298. நன்னூறு இலக்கியம் பிறக்கட்டும்.

319057_477008075676539_1370189906_n-d

நன்னூறு இலக்கியம் பிறக்கட்டும்.

பாற்கட லமுதம் கலந்து
பாவினில் சுவை குழைத்து
பாகம் பாகமாய் இணைத்து
பாவாணர் முன்னமர்ந்து
பாங்கி நீயும் சுவைத்து
பாடலாய்ப் பாட வைத்து
பாருக்குச் சொல்லென இணைத்து
வாவென அழைத்தேனிங்கு.

பன்னூறு பாக்கள் முனைந்து
பண்ணுகிறார் காதல் கலந்து.
இன்னூறும் பல்சுவை நிறைந்து
நன்னூறு இலக்கியம் பிறந்து
கண்ணேறுபடாது வரைந்து
பெண்ணாகத் தனியே உயர்ந்து
விண்ணேறும் புகழ் படர்ந்து
நண்ணுதல் நலம் பெருக்கும்.

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
29-12-2013

imagesCAGJ44D2

25 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. வை. கோபாலகிருஷ்ணன்
    டிசம்பர் 29, 2013 @ 10:10:40

    //இன்னூறும் பல்சுவை நிறைந்து
    நன்னூறு இலக்கியம் பிறந்து
    கண்ணேறுபடாது வரைந்து
    பெண்ணாகத் தனியே உயர்ந்து
    விண்ணேறும் புகழ் படர்ந்து//

    அழகான வரிகள். அற்புதமான படைப்பு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளும்.

    மறுமொழி

  2. T.N.MURALIDHARAN
    டிசம்பர் 29, 2013 @ 11:39:58

    அழகான கவிதை,அழகான படம் .இனிமையான வார்த்தைகள்

    மறுமொழி

  3. கவிஞா் கி.பாரதிதாசன்
    டிசம்பர் 29, 2013 @ 11:56:36

    வணக்கம்!

    பன்னுாறு பாக்கள் பாடிப்
    பாற்கடல் அமுதைத் தந்தீா்!
    பொன்னுாறு தந்தே உம்மின்
    புலமையைப் போற்ற வேண்டும்!
    இன்னுாறும் தமிழை உண்டே
    இளமையுடன் என்றும் வாழ்க!
    உன்ஊரும் உலகும் வாழ்த்த
    விண்ணுாரும் நிலவாய் மின்க!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    மறுமொழி

  4. கவிஞா் கி.பாரதிதாசன்
    டிசம்பர் 29, 2013 @ 12:03:35

    வணக்கம்

    வருகின்ற தைத்திங்களில் இருந்து மரபுக் கவிதை இலக்கணத்தை என் வலையில் எழுதுகிறேன்.

    தொடா்ந்து படித்துப் பயன்பெறவும்

    கவிபோற்றும் கன்னல் இலக்கணத்தைக் கற்றுப்
    புவிபோற்றும் பாக்கள் புனை!

    மறுமொழி

    • கோவை கவி
      ஜன 04, 2014 @ 08:25:25

      உண்மையாக, உறுதியாக நிச்சயமாக
      உண்மையாக, உறுதியாக நிச்சயமாக!
      அண்ணித்தல் எப்போதென ஆவலாய்
      எண்ணியது நாட்களை உண்மை.
      கண்ணி(பூங்கொத்து) தநது வரவேற்பு.
      பண்புடன் நன்றி…நன்றி.

      மறுமொழி

  5. திண்டுக்கல் தனபாலன்
    டிசம்பர் 29, 2013 @ 12:26:17

    அருமையான கவிதை சகோதரி… படம் பிரமாதம்… வாழ்த்துக்கள்…

    மறுமொழி

  6. ramani
    டிசம்பர் 29, 2013 @ 12:48:22

    அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    மறுமொழி

  7. karanthai jayakumar
    டிசம்பர் 29, 2013 @ 15:10:52

    அருமை சகோதரியாரே
    தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும்
    நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    மறுமொழி

  8. Rajarajeswari jaghamani
    டிசம்பர் 29, 2013 @ 17:00:20

    ஆக்கமும் படமும் அழகு..பாராட்டுக்கள்..!

    மறுமொழி

  9. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
    டிசம்பர் 29, 2013 @ 17:20:04

    வணக்கம்
    சகோதரி

    தங்களின் கவிதையோ.. அமுதம்….. சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    மறுமொழி

  10. கோமதி அரசு
    டிசம்பர் 30, 2013 @ 05:42:52

    இன்னூறும் பல்சுவை நிறைந்து
    நன்னூறு இலக்கியம் பிறந்து
    கண்ணேறுபடாது வரைந்து
    பெண்ணாகத் தனியே உயர்ந்து
    விண்ணேறும் புகழ் படர்ந்து
    நண்ணுதல் நலம் பெருக்கும்.//

    நலம் பெருகட்டும்.
    வாழ்த்துக்கள் அருமையான கவிதைக்கு.

    மறுமொழி

  11. yarlpavanan
    டிசம்பர் 30, 2013 @ 15:31:33

    நன்னூறு
    இலக்கியம் பிறக்கட்டும்!
    நம்தமிழ்
    நூறாண்டு வாழட்டும்!

    மறுமொழி

  12. sujatha
    ஜன 04, 2014 @ 15:12:44

    இலக்கியம் பிறந்த கவியோடு, புகைப்படமும் அருமை… வாழ்த்துக்கள் “கவிதாயினி வேதா“

    மறுமொழி

  13. கோவை கவி
    மார்ச் 26, 2019 @ 12:00:11

    Natarajan Mariappan :- மிக்க நன்றான வரிகள்!
    அழகு தமிழ் துள்ளி விளையாடட்டும்!
    அமுது தமிழ் அள்ளி விளையாடட்டும்!
    நன்னூறு இலக்கியம் எண்ணூறு கோடியாய் பெருகட்டும்
    பன்னீரு புஷ்பங்கள் போல் எந்நாளும் மணக்கட்டும்!
    தொடரட்டும் உங்கள் சொற்காலம்!
    —————————————
    //பாற்கட லமுதம் கலந்து
    பாவினில் சுவை குழைத்து
    பாகம் பாகமாய் இணைத்து
    பாவாணர் முன்னமர்ந்து
    பாங்கி நீயும் சுவைத்து
    பாடலாய்ப் பாட வைத்து
    பாருக்குச் சொல்லென இணைத்து
    வாவென அழைத்தேனிங்கு
    பன்னூறு பாக்கள் முனைந்து
    பண்ணுகிறார் காதல் கலந்து.
    இன்னூறும் பல்சுவை நிறைந்து
    நன்னூறு இலக்கியம் பிறந்து
    கண்ணேறுபடாது வரைந்து
    பெண்ணாகத் தனியே உயர்ந்து
    விண்ணேறும் புகழ் படர்ந்து
    நண்ணுதல் நலம் பெருக்கும்.
    2014
    Vetha Langathilakam :@ N.M..மிக மகிழ்ச்சி.
    நன்றி.
    நலங்கள் பெருகட்டும்.!
    2014
    Verona Sharmila :- அழகு தமிழில் சுவையான வரிகள்..வாழ்த்துகள்

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: