62. கவிதை பாருங்கள்(photo,poem)

jaappu

யாப்பு.

காப்பிட முடியாக் கடல்
யாப்பிலக்கணம் உயர்வு, பெரிது.
யாப்பு – கட்டுதல், கவியென்பர்.
யாப்பின் அத்திவாரம் இரண்டசை.
கூப்பிடுவது நிரையசை, நேரசை.
யாப்பு தோப்பாவது அசைகளால்.

24-11-13

(காப்பு – வேலி, மதில்)

Technique_Tuesday_Stamp_Set_Borderline_Vintage_Lace-3

10. கலையும் கற்பனையும்.(கைவினை)

mine 338 mine 339

10. கலையும் கற்பனையும்.(கைவினை)

இங்கு நீங்கள் பார்ப்பது கரடிக் குட்டியின் முகம். என்னால் காகிதக் கூழில் செய்த முகமூடி.
இங்கு குழந்தைகள் நிகழ்ச்சியாக பம்ச,(Bamse) குயிலிங் (kylling) – கரடிக்குட்டியும் கோழிக் குஞ்சும் என்ற நிகழ்வு மிகப் பிரபலமானது. அதில் வரும் கரடிக் குட்டியின் முகம் இப்படி இருக்கும். குழந்தைகள் பராமரிப்புப் பற்றி 3 வருடம் டெனிஸ் மொழியில் படித்த போது முதலாவது வருடம் கைவேலைப் பாடத்தில் இதைச் செய்ய விரும்பினேன்.
இது முதலில் பலூனை ஊதிக் கட்ட வேண்டும்.
செய்திப் பத்திரிகைகளைத் துண்டு துண்டாகக் கிழித்துத் தண்ணிரில் இரவு முழுக்க ஊற வைத்து, மறுநாள் கைளால் பிசைந்தால் காகிதக் கூழாக வரும். இந்தக் கூழை பலூனின் மேல் மிகத் தடித்த பட்டையாக சம அளவில் போட வேண்டும். பசையும் பாவிக்க வேண்டும். சுவர் பேப்பர் ஒட்டும் பசை அல்லது நாங்களாக நீர் கொதிக் வைத்து சிறிது ஆற விட்டு மாவைக் கலந்தும் பசை செய்யலாம்.
பின்னர் ஓரிரு நாட்கள் காய விட்டு முகத்திற்கு ஏற்ற அளவில் வெட்ட வேண்டும்.
மேலும் ஒரு சிறிய பலூனில் இது போலச் செய்து அரை வட்டமாக வெட்டி மூக்குப் போன்று முகத்தில் ஒட்ட வேண்டும். (மண்ணிறம் பூசிய பகுதி)
இவைகள் நன்கு காய மஞ்சள் நிறம் தீட்ட வேண்டும். இங்கு அந்தத் தொலைக் காட்சி நிகழ்ச்சிக்கு மஞ்சள் நிறமே பாவித்தார்கள்.
கண்களிற்கு இரண்டு வட்டம் வெட்டல், தோல் துணியில் காது உரு வரைந்து வெட்டி, பசையால் காதுகளை உரிய இடத்தில் ஒட்ட வேண்டும். 1990ம் ஆண்டு என் முதல் வருடப் படிப்பில் செய்தது.
இந்த முறை அதை வெளியே எடுத்து பேரனுக்குக் காட்டிய போது, நான் போட, சிரித்தார். தான் போட மறுத்து விட்டார்.
கண்ணாடிப் பொலிதீன் உறையில் போட்டு தூசிகள் படாது வெளியே தெரியக் கூடியதாக உயரத்தில் வைத்திருந்தேன்.
பார்த்து ரசியுங்கள்.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
1-12-2013.

48176-Royalty-Free-RF-Clipart-Illustration-Of-A-Border-Of-Rainbow-Lines

Next Newer Entries