308. தொடர் கதை……

butterfly girl

தொடர் கதை……

துன்பநிலை வாழ்வில் தானாக வருவதில்லை,
அந்த நிலை வாழ்வில் நாமாகத் தொடும் எல்லை.
சொந்த மனதில் சோதனை விரக்தி நிறைந்தால்
சிறுமனம் திரிந்து எரிந்து புகையும்.
பொறுமைக் குணம் பற்றி முற்றாக அணைந்தால்
நாம் தூங்க நல்ஞானம் தூங்குவதால்,
ஆம் என்று சோகம் தானாய்ப் புகுதலே.
ஆன்ம தவம், தர்மநெறி நீறு பூப்பதால்
ஆன்மாவின் ஆழ் அமைதி அவிந்து போதலே.
ஆழ்ந்து பார்த்தால் அதுவுமொரு தொடர் கதையே.
22-2-2004.

http://www.vaarppu.com/view/2074/

16161859-vector-set-of-vintage-calligraphic-ornaments

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Ramani S
  ஜன 31, 2014 @ 23:20:43

  துன்பநிலை வாழ்வில் தானாக வருவதில்லை,
  அந்த நிலை வாழ்வில் நாமாகத் தொடும் எல்லை.//

  ஆழமான கருத்துடைய
  அற்புதமான வரிகள்

  தீதும் நன்றும் பிறர் தர வருவதை விட
  நாமாக உண்டாக்கிக் கொள்வதுதானே அதிகம்
  மனம் கவர்ந்த கவிதை
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  பிப் 01, 2014 @ 01:47:08

  நடப்பதெல்லாம் நன்மைக்கே என்பதை விட நடப்பதெல்லாம் நம்மளாலே என்று எனது இரண்டு பகிர்வுகளில் சொன்னது சரி தான்… வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 3. karanthaijayakumar
  பிப் 01, 2014 @ 02:15:06

  ///ஆழ்ந்து பார்த்தால் அதுவுமொரு தொடர் கதையே.===
  உண்மை அருமை
  நன்றி சகோதரியாரே

  மறுமொழி

 4. kowsy
  பிப் 02, 2014 @ 19:44:13

  உண்மை உலகில் யாரும் தேடாமல் எதுவும் நடக்குமா. அவர்களாகவே அனைத்தையும் தேடிக் கொள்கின்றார்கள் .சிறு மனத்தில் பொறுமைக் குணம் தேவை

  மறுமொழி

 5. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  பிப் 05, 2014 @ 08:19:07

  வணக்கம்
  சகோதரி

  சரியான கருத்தை சரியான முறையில் கவிவடிவில் சொல்லிய விதம் அருமை வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 6. iniya
  பிப் 07, 2014 @ 21:02:40

  துன்பநிலை வாழ்வில் தானாக வருவதில்லை,
  அந்த நிலை வாழ்வில் நாமாகத் தொடும் எல்லை.//

  அப்போ பாவ புண்ணியங்களுக்கேற்ப தானாக வருவது இல்லையா?
  சிந்திக்க வைத்து விட்டீர்கள். நாம் தானா காரணம். இப்போ என்ன செய்வது தோழி ! எல்லாம் விதி என்று பழி போட முடியாமல் போய் விட்டதே. ஹா ஹா . நன்றி தொடர வாழ்த்துக்கள்…!

  மறுமொழி

 7. sujatha
  பிப் 08, 2014 @ 19:41:38

  துன்பநிலை வாழ்வில் தானாக வருவதில்லை,
  அந்த நிலை வாழ்வில் நாமாகத் தொடும் எல்லை.
  சிந்தனையாக சிந்திக்கவும் வைக்கின்றது. அருமை…வாழ்த்துக்கள்.!!!

  மறுமொழி

 8. saraswathi
  ஏப் 30, 2014 @ 02:50:38

  visit http://bommuvinthedal.blogspot.in oru manthira thodar….kuzhainthagal mthal periyavar
  varai rasika vaikum thodar…

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 30, 2014 @ 06:34:10

   பொம்முவின் தேடல் – சென்றேன். பாதியுடன் நிறுத்திவிட்டேன்.
   மிக மிக நீளமாக உள்ளது . கதை நன்றாகச் சென்றது.
   இனிய வாழ்த்து.
   கருத்திடலிற்கு மகிழ்ந்தேன்.
   இனிய நன்றி.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: