே தேவன்.

  Yashotha Kanth:-
  படிக்கும் போதே ஒரு உற்சாகம் பிறக்கிறது அருமை அக்கா

  Vetha ELangathilakam:-
  Mikka nanry sis

  மறுமொழி

 20. கோவை கவி
  செப் 11, 2014 @ 09:31:59

  Mani Kandan :_
  அருமை வேதா தோழர்

  Vetha Langathilakam:-
  Mikka nanry…dear .M.M

  மறுமொழி

 21. தென்றல்சசிகலா
  செப் 11, 2014 @ 09:51:37

  பெண்மையை வாழ்த்திய கவியவன் பெண்மையால் போற்றப்பட்ட விதம் அருமை தோழி.

  மறுமொழி

 22. வெற்றிவேல்
  செப் 12, 2014 @ 12:03:37

  ராகத்தோடு அமைந்த பாடல். அழகு அக்கா…

  மறுமொழி

 23. கோவை கவி
  டிசம்பர் 11, 2017 @ 15:55:15

  Only photo’s comment:-

  Gomathy Arasu வாழ்க பாரதி!
  11 December 2014 at 09:01

  சிறீ சிறீஸ்கந்தராஜா :- பாராளும் கவி ஏராளம் தந்தான்!
  11 December 2014 at 09:23 ·

  Thirunavukkarasu Thivakaran:- வேராழம் ஊன்றினான்.
  11 December 2014 at 09:28

  Subajini Sriranjan :- அருமை அருமை….
  பாரதியின் கவிக்கு இணைக்கவி ஒன்றை புனைந்தாய் தாயே…
  வாழ்த்துவோம்….
  11 December 2014 at 09:47

  Kosalya Sornalingam :- +மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்துவோம் !+–இணை வரிகளுண்டா !
  11 December 2014 at 09:52

  Prema Rajaratnam :- பாராளும் கவி
  ஏராளம் தந்தான்,!
  11 December 2014 at 10:39

  கரந்தை ஜெயக்குமார்:- பாரதி போற்றுவோம்
  11 December 2014 at 11:18

  Seeralan Vee :_ மீண்டும் பிறப்பாய் ….!
  11 December 2014 at 13:19

  Alvit Vasantharany Vincent:- முண்டாசுக் கவிஞனைப் பாராட்டியே நல்ல கவி படைப்போம்.
  11 December 2014 at 19:54

  Velavan Athavan:- இனியவன் என்நிலை வந்தாலும் தன் நிலை குலைந்து தலை குனிந்ததில்லை தந்தான் நற்கவி வாழ்விற்கு வளம் ஓங்கிட போற்றி உயர்வோம் பாரதியை பாரெங்கும் நாமே வாழ்க பாரதி…. வாழ்க.. வாழ்க..
  13 December 2014 at 16:32 ·

  Rathy Mohan:- எட்டயப்புரத்தானை நினைப்போம்
  11 December 2016 at 16:22 ·

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: