306. விண்ணும் வயப்படும்

1524960_808322755860725_543878358_n

விண்ணும் வயப்படும்

மொழியின் தேடலின் விரிவு அருத்தமாகும்
வழியும் இன்பம்அமைதி வசமாகும்.
எதுகை மோனை சந்தம் சீரிலும்
மதுகைப் பாவின் வரிகள் வசப்படும்.

இசைந்த தாளம் இனிய குரலிலும்
அசையும் இசை அரிதாய் வசப்படும்.
துள்ளி ஓடும் அருவி தடைகளையும்
தள்ளியுருட்டித் தன் பாதையை வசப்படுத்தும்.

கருணை வசப்படும் தர்ம மனதில.;
கல்வி வசப்படும் கூரிய மதியில்.
காதல் வசப்படும் அன்பு நெஞ்சில்.
வாழ்வு வசப்படும் எத்தனையோ வழியில்.

வீரிய முயற்சி கூரிய நோக்கில்
சீரிய கருத்து நேரிய நடையில்.
காரிருள் கலைய வானம் வசப்படும்.
பாரில் ஓரிடம் தானே நிசப்படும்.

அன்பு, மரியாதை, அணைப்பு, உள்வாங்கல்
இன்ப உலகை இதமாய் வசப்படுத்தும்.
மகத்துவ மனிதம் ஆறு அறிவானால்
மகத்துவங்கள் பலரிடம் வசப்படவில்லையே!

நின்று இளைப்பாற ஒரு மனிதன்!
சென்று கரை சேர இன்னொருவன்
ஊன்று கோலாக மற்றொருவனாகில்
என்றும் எளிதில் வானம் வசப்படாது.

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
12-2-2006.

Technique_Tuesday_Stamp_Set_Borderline_Vintage_Lace-3

28 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  ஜன 26, 2014 @ 00:13:32

  ,////கருணை வசப்படும் தர்ம மனதில.;
  கல்வி வசப்படும் கூரிய மதியில்.
  காதல் வசப்படும் அன்பு நெஞ்சில்=///
  அருமை சகோதரியாரே
  நன்றி.

  மறுமொழி

 2. Dr.M.K.Muruganandan
  ஜன 26, 2014 @ 01:32:36

  “….காதல் வசப்படும் அன்பு நெஞ்சில்.
  வாழ்வு வசப்படும் எத்தனையோ வழியில்…” அருமையான வரிகள்.

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 26, 2014 @ 01:46:24

  அருமையான வரிகள் சகோதரி… வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 4. கோமதி அரசு
  ஜன 26, 2014 @ 04:51:59

  கருணை வசப்படும் தர்ம மனதில.;
  கல்வி வசப்படும் கூரிய மதியில்.
  காதல் வசப்படும் அன்பு நெஞ்சில்.
  வாழ்வு வசப்படும் எத்தனையோ வழியில்.//
  அழகாய் சொன்னீர்கள்.
  அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 5. இரவின் புன்னகை- வெற்றிவேல்
  ஜன 26, 2014 @ 05:02:36

  சிறப்பான வரிகள்…

  கல்வி வசப்படும் கூரிய மதியில்.
  காதல் வசப்படும் அன்பு நெஞ்சில்..

  மறுமொழி

 6. Rajarajeswari jaghamani
  ஜன 26, 2014 @ 10:33:17

  அன்பு, மரியாதை, அணைப்பு, உள்வாங்கல்
  இன்ப உலகை இதமாய் வசப்படுத்தும்.
  மகத்துவ மனிதம் ஆறு அறிவானால்
  மகத்துவங்கள் பலரிடம் வசப்படவில்லையே!

  நிசமான வானம் வசப்படட்டும்..!

  மறுமொழி

 7. Seeralan
  ஜன 26, 2014 @ 11:46:43

  எல்லாம் வசப்படும் இனிய கவிதையில்

  அருமை இனிய வாழ்த்து
  வாழ்க வளமுடன்

  மறுமொழி

 8. yarlpavanan
  ஜன 27, 2014 @ 16:00:29

  “நின்று இளைப்பாற ஒரு மனிதன்!
  சென்று கரை சேர இன்னொருவன்
  ஊன்று கோலாக மற்றொருவனாகில்
  என்றும் எளிதில் வானம் வசப்படாது.” என்பது
  சிறந்த வழிகாட்டல் என்பேன்!

  மறுமொழி

 9. iniya
  ஜன 28, 2014 @ 01:50:22

  இசைந்த தாளம் இனிய குரலிலும்
  அசையும் இசை அரிதாய் வசப்படும்.
  துள்ளி ஓடும் அருவி தடைகளையும்
  தள்ளியுருட்டித் தன் பாதையை வசப்படுத்தும்.

  அருமை அருமை வாழ்த்துக்கள் ….!
  வாழ்க வளமுடன்

  மறுமொழி

 10. yarlpavanan
  ஜன 30, 2014 @ 05:03:20

  “அன்பு, மரியாதை, அணைப்பு, உள்வாங்கல்
  இன்ப உலகை இதமாய் வசப்படுத்தும்.” என
  நல்ல கருத்துகளைப் பகிரும்
  சிறந்த கவிதை!

  மறுமொழி

 11. Ramani S
  ஜன 31, 2014 @ 23:29:29

  வீரிய முயற்சி கூரிய நோக்கில்
  சீரிய கருத்து நேரிய நடையில்.//சுருங்கச் சொன்னால்
  தங்கள் அற்புதக் கவிதைகளைப் போல.

  ஆழமான சிந்தனையில் விளைந்த
  அற்புதக் கவிதை

  பகிர்வுக்கும் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 12. sujatha
  பிப் 02, 2014 @ 18:45:37

  கருணை வசப்படும் தர்ம மனதில்

  கல்வி வசப்படும் கூரிய மதியில்.

  காதல் வசப்படும் அன்பு நெஞ்சில்.

  வாழ்வு வசப்படும் எத்தனையோ வழியில்.
  அருமை…. அருமை…. வாழ்த்துக்கள்.!!!! தமிழ் பணி தொடரட்டும்.

  மறுமொழி

 13. jramanujam
  பிப் 07, 2014 @ 12:27:38

  துள்ளி ஓடும் அருவி தடைகளையும்
  தள்ளியுருட்டித் தன் பாதையை வசப்படுத்தும்.

  உண்மைதான்! கவிதை நன்று!

  மறுமொழி

 14. கோவை கவி
  செப் 10, 2014 @ 21:05:13

  Nagalingham Gajendiran likes this.

  Nagalingham Gajendiran :-
  பா ஆக்கம் மிக நன்று !

  Vetha Langathilakam:-
  mikka nanry bro..

  மறுமொழி

 15. கோவை கவி
  ஜன 30, 2018 @ 16:11:21

  சிறீ சிறீஸ்கந்தராஜா:- “இசைந்த தாளம் இனிய குரலிலும்
  அசையும் இசை அரிதாய் வசப்படும்.
  துள்ளி ஓடும் அருவி தடைகளையும்

  தள்ளியுருட்டித் தன் பாதையை வசப்படுத்தும்.”
  அற்புதமான கருத்துகள்!! வாழ்த்துக்கள் அம்மா!!
  12-2-2006

  Ganesalingam Arumugam :- வாழ்த்துக்களும் இனிய மாலை வணக்கமும்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: