54. மழைக் கவிதை

rain-28

*

மழைக் கவிதை

*

நீர் கொண்ட மேகம் பெரும்
போர் செய்யச் செய்ய
வாளும் வேலும் உரசலின் கடுமையோ
மூளும் மின்னல் தெறிப்பு!

*

மானம் ரோசம் பீறித் தானோ
வானம் பெரிதாய் அழுவது!
உன்னாலும் நிறுத்த முடியாததென்றும்
என்னாலும் முடியாதது மழை.

*

பிரபஞ்சம் நனைத்து மணகரைத்து
அரசாங்கம் நடத்தும் மழை.
மனம் நனைத்து வயல் நனைத்துத்
தனம் தரும் மழை.

*

தடல் மேலொரு கவிதையொரு
திடல் மேலொரு கவிதை.
இலை மேலொரு கவிதை நற்
கலை இம்மழைக்கவிதை.

*

பா ஆக்கம்
வேதா. இலங்காதிலகம்
14-12-2013.

*

கோடை மழை.

*

கோடை மழை பாலைவனச் சோலை.
குளிர்கழி (ஐஸ்) சுவைக்கும் உணர்வு நிலை.
பிரிந்த காதலர் சேரும் நிலை
பட்டினியாளனுக்கு எச்சிலிலையும் கோடை மழை.

*

தாயைப் பிரிந்த மழலைக்கு வரவாம்
தாயின் அணைப்பு கோடை மழையாம்.
விளைந்த வயலிற்குச் சொரியும் குளிர்மைக்
கோடை மழை கொடுமையிலும் கொடுமை.

*

வெப்பத்தில் பொழியும் மழை நோய்களை
செப்பமாய் காவி வரும் தொல்லை.
குளங்களின் நீர் மட்டம் உயரும்.
வளங்கள் பெருக நல் வாய்ப்பாகும்

*

வரிகளாக்கம் வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
15-5-2016.

*

In FB:

Samme  karu…rain  –     another poem mine –        https://kovaikkavi.wordpress.com/2011/11/05/16-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/

another   samme  :-     https://kovaikkavi.wordpress.com/2010/07/25/24-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/   

16161859-

Advertisements

22 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. GOPALAKRISHNAN. VAI
  டிசம்பர் 15, 2013 @ 00:12:34

  மழையெனப் பொழிந்துள்ள கவிதை அருமை. பாராட்டுக்கள்.

  மறுமொழி

 2. T.N.MURALIDHARAN
  டிசம்பர் 15, 2013 @ 00:23:47

  கவிதையும் பொருத்தமான படமும் மனத்தைக் கவர்ந்தது. சிறப்பான கவிதை

  மறுமொழி

 3. மகேந்திரன்
  டிசம்பர் 15, 2013 @ 01:52:46

  நெஞ்சிற்குள் சாரல் பொழியும்
  இன்னிசை மழைக்கவிதை வேதம்மா…

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  டிசம்பர் 15, 2013 @ 02:55:53

  ஆஹா…! ரசித்தேன் சகோதரி…

  வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 5. கவியாழி கண்ணதாசன்
  டிசம்பர் 15, 2013 @ 04:41:04

  நற்கலை இம்மழைக்கவிதை.//அருமை

  மறுமொழி

 6. Rajarajeswari jaghamani
  டிசம்பர் 15, 2013 @ 17:10:33

  தடல் மேலொரு கவிதையொரு
  திடல் மேலொரு கவிதை.
  இலை மேலொரு கவிதை நற்
  கலை இம்மழைக்கவிதை

  கவிதை ஊற்றெடுக்கும் மழை ..!

  மறுமொழி

 7. yarlpavanan
  டிசம்பர் 16, 2013 @ 15:56:11

  “தடல் மேலொரு கவிதையொரு
  திடல் மேலொரு கவிதை.
  இலை மேலொரு கவிதை நற்
  கலை இம்மழைக்கவிதை.” என
  சிறந்த கவிதையின் அழகு
  வெளிப்படுகிறதே!

  மறுமொழி

 8. ranjani135
  டிசம்பர் 17, 2013 @ 16:43:57

  மழையைப் பார்ப்பது, அதில் நனைவது எல்லாமே மகிழ்ச்சிக் கொடுக்கும் விஷயங்கள். இங்கு பெய்யும் கவிதை மழை மனதிற்கும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. மழைப் படம் அருமை, சகோதரி!

  மறுமொழி

 9. கோமதி அரசு
  டிசம்பர் 18, 2013 @ 12:23:36

  மழையை ரசிப்பது, அப்படியே அதில் நனைவது பிடிக்கும்.
  நீங்கள் கவிதையும் அழகாய் படித்துவிட்டீர்கள்.
  படம் அழகு.

  மறுமொழி

 10. sujatha
  டிசம்பர் 19, 2013 @ 17:41:38

  `மழைக்கவிதை“ தமிழ் கவிதையாக வாரி மழை பொழிந்துள்ளது.
  அருமை….அருமை…..

  மறுமொழி

 11. கோவை கவி
  டிசம்பர் 29, 2013 @ 08:59:28

  IN FB தமிழ்ச் சங்கம் —-புலமைக்கு மட்டுமே

  முத்து பாலகன்:-
  மன்னன் மார்பில் உலவு

  கருத்தலுங் கடுத்தாலு மிடித்தாலுங்
  கொடுப் பதற் கானப் போட்டியாய் தன்னுள்…
  கர்ணக் கொடையாய்… பிறர்க்கு…மழை…!

  Vetha ELangathilakam :-
  Mikka nanry.

  மறுமொழி

 12. கோவை கவி
  நவ் 16, 2015 @ 17:27:29

  Subajini Sriranjan – அருமையான கவிதை தந்தீர்கள்……(16-11-2015.)

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: