307. ஆழமறியாமலே….

canada_01

ஆழமறியாமலே….

மாய வார்த்தைகள் மாறும் சிரிப்பின்
சாயம் விளங்காது சமரச மனமென்று
சான்றோர் அவரென்று சாதிக்க வேண்டினால்
சந்தனம் பூசுவதாய்ச் சகதியும் பூசுப்படும்.

பச்சைக் கிளி காணும் பூனையின்
இச்சையின் ஆழம் மச்சவெறி நோக்கு.
மெச்சும் மனிதமன ஆழமுமிப்படியே
உச்ச நிலையற்ற மனிதமன நோக்கே.

பின்னணி மறைத்து பிட்டுக்கு மண்சுமந்து
பிரம்படி பெற்றார் பரமன் உலகறியும்.
முன் வினைகளறியாது மூக்குடைபடுவதும்
முழு ஆழமறியாத கால்நனைப்புத் தான்.

ஆழமறியாமலே ஆற்றி லிறங்கி மூழ்குவதும்
ஆழமறிந்து நீந்தி வெளி வருதலும்
ஆழ்மனசு அனுமதித்த சுய தீர்மானமே.
ஆழமறியாமலே ஒதுங்குதலும் அவரவர் தீர்மானமே.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
15-1-2006.

16161859-ab

23 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 29, 2014 @ 14:27:30

  சிந்திக்க வைத்த கவிதை வரிகள்…

  /// ஆழ்மனசு அனுமதித்த சுய தீர்மானமே… /// உண்மை சகோதரி…

  வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 2. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஜன 29, 2014 @ 16:30:41

  வணக்கம்
  சகோதரி…

  கவிதையின் வரிகள் மிக நன்றாக உள்ளது… தங்களின் கவிதையை படித்த பின் கொஞ்சம் கவனம் தேவை..போல உள்ளது… வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 3. karanthaijayakumar
  ஜன 30, 2014 @ 00:40:15

  ///ஆழ்மனசு அனுமதித்த சுய தீர்மானமே.
  ஆழமறியாமலே ஒதுங்குதலும் அவரவர் தீர்மானமே.////
  அருமை சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 4. வெற்றிவேல்
  ஜன 30, 2014 @ 01:41:43

  சிந்திக்க வைத்த கவிதை…

  பட்டும் உணரலாம் படாமலும் உணரலாம் என்பதை சிறப்பாக உணர்த்திய கவிதை…

  மறுமொழி

 5. கோமதி அரசு
  ஜன 30, 2014 @ 05:21:46

  ஆழமறியாமலே ஆற்றி லிறங்கி மூழ்குவதும்
  ஆழமறிந்து நீந்தி வெளி வருதலும்
  ஆழ்மனசு அனுமதித்த சுய தீர்மானமே.
  ஆழமறியாமலே ஒதுங்குதலும் அவரவர் தீர்மானமே.//

  தீர்மானம் சரியாக இருக்க வேண்டும் என்று சொல்லும் கவிதை அருமை.
  வாழ்த்துக்கள்..

  மறுமொழி

 6. yarlpavanan
  ஜன 30, 2014 @ 05:25:41

  “ஆழமறியாமலே ஆற்றி லிறங்கி மூழ்குவதும்
  ஆழமறிந்து நீந்தி வெளி வருதலும்
  ஆழ்மனசு அனுமதித்த சுய தீர்மானமே.
  ஆழமறியாமலே ஒதுங்குதலும் அவரவர் தீர்மானமே.” என்பது
  கவிஞரின் சிறந்த வழிகாட்டல்!
  “ஆழமறிந்து காலை வையடா” என்று
  அன்று பெரியோர்கள் சொன்னதை
  கவிஞர் அழகாக விளக்கியுள்ளார்!

  மறுமொழி

 7. தென்றல்சசிகலா
  ஜன 30, 2014 @ 06:35:51

  தீர்மானம் பற்றிய திடமான சிந்தனை தங்கள் வரிகளில் கண்டோம் மகிழ்ச்சிங்க.

  மறுமொழி

 8. Rajarajeswari jaghamani
  ஜன 30, 2014 @ 14:24:25

  ஆழமறியாமலே ஆற்றி லிறங்கி மூழ்குவதும்
  ஆழமறிந்து நீந்தி வெளி வருதலும்
  ஆழ்மனசு அனுமதித்த சுய தீர்மானமே.
  ஆழமறியாமலே ஒதுங்குதலும் அவரவர் தீர்மானமே.

  ஆக்கபூர்வமான சிந்தனை வரிகள்..!

  மறுமொழி

 9. Ramani S
  ஜன 31, 2014 @ 23:25:44

  பச்சைக் கிளி காணும் பூனையின்
  இச்சையின் ஆழம் மச்சவெறி நோக்கு.
  மெச்சும் மனிதமன ஆழமுமிப்படியே
  உச்ச நிலையற்ற மனிதமன நோக்கே

  மிகச் சரியாகச் சொன்னீர்கள்
  மனம் போலத்தானே வாழ்வு

  பாலும் தேனுமாய்
  பொருளும் வார்த்தைகளும்
  பின்னிப் பிணைந்து மயக்கும்
  அற்புதப்படைப்பு

  பகிர்வுக்கும் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்துக்கள்//

  .

  மறுமொழி

 10. sujatha
  பிப் 02, 2014 @ 18:42:59

  அருமை…….ஆழமறியாது காலைவிடும்போது நடக்கும் சம்பவங்கள் வாழ்க்கையை கூட மாற்றிவிடும். மிகவும் அபாயமானது. அருமையாக கவிநயத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்.!!!!

  மறுமொழி

 11. கோவை கவி
  பிப் 02, 2018 @ 11:52:09

  Feb.– 2015 comments:-

  Geetha Mathi :- அற்புதமான வாழ்வியல் சித்தாந்தம் அழகிய தமிழினிமையோடு. பாராட்டுகள் தோழி.

  Vithyasagar Vidhyasagar:- //ஆழமறியாமலே ஆற்றி லிறங்கி மூழ்குவதும்
  ஆழமறிந்து நீந்தி வெளி வருதலும்
  ஆழ்மனசு அனுமதித்த சுய தீர்மானமே// இது நல்ல தெளிவு சகோதரி..

  Mackbeth Thevarajah · Friends with Verona Sharmila:-
  Wish you many more happy returns of the day

  Kanagasundram Sundrakumar:- Good Morning

  Vetha Langathilakam:- good morning!….

  Loganadan Ps :- கவிதையிலும் தத்துவம், அறிவுரை. அற்புதம்

  Ganesalingam Arumugam :- வாழ்த்துக்களும் இனிய காலை வணக்கமும்.

  மறுமொழி

 12. கோவை கவி
  பிப் 02, 2018 @ 11:59:24

  feb: 2015 comments-

  Verona Sharmila: பின்னணி மறைத்து பிட்டுக்கு மண்சுமந்து
  பிரம்படி பெற்றார் பரமன் உலகறியும்.
  முன் வினைகளறியாது மூக்குடைபடுவதும்
  முழு ஆழமறியாத கால்நனைப்புத் தான்… அருமை

  Mageswari Periasamy :- அருமை. நம் வாழ்வும் தாழ்வும் நம் முயற்சியில்தான் இருக்கின்றது என்று அருமையாக, ஆணித்தரமாக சொல்லியிருக்கின்றீர்கள் தோழி. பாராட்டுக்கள்.

  Gowry Nesan :- ஆழமறியாமலே ஆற்றி லிறங்கி மூழ்குவதும்
  ஆழமறிந்து நீந்தி வெளி வருதலும்
  ஆழ்மனசு அனுமதித்த சுய தீர்மானமே.

  ஆழமறியாமலே ஒதுங்குதலும் அவரவர் தீர்மானமே.

  அழகான வரிகள்! வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 13. கோவை கவி
  மார்ச் 26, 2019 @ 13:09:28

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan :- கருத்தோட்டம் மிக்க நல்ல கவிதை
  2014
  Vithyasagar Vidhyasagar:- //ஆழமறியாமலே ஆற்றி லிறங்கி மூழ்குவதும்
  ஆழமறிந்து நீந்தி வெளி வருதலும்
  ஆழ்மனசு அனுமதித்த சுய தீர்மானமே// இது நல்ல தெளிவு சகோதரி..
  2014
  Mackbeth Thevarajah :- Wish you many more happy returns of the day
  2014
  சுந்தரகுமார் கனகசுந்தரம் :- Good Morning
  2014
  Vetha Langathilakam :- good morning!….
  2014
  Loganadan Ps :- கவிதையிலும் தத்துவம், அறிவுரை. அற்புதம்
  2014
  Verona Sharmila :- பின்னணி மறைத்து பிட்டுக்கு மண்சுமந்து
  பிரம்படி பெற்றார் பரமன் உலகறியும்.
  முன் வினைகளறியாது மூக்குடைபடுவதும்
  முழு ஆழமறியாத கால்நனைப்புத் தான்… அருமை

  Mageswari Periasamy அருமை. நம் வாழ்வும் தாழ்வும் நம் முயற்சியில்தான் இருக்கின்றது என்று அருமையாக, ஆணித்தரமாக சொல்லியிருக்கின்றீர்கள் தோழி. பாராட்டுக்கள்.
  2014
  Gowry Nesan :- ஆழமறியாமலே ஆற்றி லிறங்கி மூழ்குவதும்
  ஆழமறிந்து நீந்தி வெளி வருதலும்
  ஆழ்மனசு அனுமதித்த சுய தீர்மானமே.

  ஆழமறியாமலே ஒதுங்குதலும் அவரவர் தீர்மானமே.
  அழகான வரிகள்! வாழ்த்துக்கள்!
  2014

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: