304. தனித்தன்மை பலம்.

kalai

தனித்தன்மை பலம்.

எனக்கொரு நிறம் குணம் மணம்
எனது மனம் மகிழ் நந்தவனம்!
எனக்கது நிறைவு அரிய இன்பம்.
உனது நிறம் மணம் குணம்
உனது மனம் நிறை பூங்காவனம்.
எனக்கு மனம் கவர் நீலம் பிடிக்கும்
உனக்கு உவப்பான செம்மை நிறம்
எனது மனதுக்கும் செம்மை பிடிக்கும்.

எனது நீலத்தில் சிவப்பைக் கலந்தால்
புது நிறமாகக் கத்தரி பிறக்கும்.
உனது சிவந்த தனித்தன்மை மறையும்.
எனது நீலத் தனித்தன்மை குறையும்.
நமது தனித்தன்மை நமது பலம்.
நமது பலத்தைப் பலவீனமாக்குவதா!
மனிதத் தன்மை பிரகாசப் பக்கம்.
மறைந்த நிலைமை மங்கிய பக்கம்.

தானாய்ப் பழுக்கும் பழச்சுவை இனிப்பு.
தட்டிப் பறித்தலில் இல்லை சிறப்பு.
சுதந்திரச் சிந்தனைச் செயற்பாடு இனிப்பு
சுதந்திரத்தில் பிறரது தலையீடு வெறுப்பு.
நான் நானாக இருத்தல் இசைவு.
நீ நீயாக இருத்தல் புனைவு.
நானோ நீயோ பிரம்மா தானோ!
அவரவர் படைப்பும் தனித்தன்மை சொல்லும்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
27-2-2004.

stock-photo-flower-line-for-border-and-frame-different-version-in-my-portfolio-11545657

26 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  ஜன 19, 2014 @ 09:18:15

  அன்றைய (2004) யெர்மனியச் சஞ்சிகை கலைவிளக்கில் பிரசுரமான கவிதை —சில திருத்தங்களுடன் – விடுபட்ட வரியுடன்.

  மறுமொழி

 2. வை. கோபாலகிருஷ்ணன்
  ஜன 19, 2014 @ 09:29:38

  //அவரவர் படைப்பும் தனித்தன்மை சொல்லும்.//

  தங்களின் தனித்தன்மையை ஓரளவு உணர முடிகிறது.

  இருப்பினும் எல்லோருக்கும் எல்லாமே பிடிக்கும் என்று சொல்வதற்கு இல்லை.

  ஒவ்வொருவரின் ருசியும் தனித்தன்மை வாய்ந்தவை. ;)))))

  சிறப்பான ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்..

  மறுமொழி

 3. வை. கோபாலகிருஷ்ணன்
  ஜன 19, 2014 @ 09:31:30

  //அன்றைய (2004) யெர்மனியச் சஞ்சிகை கலைவிளக்கில் பிரசுரமான கவிதை —சில திருத்தங்களுடன் – விடுபட்ட வரியுடன்.//

  மீண்டும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 19, 2014 @ 09:44:25

  திருத்தத்துடன் ஒவ்வொரு வரியும் சிறப்பு…

  வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 5. Rajarajeswari jaghamani
  ஜன 19, 2014 @ 09:44:54

  நான் நானாக இருத்தல் இசைவு.
  நீ நீயாக இருத்தல் புனைவு.
  நானோ நீயோ பிரம்மா தானோ!
  அவரவர் படைப்பும் தனித்தன்மை சொல்லும்.

  (2004) யெர்மனியச் சஞ்சிகை கலைவிளக்கில் பிரசுரமான கவிதைக்கு
  இனிய வாழ்த்துகள்..!

  மறுமொழி

 6. karanthaijayakumar
  ஜன 19, 2014 @ 11:14:54

  ஒவ்வொரு வரியும் சிறப்பான வரிகள்
  சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 7. T.N.MURALIDHARAN
  ஜன 19, 2014 @ 14:08:53

  சிறப்பான கவிதை . தனித்தன்மையுடன் ஜொலிக்கிறது

  மறுமொழி

 8. iniya
  ஜன 19, 2014 @ 23:17:32

  தானாய்ப் பழுக்கும் பழச்சுவை இனிப்பு.
  தட்டிப் பறித்தலில் இல்லை சிறப்பு.
  சுதந்திரச் சிந்தனைச் செயற்பாடு இனிப்பு
  சுதந்திரத்தில் பிறரது தலையீடு வெறுப்பு.
  நான் நானாக இருத்தல் இசைவு.
  நீ நீயாக இருத்தல் புனைவு.
  நானோ நீயோ பிரம்மா தானோ!
  அவரவர் படைப்பும் தனித்தன்மை சொல்லும்.

  உண்மை உண்மை
  ஒவ்வொரு வரிகளும் தனித்தன்மை வாய்ந்தவை ரசித்தேன்.

  நன்றி தொடர வாழ்த்துக்கள்….!

  மறுமொழி

 9. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஜன 20, 2014 @ 00:24:16

  வணக்கம்
  சகோதரி

  ஒவ்வொரு வரிகளும் தன்நம்பிக்கை ஊட்டும் விதமாக உள்ளது சிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும்…வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 10. mahalakshmivijayan
  ஜன 21, 2014 @ 03:59:59

  அருமை அருமை சகோதரி! நாம் நாமாக இருக்கும் போது மட்டுமே நம் தனிதன்மையோடு சிறப்புற செயல் பட முடியும்! மிக அருமையான கவிதை 🙂

  மறுமொழி

 11. Seeralan
  ஜன 23, 2014 @ 08:48:41

  இனிய கவிதை
  இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்

  மறுமொழி

 12. yarlpavanan
  ஜன 23, 2014 @ 10:28:22

  சிறந்த பகிர்வுக்கு நன்றி.

  மறுமொழி

 13. கீதமஞ்சரி
  ஜன 23, 2014 @ 23:53:06

  சுயம் உணர்த்தும் ஒவ்வொரு வரியையும் ரசித்து வியந்தேன். பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 14. கோவை கவி
  மார்ச் 26, 2019 @ 12:16:14

  Aathi Parthipan :- Mika nanru Akka (y)
  2014
  Aathi Parthipan :- நமது தனித்தன்மை நமது பலம் (y)
  2014:-
  சி.வெற்றிவேல் சாலைக்குறிச்சி :- நாமாகவே இருப்போம் எப்போதும்… சிறப்பான கவிதை…
  2014
  Stella Kandiah :- தனித்தன்மை இழந்தால் தொலைந்து விடுவோம் இல்லையா?
  2014
  Seeralan Vee :- தானாய்ப் பழுக்கும் பழச்சுவை இனிப்பு.
  தட்டிப் பறித்தலில் இல்லை சிறப்பு. ………இனிய கவிதை வாழ்க வளமுடன்
  2014
  சிறீ சிறீஸ்கந்தராசா :- நன்று!! வாழ்த்துக்கள் அம்மா!!
  2014

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: