311. எழுத்தெனும் உழவு.

feather_pen_and_ink_of_old_days_writing_materials-wide

எழுத்தெனும் உழவு.

பாரதி பனுவல்களிதோ! சுவை!
பாசமாய் அப்பா காட்டினார்.
பள்ளிக் கூடம் திருக்குறளை
அள்ளியள்ளி எனக்கு ஊட்டியது.
வளமுடை சமூகக் கருத்துகள்
வாழ்விற்கு வரமென வழிகாட்டியது.
வரிகளின் திறனால் காலத்திற்கும்
வாழ்கிறது எழுதியவர் சிறப்பு.

குட்டி வயதின் நாற்று
பட்டுக்கோட்டையார், கண்ணதாசன்
பட்டு வரிகளால் வேரிட்டதென்னுள்
கேட்ட இசைகளாலும் வரிகளுன்றியது
நானுமெழுதலாம் என்ற எண்ணம்
தானாயெழுந்தது தமிழின் காதலால்
மேலான குடும்ப சமூகசேவைகள்
காலானது எழுதுகோல் உழவிற்கு.

ஊடகங்களுள் புகுந்தேன் தமிழோடு
ஊடாடி உழவைத் தொடங்கினேன்.
செய்திவாசிப்பு, பாமாலை, சிந்தனைகள்
சிறுகட்டுரையெனத் தொடர்ந்தது பயணம்.
புழுதி துடைக்கும் உயர்வுடை
பழுதற்ற சமூகசேவை இது.
எழுதியெழுதி என்னை வளர்க்கிறேன்.
எழுதுவதால் என்னையுலகு அறிகிறது.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
2012.

divisor_manos

311. இசைவாக்கு வெற்றியை..

16220130-v-gold-letter-with-swirly-ornaments-l

இசைவாக்கு வெற்றியை..

ஓடியாடி உழைத்தல் ஓயாத விடாமுயற்சி.
ஓப்பில்லா வெற்றிக்கனி, ஒருமுக ஆர்வம்,
ஒருமித்த அர்பணிப்பு ஒன்றும் சுலபமல்ல.

இலேசாக வெற்றி இசைவாக இறைந்திடாது.
இசை பலவருடங்கள், இனிய நடனமுமதே.
இலக்கை படாதபடாய் அடைவதே முயற்சியே!

தடைகளை அகற்ற, தகாததை அசட்டை செய்து
தக்கதை விடாப்பிடியாக தளர்தலற்றுத் துணிவுடன்
தகவு பெறலாம் தன்மானத்துடன் தளரா நடையாக.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
22-2-2014.

12965393-se

66. கவிதை பாருங்கள்(photo,poem)

1383988_574107469327152_1204695361_n-1pp

சந்தேகம்.

சந்தேகம் ஆழமிகு
புண்தேகம், வன்தேகம்.
பொன்தேக நட்பை
இல்லக வாழ்வை
செல்லரித்து அழிக்கும்.
நல்ல பெற்றோராய்
பொல்லாச் சந்தர்ப்பம்
வில்லேந்தி நலமழிக்கும்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
30-1.14

karishma + album + frames +photos + background + new marriage frames karishma frames - background -album - sekar - photo shop - marriage album frames -  8

lines-flowers-and-nature-415906

310. இதயம் நந்தவனமாகட்டும்.

217591_329133543859168_1563562016_n

இதயம் நந்தவனமாகட்டும்.

அச்சம் தெளிக்கும்
மிச்சமான உலகு!
இச்சம் விலகாத
உச்ச ஆசைகள்
பச்சைக் கருவாகட்டும்
இச்சைப் பாக்களிற்கு.

ஆனந்தியுங்கள் தினம்
ஊனமற்ற எண்ணங்களை
ஏனம் ஆக்குங்கள்.
தானமாகட்டும் இன்பம்!
கானகமல்ல இதயம்!
கூனலற்ற எண்ணமுயரட்டும்.

(இச்சம் – விருப்பம். ஏனம் – பாத்திரம்)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
16-2-2014.

imagesCAGJ44D2

47. காஞ்சனக் கதிரால்……

imagesCACW0R0G

அனைவருக்கும் இனிய காதலர்தின வாழ்த்துகள்.!

காஞ்சனக் கதிரால்……

பேராண்மைப் பேரழகன்
வேரான அன்பாளன்
தாராள மனத்தாளன்
ஊராளும் தகுதியாளன்.

காதலுக்காய் ஏங்குவோரை
காந்தவிழி விரித்துடன்
காஞ்சனக் கதிராலவன்
சாந்தமாக்கும் கட்டழகன்.

மயங்கும் பொன்மாலையும்
துயங்கும் பெண்மையும்
முயங்கும் காதலும்
உயங்காது இயங்கும்.

கன்னல் இளமையில்
இன்னல் தருமிது
பன்னீர் அன்பினால்
பின்னிப் பிணைத்திடும்.

பார்வை ஊஞ்சலில்
கோர்வை மொழிகளால்
தீர்வைத் தந்திடும்
கார்வை காதல்.

(காஞ்சன – பொன். முயங்கும் – தழுவுதல், பொருந்துதல்.
உயங்காது – துவளாது. கார்வை – இசைநாத நீட்சி.)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
13-2-2014.

Nyt billede

29. காதல் பற்றிய கேள்விகளின் பதில்கள்.

560222_555592744465255_1546753892_n

காதல் பற்றிய கேள்விகளின் பதில்கள்.

காதலர் தினம் வருவதால் இது பொருந்துமெனத் தருகிறேன். குழந்தைகளிடமிருந்து பெரியவர்களுக்கு. (From chjldren to adults) என்ற டெனிஸ் மொழிப் புத்தகத்திலிருந்து (Grethe dirckinck.Holmfeld) மொழி பெயர்த்தேன்.

காதல் பற்றிக் குழந்தைகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. டேனிஸ் பிள்ளைகள் தந்த பதில் இது.
சாதாரணமாக எமது இனக் குழந்தைகளிடம் கேள்விகள் கேட்டால் சில நேரங்களில், சில இடங்களில் பெற்றவரோ, வளர்ந்தவர்களோ பதிலையும் சொல்லிக் கொடுப்பார்கள்.

இது வித்தியாசமாகத் தெரிகிறது. நகைச் சுவையாகவும் உள்ளது. 7 – 8 வயதுப் பிள்ளைகளிடம் காதலை, காதலர்களைப் பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டது. பதில்களின் சுருக்கம் இதோ!…….

1 – ஸ்ரினா (Stina) 7 வயதுச் சிறுமி:-
”..ஓய்வு நேரப் பாடசாலைக்கு வரும் மார்ட்டின் என்னைக் காலிக்கிறான் என்று எனக்கு அவதானிக்க முடிகிறது. ஏனென்றால் நான் ஸ்ரொப் (நிறுத்து) என்றதும் அவன் அதைக் கேட்டு நடக்கிறான்..” என்கிறாள்.

2.- ”..ஒருவன் காதலில் விழுந்துவிட்டால் 5 நாளுக்குப் பால் குடிக்க முடியாது…” என்கிறான் சீமொன் 8 வயதுப் பையன்.

3.– ”..ஒருவன் காதலில் விழுந்தால் அது இருதயம் இறைச்சியை முத்தமிடுவது போன்றது…” என்கிறான் 8 வயது ரொபியஸ்.

4. – ஒருவன் காதலில் விழுந்தால் அது ஒருவனுக்கு வயிற்றினுள் பிறந்தநாள் கொண்டாட்டம் போன்றது..” என்கிறாள் மிக்கேலா 8 வயது.

5.- ”.. தெருவில் நடக்கும் பொது ஒருவரையொருவர் இடிக்கும் போது ஆண் கூறுகிறான் மன்னியங்கள் என்று. அதற்குப் பெண் பரவாயில்லை என்றால் பிறகு அவர்கள் ஒரு இடத்தில் ஒன்றாகச் சேர்ந்து வாழவும் கூடும்..” என்கிறாள் 7 வயது அனா.

6 – ஒரு நாட்டுப் புறப் பண்ணையில் வாழும் 8 வயதுச் சிறுவன் சோண் (Sorn) கூறுகிறான்…” பட்டினத்து நடுப்பகுதியில் பல நங்கைகள் வாழுகின்றனர். ஒருவன் தனக்கொரு காதலை நடுப்பட்டினத்தில் கண்டு கொள்வானாயின் பண்டிகளைக் கவனித்துப் பேணி வளர்க்க அவனுக்கு விருப்பமில்லை என்பது கருத்தாகும்…” என்கிறான்.

என்ன நேயர்களே!….சில நகைச்சுவையாகவும் இவர்கள் சிந்தனைப் போக்கு வேறு மாதிரியும் உள்ளதல்லவா!

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
1-11-2003.

line3

65. கவிதை பாருங்கள்(photo,poem)

1382088_627741077276817_2114952148_n-dd

வஞ்சம் சினம் குரோதம்
அஞ்சும் வகையின் விரோதம்
எஞ்ச விடாது எதையும்.
சிதைந்த மனது மேலும்
புதைந்து செயலிழக்கும்.
சிதைக்க எண்ணியும் கறுவைக்கும்.
(கறுவைக்கும் – மனவைரம் கொள்ளல்)
9-1-14.

482912_341246915991107_1167620669_n+0

reflection-swirl-2

309. தலைமை.

 

1476125_481315021988994_1470005105_n

*

தலைமை

*

தலைமையென்பது சதுரங்க ஆட்டம்.
தலைவன் மட்டுமே காய்கள் நகர்த்துவான்.
தலையை மீறிக் காய்கள் நகர்ந்திடின்
தலைகீழாகத் தலையெழுத்து மாறும்.
அழுக்கு மனமில்லாத் தலைமை
வழுக்கும் மனமற்ற தலைமை
ஒழுக்க இதயத்து அஞ்சாமை
பழுத்த ஆய்வுள்ளம் தலைமைத் தேவை.

*

நிறுவன நிர்வாகம் தலைவன் சொந்தம்.
மருவிலாக் கூட்டுறவு ஊழியர் பந்தம்.
குலையாத குழுநிலைக் கூட்டுறவுப் பணி
விலையற்ற உயர்வை எட்டும் ஏணி.
தலைவன் செயலைத் தானெடுக்கும் ஊழியன்
நிலைக்கும் சனநாயகக் கூட்டுறவையழிப்பான்.
அதிகாரத் துர்பிரயோகம் அவத்தைக் கலக்கம்.
அதன்விதியை மாற்றும் நிர்வாக ஒழுக்கம்.

*

சட்டம் அமைந்து நிலைக்கும் பிரவாகம்
திட்டம் அமைத்த ஒழுக்க நிர்வாகம்.
மேலான நிர்ணயம் தலைவன் சாற்றுவான்
கீழ்படியும் ஊழியன் தலைவனடியொற்றுவான்.
இருக்குமிடத்தில் யாவும் இருந்துவிட்டால்
பெருகிடும் நிறுவன ஆய்வுத் தேட்டங்கள்.
                                   மெருகிடும் நிர்வாக இயக்கத்தின் தரங்கள்.                                          அருகிடும் சார்பான புகழ்மிகு வரங்கள்.
வாழ்க நிர்வாகம்! வளர்க ஊழியர் பண்பு!

*

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
20-01-2010.

*

11497627-vintage-dividers-and-borders-set-for-ornate-and-decoration