297. இனிய நத்தார் வாழ்த்து.

tree- xmas-123

(ஓளி வெள்ளம் அணியாய் அலங்கரிக்க
களி கொள்ளும் மனமதைக் காண
வளியெங்கும் நத்தார் பலகார சுகந்தம்
எளியவர் யேசுபாலன் அவதரித்த நன்நாள்.

உறவுள்ளோர் கலந்து றவாடிக் களிக்க
உறவற்றோர் வேதனையில் துவண்டு வருந்த
உள்ளவனும் ஏழையுமி ணைந்து மகிழ்ந்து
உறவாடும் நத்தார் இனிய வாழ்த்துகள்!)

இனிய நத்தார் வாழ்த்து.

நத்தார் பெருநாள் ஆனந்தம் குவிய
சித்தத்தில் அத்தர் வாசனை கவிய
எத்தர்களும் மொத்தமாய் மகிழ்ந்து குவிய
காத்திருந்த காலம் வேகமாய் வந்தது.

கடை வீதி கலகலக்கும் கொள்வனவு
மடை திரளும் பரிசுப் பொதிகளும்
படை திரளும் இனிப்புப் பண்டங்களும்
இடைவெளி யில்லா மக்கள் நெருக்கம்.

வெள்ளை டெனிஸ் நத்தார் நம்பிக்கை
கொள்ளை போனது பெரும் அவநம்பிக்கை
பிள்ளை மகிழ்வு திருநாள் மகிழ்வு.
கிள்ளையாய்ப் பொழியுமின்ப நத்தார் வாழ்த்து.

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
23-12-2013

007_gltrcmasgarlbowsrt8988999911

26 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  டிசம்பர் 23, 2013 @ 22:41:27

  வெள்ளை டெனிஸ் நத்தார் நம்பிக்கை
  கொள்ளை போனது பெரும் அவநம்பிக்கை
  பிள்ளை மகிழ்வு திருநாள் மகிழ்வு.
  கிள்ளையாய்ப் பொழியுமின்ப நத்தார் வாழ்த்து.

  அற்புதமான நத்தார் வாழ்த்துக் கவிதை
  என்னுடைய வாழ்த்துக்களையும்
  தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 2. kowsy
  டிசம்பர் 23, 2013 @ 22:47:31

  உறவுள்ளோர் கலந்து றவாடிக் களிக்க
  உறவற்றோர் வேதனையில் துவண்டு வருந்த
  உள்ளவனும் ஏழையுமி ணைந்து மகிழ்ந்து
  உறவாடும் நத்தார் இனிய வாழ்த்துகள்

  அழகாகச் சொல்லியுள்ளீர்கள்

  மறுமொழி

 3. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  டிசம்பர் 24, 2013 @ 00:18:37

  வணக்கம்
  சகோதரி
  நத்தார் பண்டிகை கவிதை மிக அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்

  இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 4. ramani
  டிசம்பர் 24, 2013 @ 02:17:33

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 5. Rajarajeswari jaghamani
  டிசம்பர் 24, 2013 @ 03:59:02

  பிள்ளை மகிழ்வு திருநாள் மகிழ்வு.
  கிள்ளையாய்ப் பொழியுமின்ப நத்தார் வாழ்த்து.
  இனிய வாழ்த்துகள்…!

  மறுமொழி

 6. GOPALAKRISHNAN. VAI
  டிசம்பர் 24, 2013 @ 08:50:23

  இனிய நல்வாழ்த்துகள்.

  மறுமொழி

 7. karanthai jayakumar
  டிசம்பர் 24, 2013 @ 15:36:38

  நத்தார் பண்டிகைக் கவிதை அருமை
  வாழ்த்துக்கள்
  நன்றி சகோதரியாரே

  மறுமொழி

 8. பி.தமிழ் முகில்
  டிசம்பர் 25, 2013 @ 04:12:15

  தங்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் கவியே !!!

  மறுமொழி

 9. Dr.M.K.Muruganandan
  டிசம்பர் 25, 2013 @ 11:58:41

  நத்தார் பெருநாள் நல்வாழ்த்துகள்

  மறுமொழி

 10. maathevi
  டிசம்பர் 25, 2013 @ 13:31:06

  கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

  மறுமொழி

 11. yarlpavanan
  டிசம்பர் 25, 2013 @ 13:56:01

  சிறந்த பதிவு
  இனிய வாழ்த்துகள்

  மறுமொழி

 12. iniya
  டிசம்பர் 26, 2013 @ 06:02:04

  கவிதை அருமை தோழி

  என் இனிய நல் நத்தார் வாழ்த்துக்களும், புத்தாண்டு வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்….!

  மறுமொழி

 13. திண்டுக்கல் தனபாலன்
  டிசம்பர் 28, 2013 @ 03:56:16

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_28.html) சென்று பார்க்கவும்… நன்றி…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: