309. துணிவு.

1476125_481315021988994_1470005105_n

துணிவு.

இடைஞ்சலை எதிர்நோக்கித் தாங்கும் பாங்கு
அடையும் மனித வரலாறு துணிவின் பங்கு.
விடையோ பல பரிமாணங்கள், சாதனைப் புதுமைகள்.
தடையற்ற உலக இயக்கக் காரணி துணிவாளர்கள்.

உடலாரோக்கியத்தால் பெறும் சாந்தம், உற்சாகம்
கடல் போல் நம்பிக்கையின் ஆதிப் பிறப்பகம்.
உடற் பலத்தில் வீரியக் குடை விரியும்.
நடை போடும் மனப்பலம் துணிவு.

துணிவின் அத்திவாரம் உண்மை, நேர்மை.
துணிவான உடலுளத்தின் அபிவிருத்தி ஆளுமை.
துணிவு முன்னிலை வகிக்கும் அச்சாரம்.
துணிவு முயற்சி பயிற்சியிலாகும் வித்தாரம்.

தயக்கம் பலவீனம் துன்பத்தின் காரணம்.
நயக்க முடிவெடுக்கும் அதிகாரம் சுயபூரணம்.
அச்சம், பலவீனம் வெல்லுதல் துணிவு.
மெச்சும் கருத்துருவாக்கல், வெளிப்படுத்தல் துணிவு.

தவறைத் தட்டிக் கேட்டல் துணிவு.
பிரச்சனைகள் சமாளிக்கும் திறன் துணிவு.
நல்லது, கெட்டது எடுத்துரைத்தல் துணிவு.
தம்பதிகளிற்குள் சமமான மதிப்பு துணிவு.

நேர்மைவாழ்வு மனம், உடலிற்குத் துணிவு.
சோம்பேறித்தன மற்றவர்கள் துணிவாளர்கள்.
தீமைகளைப் படைதிரட்டி எதிர்ப்பான் துணிவாளன்.
வாழ்வில் தடம்பதிப்பான் வல்லமையாளன், துணிவாளன்.

ஒழுக்க வாழ்வு துணிவிற்கு நற்பயிற்சி.
வழுக்காத துணிவின் நடுப்புள்ளி இதயம்.
அநியாயக் களை வளர்ந்து துணிவு
நியாயம் முடங்குதல் பெரும் குனிவு.

பா ஆக்கம் . வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
3-2-2014.

samme heading  – துணிவு.  another poem by me :     

https://kovaikkavi.wordpress.com/2012/05/23/237-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/

11497627-vintage-dividers-and-borders-set-for-ornate-and-decoration

Advertisements

19 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. yarlpavanan
  பிப் 03, 2014 @ 23:29:26

  “ஒழுக்க வாழ்வு துணிவிற்கு நற்பயிற்சி.
  வழுக்காத துணிவின் நடுப்புள்ளி இதயம்.
  அநியாயக் களை வளர்ந்து துணிவு
  நியாயம் முடங்குதல் பெரும் குனிவு.” என்பது
  நம்மாளுகளுக்குச் சிறந்த வழிகாட்டல்!

  தங்கள் தள முகவரியை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (http://thamizha.2ya.com) தளத்தில் இணைத்து உதவுங்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 20, 2014 @ 09:24:20

   அங்கு பதிக்கப் பட்டதற்கு மிக்க நன்றியும், மகிழ்ச்சியும்.
   இங்கு வரவு, கருத்திடல் மிக மகிழ்ச்சி, நன்றியும் உரித்தாகுக.

   மறுமொழி

 2. மகேந்திரன்
  பிப் 03, 2014 @ 23:37:17

  இனிய வணக்கம் வேதாம்மா..
  துணிவு எப்படி இருக்கவேண்டும்..
  எதில் இருக்கவேண்டும்..
  எப்படி துணிவைத் தருவித்துக் கொள்ளவேண்டும்
  துணிவுள்ளவர்கள் யார்..
  என அருமையான
  கவிதை கொடுத்திருக்கிறீர்கள் வேதாம்மா..
  அருமை.

  மறுமொழி

 3. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  பிப் 04, 2014 @ 03:23:16

  வணக்கம்
  சகோதரி

  கவிதையின் வரிகள் தித்திக்குது… ரசித்தேன் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  பிப் 04, 2014 @ 03:35:50

  // தயக்கம் பலவீனம் துன்பத்தின் காரணம் // உட்பட அருமையாக சொன்னீர்கள் சகோதரி…

  வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 5. ramani
  பிப் 04, 2014 @ 04:08:41

  துணிவு குறித்த அற்புதமான கவிதை
  கதம்பம் ஒன்று கொடுத்திருந்தது மகிழ்வளித்தது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 6. Rajarajeswari jaghamani
  பிப் 04, 2014 @ 07:58:42

  துணிவின் அத்திவாரம் உண்மை, நேர்மை.
  துணிவான உடலுளத்தின் அபிவிருத்தி ஆளுமை.
  துணிவு முன்னிலை வகிக்கும் அச்சாரம்.
  துணிவு முயற்சி பயிற்சியிலாகும் வித்தாரம்.

  துணிவான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  மறுமொழி

 7. karanthaijayakumar
  பிப் 06, 2014 @ 00:30:38

  துணிவு
  அருமை
  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 8. iniya
  பிப் 07, 2014 @ 20:52:51

  தவறைத் தட்டிக் கேட்டல் துணிவு.
  பிரச்சனைகள் சமாளிக்கும் திறன் துணிவு.
  நல்லது, கெட்டது எடுத்துரைத்தல் துணிவு.
  தம்பதிகளிற்குள் சமமான மதிப்பு துணிவு.

  துணிவு பற்றி கூறி துணிவை வளர்க்கவும் தட்டி எழுப்ப முயன்றமைக்கும் நன்றி…..! வாழ்த்துக்கள்….!

  மறுமொழி

 9. திண்டுக்கல் தனபாலன்
  பிப் 09, 2014 @ 02:24:19

  உங்களின் தளம் + இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-7.html) சென்று பார்க்கவும்… நன்றி…

  மறுமொழி

 10. கோவை கவி
  ஜூலை 19, 2015 @ 08:22:15

  அமீரகம் ஆடி தமிழ்த் தேர் இதழில் இக்கவிதை பிரசுரமானது.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: