305. பக்குவ மனது.

644273_543540262367989_1305973671_n

பக்குவ மனது.

அனுபவத்தோடு அறிவு பிறக்கும்.
அகங்காரமழிந்து அன்பு தவழும்.
அறங்கள் கூடுமென்றால் மனிதம்
சிறந்ததைத் தினமும் கைப்பற்றலாம்.
உறவாடும் வழியில் குறளியாடும்
உறுத்தல்கள் முற்றாக அழிக்கலாம்.

சங்கீத மனதின் அபசுரம்
சங்கடமாக்கும் சுப சுரத்தை.
சந்தேகசுரம் கீதம் சிதைக்கும்,
சுகதேக சுகம் பகைக்கும்.
நம்பிக்கை கீதம் ஆரோகணிக்கட்டும்!
அவநம்பிக்கை நாதம் அவரோகணிக்கட்டும்!

பிரேமையானவன் பிரேமை தேடுவான்.
பிரச்சனையானவன் பிரச்சனை தேடுவான்.
பிரயோசனப் பொழுது நற்பிரசாதமாகும்.
பிரதிக்னையோடு பக்குவம் பெறலாம்.
பிரயோசன வாழ்வின் பிரார்த்தனைகள்
பிரவாகமாகி நற்பலன் பெறட்டும்.

விலங்கிலிருந்து விடை கொடுக்க
கலங்குபவனுக்குக் கைகொடுக்க
பலவீனனுக்குப் பலம் கொடுக்க
பக்குவ மனது அடியெடுக்கும்.
பக்குவமனப் பதறாத நிதானம்
சிக்கலின் போதும் சிதறாத விதானம்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
8-3-2003.

2686814t0wzzlw0rl

25 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 22, 2014 @ 13:24:37

  ஒவ்வொரு வரியும் உண்மை… அருமையாகச் சொல்லி உள்ளீர்கள் சகோதரி…

  வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 2. ramani
  ஜன 22, 2014 @ 22:26:06

  பக்குவம் மனம் தந்த கவிதை அற்புதம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 3. karanthaijayakumar
  ஜன 23, 2014 @ 01:05:58

  பக்குவக் கவிதை அருமை
  நன்றி சகோதரியாரே

  மறுமொழி

 4. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஜன 23, 2014 @ 02:55:08

  வணக்கம்
  சகோதரி

  கவிதையின் வரிகள் …சிறப்பு.. வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 5. இரவின் புன்னகை- வெற்றிவேல்
  ஜன 23, 2014 @ 07:04:16

  பக்குவமான கவிதை…

  தொடருங்கள்…

  மறுமொழி

 6. Seeralan
  ஜன 23, 2014 @ 08:43:54

  பக்குவ மென்பதே பண்போ டிணையும்நல்
  சுக்கையாம் வாழ்வின் சுடரொளியாம் – யாக்கைநீர்
  மொக்குளே என்றுணரும் ஆக்கம் மொழிந்தகவி
  மக்களைச் சேரும் மலர்ந்து !

  அழகிய ஆழமான கருத்துக் கொண்ட
  கவிதை இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்

  மறுமொழி

 7. yarlpavanan
  ஜன 23, 2014 @ 10:33:11

  உள(மன)ப் பக்குவம்
  பல
  வெற்றிகளுக்கு வழிவிடுமே!

  மறுமொழி

 8. கீதமஞ்சரி
  ஜன 23, 2014 @ 23:55:20

  கவிதை முழுவதும் இனித்தாலும் இரண்டாவது பத்தி இனிதே மனங்கொள்ளை கொள்ளும் அழகு. பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 9. கோமதி அரசு
  ஜன 24, 2014 @ 07:32:02

  பக்குவமனப் பதறாத நிதானம்
  சிக்கலின் போதும் சிதறாத விதானம்.//

  அருமையாக சொன்னீர்கள் சகோதரி.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 10. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 25, 2014 @ 00:44:26

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_25.html) சென்று பார்க்கவும்… நன்றி…

  மறுமொழி

 11. sujatha
  ஜன 27, 2014 @ 06:00:25

  கலங்குபவனுக்குக் கைகொடுக்க

  பலவீனனுக்குப் பலம் கொடுக்க

  பக்குவ மனது அடியெடுக்கும்.

  பக்குவமனப் பதறாத நிதானம்

  சிக்கலின் போதும் சிதறாத விதானம்.
  அருமை……பக்குவத்தை பக்குவமாக கற்றிடும் போது மனதும் பக்குவமடைகின்றது. வாழ்த்துக்கள்.!!!

  மறுமொழி

 12. iniya
  ஜன 28, 2014 @ 02:02:13

  மனம் பக்குவம் உவக்கும் கவிதையும் பக்குவம் !

  மிக்க மகிழ்ச்சி !. நன்றி வாழ்த்துக்கள்….!

  மறுமொழி

 13. கோவை கவி
  மார்ச் 26, 2019 @ 13:00:31

  Seeralan Vee :- பக்குவ மென்பதே பண்போ டிணையும்நல்
  சுக்கையாம் வாழ்வின் சுடரொளியாம் – யாக்கைநீர்
  மொக்குளே என்றுணரு மாக்கம் மொழிந்தகவி
  மக்களைச் சேரும் மலர்ந்து !
  அழகிய ஆழமான கருத்துக் கொண்ட
  கவிதை இனிய வாழ்த்து வாழ்க வளமுடன் also blog
  2014

  Vetha Langathilakam Mullai Amuthan, Pushpalatha Gopalapillai, Ponnampalam Satkunam, Geetha Mathivanan,
  Inuvaiur Sakthythasan Kanagasababath Kasthu, Raj Kumar,
  சிறீ சிறீஸ்கந்தராஜா likes this.
  2014

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: