46. மீன்காரி.

meenkati-22

மீன்காரி.

அள்ளிச் சொருகிய கொண்டைக்காரி
வெள்ளித் தண்டைக் கொலுசுக்காரி.
வள்ளி நீ வருகையிலென்
உள்ள முருகுதடி மீன்காரி.

சாடும் கிண்டல் பேச்சிலே
ஊடும் உதட்டுச் சுளி(ழி)ப்பிலே
ஆடும் காதணி அழகிலே
கூடுதடி உன்னழகு உண்மையிலே.

ஒல்லி உடம்புக்காரி நடையில்
மெல்லிய அசைவு இடையில்
அல்லும் பகலும் ஓயாது
மல்லுக்கட்டுதடி என் மனசு.

மீன் நாற்றம் உன்னைச்
சீ என்று சொல்லும்.
தூர விலகென வில்லை
பாராட்டும் உன் அழகு.

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
21-12-2013.

animated-gifs-aquariums-04

31 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. GOPALAKRISHNAN. VAI
  டிசம்பர் 21, 2013 @ 08:09:38

  படத்தேர்வும், வர்ணிப்புகளும் அருமை. பாராட்டுக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 02, 2014 @ 21:20:43

   படம் பழைய ஓரு சஞ்சிகைப் படத்தை நான் திருத்தி எடுத்தேன்.
   தங்கள் கருத்திற்கு மிக மிக நன்றியும் மகிழ்வும்.

   மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  டிசம்பர் 21, 2013 @ 08:46:26

  ஆஹா…! ரசித்தேன் சகோ…

  வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 3. T.N.MURALIDHARAN
  டிசம்பர் 21, 2013 @ 09:03:30

  //வெள்ளித் தண்டைக் கொலுசுக்காரி.//
  கொஞ்சம் வசதியான மீன் காரியோ? சும்மா சொன்னேன்.

  வர்ணனையும் கவி நயமும் மீன் காரியாக இருந்தாலும் தமிழ் மணம் வீசுகிறது . கவிதை அருமை

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 21, 2013 @ 10:48:11

   சில பேர் தங்கள் மரபு வழி பெற்றவைகளைப் பாவிப்பதுணடு அல்லவா!.
   சிறு ஆமைப்பூட்டுப் போன்ற பெரிய காதணியோடு (தண்டட்டி) மீன்காரிகளை நான் கண்டுள்ளேன்.
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி முரளி.
   மகிழ்ந்தேன்.

   மறுமொழி

 4. ramani
  டிசம்பர் 21, 2013 @ 09:04:24

  படமும் அதற்காக கவிதையும்
  மிக மிக அருமை
  பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 5. mahalakshmivijayan
  டிசம்பர் 21, 2013 @ 09:36:40

  எந்த மீன் விற்கும் பெண்ணை கண்டு மயங்கி போனீர் சகோதரி?? அழகான கவிதை 🙂

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 21, 2013 @ 10:44:36

   இல்லை நான் மரக்கறிக்காரி.
   மீனென்றால் மூக்கைப் பொத்தித் தூரப் போவேன்.
   பாடசாலை சென்ற நாட்களில் மீன் விற்பவர்களை தெருவில் கண்டுள்ளேன்.
   எனது 8-9 வயதில் இவர்களது இயல்பான அள்ளிச் சொருகிய கொண்டையும் தண்டட்டியென்ற தடிப்பான காதணியும் . ஒல்லியான உடலழகும் இடுப்பை ஆட்டும் விதமும.
   என்னைக் கவர்ந்தது. இதை நினைத்து எழுதியது.
   மிக நன்றி மகிழ்ச்சி சகோதரி வருகைக்கும் கருத்திடலிற்கும். மாலையில் தங்கள் தளத்திற்கு வருகை தருவேன்.

   மறுமொழி

 6. கோமதி அரசு
  டிசம்பர் 21, 2013 @ 16:12:14

  அருமையான் கவிதை.
  படமும் கவிதையும் மிக பொருத்தம்.

  மறுமொழி

 7. Venkat
  டிசம்பர் 21, 2013 @ 16:12:14

  மீன் விற்கும் பெண்மணியை கண்முன்னே கொண்டு வந்த கவிதை. சிறப்பான கவிதைப் பகிர்வுக்கு நன்றி.

  மறுமொழி

 8. இராய செல்லப்பா
  டிசம்பர் 21, 2013 @ 17:19:20

  “வள்ளி நீ வருகையிலென்//உள்ள முருகுதடி மீன்காரி”- பாவம், எத்தனை நாளாக ஏங்குகிறானோ அவன்? அழகான காதல் கவிதை.

  மறுமொழி

 9. bagawanjee
  டிசம்பர் 21, 2013 @ 17:39:59

  வாலிபக் கவி வாலி அவர்களை சுறா மீன் சாப்பிடுற பிராமீன் என்பார்கள் ,அது உண்மைதான் போலிருக்கிறது இந்த அழகி மீன் விற்றுக் கொண்டு வந்ததை கவிஞர் ரசித்து இருப்பாரோ ?

  மறுமொழி

 10. தி தமிழ் இளங்கோ
  டிசம்பர் 22, 2013 @ 01:56:01

  மீன்காரியென்றே கவிதை படித்தீர்! கவிதையைப் படித்து முடித்ததும் மீனம்மாள் என்றே சொல்லத் தோன்றுகிறது!

  மறுமொழி

 11. karanthai jayakumar
  டிசம்பர் 22, 2013 @ 14:10:59

  அருமையான கவிதை
  பொருத்தமான படம்
  நன்றி சகோதரியாரே

  மறுமொழி

 12. yarlpavanan
  டிசம்பர் 22, 2013 @ 16:02:32

  கவிதையும் ஒளிப்படமும் நன்றே பொருந்தி அமைந்திருக்கிறது.

  மறுமொழி

 13. iniya
  டிசம்பர் 23, 2013 @ 00:18:12

  அழகான ஓவியம் அதற்கேற்ற கவிதையும். உண்மையில் அது அழகு தான் நானும் அதை ரசித்துள்ளேன்.
  ரசித்தேன் நன்றி தொடர வாழ்த்துக்கள்….!

  மறுமொழி

 14. jaleelakamal
  டிசம்பர் 30, 2013 @ 15:14:11

  மிக அழகான ஓவியமும் அதற்கு தகுந்தாற் போல் கவிதையும் அருமை

  மறுமொழி

 15. raveendran sinnathamby
  ஜன 08, 2014 @ 09:16:55

  ரசனையான கவிதை.மீன் மணந்தாலும் அவளிலும் வாசங்கள் வீசுகிறது.

  மறுமொழி

 16. கோவை கவி
  டிசம்பர் 26, 2017 @ 13:12:12

  சிறீ சிறீஸ்கந்தராஜா “அள்ளிச் சொருகிய கொண்டைக்காரி
  வெள்ளித் தண்டைக் கொலுசுக்காரி.
  வள்ளி நீ வருகையிலென்

  உள்ள முருகுதடி மீன்காரி”.
  *********** அருமை!! வாழ்த்துக்கள் அம்மா!! 26-12- 2013
  .
  மு. சுவாமிநாதன்.:- நன்று!

  ‘தூர விலகெனை
  விடவில்லை
  பாராட்டும் உன் அழகு.’

  இப்படி இருந்திருக்கலாமோ?
  26-12-2013

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: