302. மழலை இன்பம்.

73th b'day 190

மழலை இன்பம்.

கலகலத்து அவிழ்ந்து சொரியும்
சலசலப்புச் சிரிப்பு அலையாய்
கணகணக்கும் மனதுள் இன்பம்
தகதகத்து ஒளிர்தல் வைரம்.

பளபளவெனக் கண்கள் மின்ன
மளமளவென மழலை அவிழ்ந்து
குபுகுபுவென மனதுள் புகுந்து
சொதசொதவென உயிரை நனைக்கும்

கமகமவென இல்லம் மணக்க
கிளுகிளுக்கும் மழலை மொழியால்
குளுகுளுவென மனதில் ஊட்டி.
பொலபொலவென உதிரட்டு மிறையாசி.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
9-1-2014.

baby-items

27 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 10, 2014 @ 03:29:16

  அடடா…! அனைத்து வரிகளும் மனதை மகிழ்வித்தன…

  வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 2. mahalakshmivijayan
  ஜன 10, 2014 @ 04:46:10

  Happy GrandMotherhood 🙂

  மறுமொழி

 3. iniya
  ஜன 10, 2014 @ 05:03:58

  மழலையோடு மகிழ்ந்திருக்கும் வேளை
  கிளு கிளுப்பாய் கவிதையும் பொழிந்ததோ

  நன்று ரசித்தேன் ….! அழகான படமும் தந்து மகிழ்ச்சி வாழ்த்துக்கள்….!
  புதிய ஆக்கம் இட்டு இருக்கிறேன். முடிந்தால் பாருங்கள்.

  மறுமொழி

 4. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஜன 10, 2014 @ 07:13:55

  வணக்கம்

  மனதில் தித்திக்கும் வரிகள் ….வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 5. வை. கோபாலகிருஷ்ணன்
  ஜன 10, 2014 @ 07:21:14

  மழலைகள் உலகம் மகத்தானது.

  http://gopu1949.blogspot.com/2011/11/blog-post_4556.html.

  அவைதரும் இன்பம் எப்போதுமே இனிப்பானது. பகிர்வுக்கு நன்றிகள்.

  மறுமொழி

 6. Rajarajeswari jaghamani
  ஜன 10, 2014 @ 13:35:06

  கமகமவென இல்லம் மணக்க
  கிளுகிளுக்கும் மழலை மொழியால்
  குளுகுளுவென மனதில் ஊட்டி.
  பொலபொலவென உதிரட்டு மிறையாசி.

  இரட்டைக்கிளவியாய் அன்பும் இன்பமும் நிரம்பிய கவிதை..!பாராட்டுக்கள்..!

  மறுமொழி

 7. Mrs.Mano Saminathan
  ஜன 10, 2014 @ 13:49:00

  //பளபளவெனக் கண்கள் மின்ன
  மளமளவென மழலை அவிழ்ந்து
  குபுகுபுவென மனதுள் புகுந்து
  சொதசொதவென உயிரை நனைக்கும்//

  உண்மை தான்! நானும் குட்டிப்பேரனின் மழலையை அனுபவித்துக்கொன்டிருப்பதால் உங்கள் கவிதையின் உயிர் நாதம் என்னையும் சுண்டி இழுக்கிற்து வேதா! கவிதையின் ஒவ்வொரு வரியும் தேன் சுவையாய் இதயத்துள் இறங்கியது! அருமையான கவிதைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!

  மறுமொழி

 8. karanthai jayakumar
  ஜன 10, 2014 @ 14:44:34

  குழல் இனிது யாழ் இனிது என்பார் மக்கள் தம் மழலைச் சொல் கேளாதவர்

  மறுமொழி

 9. வெற்றிவேல்
  ஜன 11, 2014 @ 04:53:30

  மனதை மகிழ்விக்கும் இரட்டைக்கிளவிகள்…

  அருமை…

  மறுமொழி

 10. வேல்
  ஜன 11, 2014 @ 09:40:22

  மழலை இருக்கும் இல்லம் கலகலப்பான இல்லம்

  அருமை

  மறுமொழி

 11. கீதமஞ்சரி
  ஜன 11, 2014 @ 23:35:46

  கலகலக்கும் இரட்டைக்கிளவி மனம் நிறைத்துப் போகிறது. உங்களோடு எங்கள் வாழ்த்தும் என்றென்றும் வெற்றிக்குண்டு. பொலபொலவென்று உதிரட்டும் இறையாசி.

  மறுமொழி

 12. sujatha
  ஜன 17, 2014 @ 19:38:06

  அடுக்குமொழியில் மழலை இன்பம் காணும் குதூகலம். அவை
  அடுக்குமொழியில் கவிநயம் பிறந்து தவழ்கின்றது பேர்த்தியின்
  குதூகலத்தில். அருமை…. வாழ்த்துக்கள்!!!.

  மறுமொழி

 13. கோவை கவி
  ஜன 27, 2014 @ 08:02:54

  From FB:-
  முத்து பாலகன்:-
  இது எல்லையில்லா பிள்ளைத் தமிழின்பம்

  Vetha ELangathilakam:-
  aam!……

  மறுமொழி

 14. வெற்றிவேல்
  பிப் 21, 2014 @ 12:31:29

  மனதை குளிர்விக்கும் வரிகள்…

  இரட்டைக்கிளவிய சரியா பயன்படுத்தியிருக்கீங்க….

  பாராட்டுக்கள்…

  மறுமொழி

 15. கோவை கவி
  மார்ச் 26, 2019 @ 12:12:08

  சிறீ சிறீஸ்கந்தராசா:- “கலகலத்து அவிழ்ந்து சொரியும்
  சலசலப்புச் சிரிப்பு அலையாய்

  கணகணக்கும் மனதுள் இன்பம்
  தகதகத்து ஒளிர்தல் வைரம்.
  **** அருமை அம்மா!! மிகவும் நன்றி!!
  2014

  Rajaji Rajagopalan :- உங்கள் பேரனுக்கு உதிரட்டும் இறைவனின் ஆசி.
  2014
  Vetha Langathilakam Mullai Amuthan, ஸ்ரீமுருகன் Thiyakara and Ganesalingam Ganes Arumugam like this.
  2014
  Verona Sharmila :- கமகமவென இல்லம் மணக்க
  கிளுகிளுக்கும் மழலை மொழியால்
  குளுகுளுவென மனதில் ஊட்டி.
  பொலபொலவென உதிரட்டு மிறையாசி.
  2014

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: