303. தைப் பொங்கல்.

imagesCAHTU674-,,

தைப் பொங்கல்.

பொங்கற் பானையில் வண்ணம் வரைந்து
தொங்கிட மாவிலை சுற்றிக் கட்டி
எங்கும் சுற்றி முற்றம் பெருக்க
எந்தன் வளையல் ”கிளுங்” ஙெனக் குலுங்கும்.

முற்றத்தில் மஞ்சள் நீர் தெளித்தும்
முழுமதியாய்க் கோமயம் அழகுடன் மெழுகுவோம்.
மாக்கோலம் இட்டதும், மூன்று கற்களடுப்பாகும்.
மகிழ்வோடு அப்பா பொங்கற் பானையேற்றுவார்.

பால் பொங்கி வழியும், அப்பா
பானையி லிடுவார் பச்சரிசி பயறு.
பக்குவமாக, சர்க்கரை, கசுக்கொட்டை, முந்திரிகை
பாசமாய்க் கலந்திட அம்மா தருவார்.

கதிரோனுக்குப் படையலினைப் பெற்றோ ரிடுவர்
கருத்தாய் சகேதரர்கள் தேவாரம் பாடுவோம்.
கன்னற் பொங்கல் சுவைத்து, உறவினரிடம்
களிப்பாய்க் கூட்டமாய் உலாச் செல்வோம்.

ஈழத்தில் வந்த எம்மூர்ப் பொங்கலிது.
ஈங்கண் இங்கிது இணையப் பொங்கலோ!
ஈழத்தில் நடக்கட்டும் நியாயங்கள் என்றும்
ஈசனும் பொங்குவான் எம்மோடு சேர்ந்து.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
12-1-2014.

(ஈங்கண் – இவ்விடம்)

1506999_653097511421002_435142777_n

23 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. பி.தமிழ் முகில்
  ஜன 12, 2014 @ 20:26:14

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் கவியே !!!

  மறுமொழி

 2. Rajarajeswari jaghamani
  ஜன 13, 2014 @ 04:11:19

  கதிரோனுக்குப் படையலினைப் பெற்றோ ரிடுவர்
  கருத்தாய் சகேதரர்கள் தேவாரம் பாடுவோம்.
  கன்னற் பொங்கல் சுவைத்து, உறவினரிடம்
  களிப்பாய்க் கூட்டமாய் உலாச் செல்வோம்.

  இனிய பொங்கல் வாழ்த்துகள்..!

  மறுமொழி

 3. iniya
  ஜன 13, 2014 @ 04:44:03

  தங்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்…..!

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 13, 2014 @ 05:43:41

  தித்திக்கும் தைப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 5. sujatha
  ஜன 13, 2014 @ 06:08:54

  பொங்கலோ பொங்கல் கவிதையில் பொங்குகின்றது. புதியன பொங்கட்டும். இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!! “கவிதாயினி வேதா“

  மறுமொழி

 6. வை. கோபாலகிருஷ்ணன்
  ஜன 13, 2014 @ 07:17:09

  நல்லதோர் கவிதை. கரும்பெனக் கடித்து சுவைத்து மகிழ்ந்தோம்.

  அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  மறுமொழி

 7. கோவை கவி
  ஜன 13, 2014 @ 07:42:40

  பொங்கலோடு தேசிய உணர்வும் பொங்கி இருப்பது அருமை !

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோ !
  -sravani.

  Vetha:-
  Mikka nary. Samme to you.

  மறுமொழி

 8. அ.பாண்டியன்
  ஜன 13, 2014 @ 08:08:58

  சகோதரிக்கு வணக்கம்
  கவிதை மிக நன்று. தங்களுக்கும் இல்லத்தாருக்கும் சிறப்பாக தங்கள் பெயரனுக்கும் எனது உளம்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்

  மறுமொழி

 9. Mrs.Mano Saminathan
  ஜன 13, 2014 @ 12:41:07

  இனிய பொங்கல் வாழ்த்துக்கள்…..!

  மறுமொழி

 10. karanthaijayakumar
  ஜன 14, 2014 @ 04:03:31

  பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 11. கவிஞா்
  ஜன 14, 2014 @ 22:13:16

  வணக்கம்!

  திருவள்ளுவா் ஆண்டு 2045
  இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்
  தங்கத் தமிழ்போல் தழைத்து!

  பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
  எங்கும் இனிமை இசைத்து!

  பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
  சங்கத் தமிழாய்ச் சமைத்து!

  பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை!
  கங்குல் நிலையைக் கழித்து!

  பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை!
  எங்கும் பொதுமை இசைத்து!

  பொங்கல் திருநாள் புதுக்கட்டும் சாதிமதம்
  தொங்கும் உலகைத் துடைத்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  மறுமொழி

 12. கோவை கவி
  ஜன 12, 2018 @ 11:20:09

  Natarajan Mariappan:- //பொங்கற் பானையில் வண்ணம் வரைந்து
  தொங்கிட மாவிலை சுற்றிக் கட்டி
  எங்கும் சுற்றி முற்றம் பெருக்க
  எந்தன் வளையல் ”கிளுங்” ஙெனக் குலுங்கும்.//

  //ஈசனும் பொங்குவான் எம்மோடு சேர்ந்து// … அழகு தமிழ் ஆலமர ஊஞ்சல் கட்டி ஆடுகிறது! ..தொடரட்டும் சகோதரி! தங்கள் சொற்காலம் !! பொங்கல் வாழ்த்துகள்! பொங்கட்டும் மகிழ்ச்சிகள்!

  – யோகி ராம்சுரத்குமார்!

  Muthulingam Kandiah :- தமிழர்களின் (உழவர்) தனிப்பெரும் திருநாள் பொங்கல் தினம்..அருமையான கவிதை..இப்பொங்கல் ஆதவனுக்கு அளிக்கும் அன்பான கானிக்கை

  Mageswari Periasamy :- அருமை தோழி. பழையன கழிதலும், புதியன புகுதலும், எங்கும் அன்பும் பாசமும் வளமும் பெருகிட ஈசன் அருள் புரியட்டும். ஆதவனுக்கு நன்றி கூறி தங்களுக்கு எமது பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். கவிதையின் தித்திப்பு போல உமது வாழ்விலும் என்றும் நிலைக்கட்டும் இனிமைகள்.

  Rajalakshmi Paramasivam :- பொங்கல் வாழ்த்துக்கள் தோழி.

  மறுமொழி

 13. கோவை கவி
  ஜன 12, 2018 @ 11:27:35

  12-1-2014 comments:-

  Chembiyan Valavan :- இனிய பொங்கல் வணக்கங்கள் அம்மா ….

  சிறீ சிறீஸ்கந்தராஜா கதிரோனுக்குப் படையலினைப் பெற்றோ ரிடுவர்
  கருத்தாய் சகேதரர்கள் தேவாரம் பாடுவோம்.
  கன்னற் பொங்கல் சுவைத்து, உறவினரிடம்

  களிப்பாய்க் கூட்டமாய் உலாச் செல்வோம்.
  *******இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா!!

  Nadaa Sivarajah :- தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் …..

  யாழ். இலக்கியக் குவியம்:- தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் .
  1

  K Shiva Kumar · Friends with Jeeva Kumaran and 18 others
  தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

  Seeralan Vee:- தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நெஞ்சம் நிறைந்த தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  Ganesalingam Arumugam :- இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  Vetha Langathilakam :- பொங்கலன்று முற்பகல் 10.44க்கு ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் வாழ்த்து நிகழ்ச்சியில் இக் கவிதையை வாசித்த வசந்தா சந்திரனுக்கு மனமார்ந்த நன்றி. மிகத் தெளிவாக நன்றாக வாசித்திருந்தீர்கள் நன்றி…நன்றி……

  Geetha Mathi:- சிறுவயது பொங்கல் நினைவுகளை அழகாகப் படம்பிடித்த கவிதை. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  Loganadan Ps :- நன்றி. உங்களுக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

  Abiramy Vinokanda :- Thax a lot happy pongal

  Sivasuthan Sivagnanam:- mikavum nandri amma …. iniya pongal nal vaalththukkal ….

  இளம் பரிதியன்:- நன்று… வாழ்த்துகள்….

  Thilaka Rasi:- Happy Pongal wishes

  Gomathy Arasu:- மலரும் நினைவுகளை தாங்கிய பொங்கல் வாழ்த்துக் கவிதை. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: