29. காதல் பற்றிய கேள்விகளின் பதில்கள்.

560222_555592744465255_1546753892_n

காதல் பற்றிய கேள்விகளின் பதில்கள்.

காதலர் தினம் வருவதால் இது பொருந்துமெனத் தருகிறேன். குழந்தைகளிடமிருந்து பெரியவர்களுக்கு. (From chjldren to adults) என்ற டெனிஸ் மொழிப் புத்தகத்திலிருந்து (Grethe dirckinck.Holmfeld) மொழி பெயர்த்தேன்.

காதல் பற்றிக் குழந்தைகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. டேனிஸ் பிள்ளைகள் தந்த பதில் இது.
சாதாரணமாக எமது இனக் குழந்தைகளிடம் கேள்விகள் கேட்டால் சில நேரங்களில், சில இடங்களில் பெற்றவரோ, வளர்ந்தவர்களோ பதிலையும் சொல்லிக் கொடுப்பார்கள்.

இது வித்தியாசமாகத் தெரிகிறது. நகைச் சுவையாகவும் உள்ளது. 7 – 8 வயதுப் பிள்ளைகளிடம் காதலை, காதலர்களைப் பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டது. பதில்களின் சுருக்கம் இதோ!…….

1 – ஸ்ரினா (Stina) 7 வயதுச் சிறுமி:-
”..ஓய்வு நேரப் பாடசாலைக்கு வரும் மார்ட்டின் என்னைக் காலிக்கிறான் என்று எனக்கு அவதானிக்க முடிகிறது. ஏனென்றால் நான் ஸ்ரொப் (நிறுத்து) என்றதும் அவன் அதைக் கேட்டு நடக்கிறான்..” என்கிறாள்.

2.- ”..ஒருவன் காதலில் விழுந்துவிட்டால் 5 நாளுக்குப் பால் குடிக்க முடியாது…” என்கிறான் சீமொன் 8 வயதுப் பையன்.

3.– ”..ஒருவன் காதலில் விழுந்தால் அது இருதயம் இறைச்சியை முத்தமிடுவது போன்றது…” என்கிறான் 8 வயது ரொபியஸ்.

4. – ஒருவன் காதலில் விழுந்தால் அது ஒருவனுக்கு வயிற்றினுள் பிறந்தநாள் கொண்டாட்டம் போன்றது..” என்கிறாள் மிக்கேலா 8 வயது.

5.- ”.. தெருவில் நடக்கும் பொது ஒருவரையொருவர் இடிக்கும் போது ஆண் கூறுகிறான் மன்னியங்கள் என்று. அதற்குப் பெண் பரவாயில்லை என்றால் பிறகு அவர்கள் ஒரு இடத்தில் ஒன்றாகச் சேர்ந்து வாழவும் கூடும்..” என்கிறாள் 7 வயது அனா.

6 – ஒரு நாட்டுப் புறப் பண்ணையில் வாழும் 8 வயதுச் சிறுவன் சோண் (Sorn) கூறுகிறான்…” பட்டினத்து நடுப்பகுதியில் பல நங்கைகள் வாழுகின்றனர். ஒருவன் தனக்கொரு காதலை நடுப்பட்டினத்தில் கண்டு கொள்வானாயின் பண்டிகளைக் கவனித்துப் பேணி வளர்க்க அவனுக்கு விருப்பமில்லை என்பது கருத்தாகும்…” என்கிறான்.

என்ன நேயர்களே!….சில நகைச்சுவையாகவும் இவர்கள் சிந்தனைப் போக்கு வேறு மாதிரியும் உள்ளதல்லவா!

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
1-11-2003.

line3

23 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. கீதமஞ்சரி
    பிப் 09, 2014 @ 23:09:40

    குழந்தைகளுக்குள் இவ்வளவு கூரிய சிந்தனைகளா? நகைச்சுவையாகவும் அதே சமயம் குழந்தைகளின் மனத்தில் காதலைப் பற்றிய எண்ணங்கள் என்னவாகப் பதிந்திருக்கின்றன என்பதை அறிய வியப்பாகவும் உள்ளது. பகிர்வுக்கு நன்றி தோழி.

    மறுமொழி

    • கோவை கவி
      பிப் 28, 2014 @ 19:49:16

      ஆமாம் எனக்கும் ஆச்சரியமாக இருந்தது.
      அதனாலேயே போட்டேன். மற்றவர்களும் பார்க்கட்டும் என்று.
      கருத்திற்கு மிக்க நன்றியும் மகிழ்வும். இனிய நன்றி கீதமஞ்சரி.

      மறுமொழி

  2. karanthaijayakumar
    பிப் 10, 2014 @ 00:47:07

    குழந்தைகளின் மனத்தில் காதலைப் பற்றிய எண்ணங்கள் என்னவாகப் பதிந்திருக்கின்றன என்பதை அறிய வியப்பாகவும் உள்ளது.
    நன்றி சகோதரியாரே

    மறுமொழி

  3. T.N.MURALIDHARAN
    பிப் 10, 2014 @ 00:48:32

    சின்ன வயசுலேயே இவ்வளோ விஷயம் தெரிஞ்சு வச்சுருக்காங்களே!

    மறுமொழி

  4. கோமதி அரசு
    பிப் 10, 2014 @ 01:18:55

    டேனிஸ் பிள்ளைகள் சிறுவயதிலேயே நிறைய தெரிந்து இருக்கிறார்கள். காதலைப்பற்றி.
    பகிர்வுக்கு நன்றி.

    மறுமொழி

    • கோவை கவி
      பிப் 28, 2014 @ 19:52:27

      ”..டேனிஸ் பிள்ளைகள் சிறுவயதிலேயே நிறைய தெரிந்து இருக்கிறார்கள்….”
      ஆமாம் கருத்திற்கு மிக்க நன்றியும் மகிழ்வும்.
      இனிய நன்றி sis.

      மறுமொழி

  5. திண்டுக்கல் தனபாலன்
    பிப் 10, 2014 @ 02:29:52

    அடேங்கப்பா…! எப்படியெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்கள்…! ஹா… ஹா…

    மறுமொழி

  6. Rajarajeswari jaghamani
    பிப் 10, 2014 @ 03:05:16

    குழந்தைகளின் சிந்தனைப்போக்கு வியக்கவைக்கிறது..!

    மறுமொழி

  7. iniya
    பிப் 10, 2014 @ 04:37:46

    இந்தக் காலத்து பிள்ளைகள் நம் காலம் போலல்லாது புத்தி கூடியவர்கள் விபரம் புரிந்தவர்கள் தான் என்பதை நிரூபித்து விட்டார்கள்.

    மறுமொழி

  8. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
    பிப் 10, 2014 @ 05:12:50

    வணக்கம்

    காதல் பறிய கேள்வி பதில் சூப்பர் காதல் என்ற போதை மாத்திரை இதயத்தில் புகுந்தால் அவனே நாயகன் வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    மறுமொழி

  9. திண்டுக்கல் தனபாலன்
    பிப் 11, 2014 @ 02:48:23

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

    மேலும் விவரங்களுக்கு : http://blogintamil.blogspot.in/2014/02/blog-post_11.html

    மறுமொழி

  10. yarlpavanan
    பிப் 12, 2014 @ 14:58:31

    காதல் பற்றிய கேள்விகளின் பதில்கள் அழகாய் இருக்கு
    பதிலளித்தவர்களின் திறமையைப் பாராட்டுகிறேன்.

    மறுமொழி

  11. sujatha
    பிப் 24, 2014 @ 15:59:45

    “காதல்“ இடம் பார்த்து வருவதில்லை. ஆனாலும் குழந்தை பருவத்தில் வருவது இனம்புரியாத காதல். அதாவது பருவக்கோளாறு என்பார்கள். இதில் குழந்தைகள் வஞ்சகம் அறியாதவர்கள். எதையும் பயப்படாமல் கூறுவார்கள். அதிலும்
    காதலை பற்றி அவர்களிடம் கேட்கும் போது நகைப்பாகவும், சிந்திக்கவும் வைக்கின்றது. ஆனாலும் பெரியோர்களாகிய நாம்
    இச்சந்தர்ப்பத்தில் அறிவுரை கூறவது எதிர்காலத்திற்கு வழிகாட்டியாகின்றது. எது எனது கருத்து.

    மறுமொழி

  12. கோவை கவி
    பிப் 28, 2014 @ 19:56:55

    ஆமாம்.
    கருத்திற்கு மிக்க நன்றியும் மகிழ்வும்.
    இனிய நன்றி Suja.

    மறுமொழி

  13. கோவை கவி
    மார்ச் 26, 2019 @ 15:15:45

    Sakthi Sakthithasan :- அன்பினிய சகோதரியின் மற்றுமோர் அருமையான ஆக்கம்
    2014

    Vetha:- Mikka nanry urave….

    மறுமொழி

sujatha -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி