47. காஞ்சனக் கதிரால்……

imagesCACW0R0G

அனைவருக்கும் இனிய காதலர்தின வாழ்த்துகள்.!

காஞ்சனக் கதிரால்……

பேராண்மைப் பேரழகன்
வேரான அன்பாளன்
தாராள மனத்தாளன்
ஊராளும் தகுதியாளன்.

காதலுக்காய் ஏங்குவோரை
காந்தவிழி விரித்துடன்
காஞ்சனக் கதிராலவன்
சாந்தமாக்கும் கட்டழகன்.

மயங்கும் பொன்மாலையும்
துயங்கும் பெண்மையும்
முயங்கும் காதலும்
உயங்காது இயங்கும்.

கன்னல் இளமையில்
இன்னல் தருமிது
பன்னீர் அன்பினால்
பின்னிப் பிணைத்திடும்.

பார்வை ஊஞ்சலில்
கோர்வை மொழிகளால்
தீர்வைத் தந்திடும்
கார்வை காதல்.

(காஞ்சன – பொன். முயங்கும் – தழுவுதல், பொருந்துதல்.
உயங்காது – துவளாது. கார்வை – இசைநாத நீட்சி.)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
13-2-2014.

Nyt billede

20 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  பிப் 13, 2014 @ 23:53:35

  வணக்கம்
  சகோதரி

  தித்திக்கும் கவி வரிகள் இரசித்தேன் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  .இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  பிப் 14, 2014 @ 00:53:11

  ரசிக்க வைக்கும் வரிகள் சகோதரி…

  அன்பு தினம் என்றும் வேண்டும்…
  தினம் என்றும் அன்பாக வேண்டும்…

  வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 3. கோமதி அரசு
  பிப் 14, 2014 @ 01:40:48

  அருமையான் கவிதை வாழ்த்துக்கள்.
  அன்புக்கோர் திருவிழா அனபை காட்டும் பெருநாள் வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்.
  என்றும் அன்புடன் இருப்போம்.

  மறுமொழி

 4. bganesh55
  பிப் 14, 2014 @ 02:19:54

  அழகான தமிழில் காதல் பேசும் வரிகளை மிக ரசித்தேன்!

  மறுமொழி

 5. Rajarajeswari jaghamani
  பிப் 14, 2014 @ 03:26:28

  பார்வை ஊஞ்சலில்
  கோர்வை மொழிகளால்
  அருமையான கவிதை..பாராட்டுக்கள்..!

  மறுமொழி

 6. கிரேஸ்
  பிப் 14, 2014 @ 07:16:27

  //பார்வை ஊஞ்சலில்
  கோர்வை மொழிகளால்
  தீர்வைத் தந்திடும்
  கார்வை காதல்.// மிகவும் இரசித்தேன்..
  என்ன ஒரு சொல்லாடல்…அருமையான கவிதை!

  மறுமொழி

 7. வேல்
  பிப் 14, 2014 @ 14:14:34

  அன்பே உலகை இயக்கும்
  அதனை அருமையாய் உரைத்தீர்

  மறுமொழி

 8. கீதமஞ்சரி
  பிப் 16, 2014 @ 03:32:34

  ஒரு தேர்ந்த காதலனின் இலக்கணங்களை அழகுத் தமிழில் இயம்பி எம்மை அசத்தும் பங்குக்குப் பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 9. iniya
  பிப் 17, 2014 @ 14:56:42

  பேராண்மைப் பேரழகன்
  வேரான அன்பாளன்
  தாராள மனத்தாளன்
  ஊராளும் தகுதியாளன்.

  சாந்தமாக்கும் கட்டழகன்
  சந்திக்கவில்லை ஒரு சிந்தை
  ஒரு மங்கைக்கு மாலையிட
  மண்டியிடவும்வில்லை

  அழகான வரிகள் ரசித்தேன் தோழி.
  தொடர வாழ்த்துக்கள்…!

  மறுமொழி

 10. வெற்றிவேல்
  பிப் 18, 2014 @ 10:47:57

  வணக்கம் வேதாம்மா…

  இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்….

  ஒவ்வொரு அடியையும் எதுகையோடு சிறப்பாக எழுதியுள்ளீர்கள்… வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 11. கோவை கவி
  மார்ச் 02, 2014 @ 11:49:16

  மிக நன்றி V.V அன்பு வரிகளிற்கு.
  மகிழ்ந்தேன்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: