இதயம் நந்தவனமாகட்டும்.
அச்சம் தெளிக்கும்
மிச்சமான உலகு!
இச்சம் விலகாத
உச்ச ஆசைகள்
பச்சைக் கருவாகட்டும்
இச்சைப் பாக்களிற்கு.
ஆனந்தியுங்கள் தினம்
ஊனமற்ற எண்ணங்களை
ஏனம் ஆக்குங்கள்.
தானமாகட்டும் இன்பம்!
கானகமல்ல இதயம்!
கூனலற்ற எண்ணமுயரட்டும்.
(இச்சம் – விருப்பம். ஏனம் – பாத்திரம்)
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
16-2-2014.
பிப் 16, 2014 @ 12:59:36
/// ஆனந்தியுங்கள் தினம்
ஊனமற்ற எண்ணங்களை… //
ஆகா… அருமை சகோதரி… வாழ்த்துக்கள்…
மார்ச் 02, 2014 @ 11:50:05
மிக நன்றி D.D அன்பு வரிகளிற்கு.
மகிழ்ந்தேன்.
பிப் 18, 2014 @ 08:29:57
கானகமல்ல இதயம்!
கூனலற்ற எண்ணமுயரட்டும்.
பூத்துக்குலுங்கும் நந்தவனம் அழகு..!
மார்ச் 02, 2014 @ 11:50:33
மிக நன்றி sis அன்பு வரிகளிற்கு.
மகிழ்ந்தேன்.
பிப் 18, 2014 @ 09:48:05
வணக்கம்
சகோதரி
தங்களின் கவிதை இது மட்டுமல்ல பல கவிதைகள் என் நெஞ்சத்தை நந்தவனமாக்கியுள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மார்ச் 02, 2014 @ 11:51:48
மிக நன்றி Rupan அன்பு வரிகளிற்கு.
நந்தவனமாகவே மலருங்கள்.
மகிழ்ந்தேன்.
பிப் 18, 2014 @ 09:57:47
மனதில் உள்ள ஆசைகளையே பாக்களுக்கு கருவாகட்டும் என்று கூறிய
‘பச்சைக் கருவாகட்டும்
இச்சைப் பாக்களிற்கு’ வரிகள் அருமை வேதாம்மா….
மற்றவர்களுக்கு இன்பத்தை தானமாக வழங்கப் பழக்கப்பட்டு விட்டாள், இதயமும் வாழ்வும் நிச்சயம் நந்தவனம் தான்…
சிறப்பான கருத்தமைந்த பா…
வாழ்த்துக்கள்…
மார்ச் 02, 2014 @ 11:52:56
மிக நன்றி V.V அன்பு வரிகளிற்கு.
மகிழ்ந்தேன்.
பிப் 19, 2014 @ 07:52:38
அன்பு நிறைந்த நந்தவனமாக மனதையும், நாளைய லட்சியங்களே ஆசைகளாக மனதில் விதைத்து , ஊக்கம் தரும் எண்ணங்களே வாழ்வுக்கு வழிக்காட்டும் சிந்தனைகளை செயல்படுத்தி, நல்லவைகளை சந்தோஷங்களை எல்லோருக்கும் அள்ளிவழங்கி ஊனமும் கூனமும் இல்லாத இதயமாக நாள் தோறும் வெற்றிப்பெறட்டும் என்று வாழ்த்தும் அற்புதமான பாக்கள் வேதாம்மா.. அன்பு வாழ்த்துகள்.
மார்ச் 02, 2014 @ 11:53:46
மிக நன்றி Manchu sis அன்பு வரிகளிற்கு.
மகிழ்ந்தேன்.
பிப் 22, 2014 @ 21:03:01
ஆனந்தியுங்கள் தினம்
ஊனமற்ற எண்ணங்களை
ஏனம் ஆக்குங்கள்.
தானமாகட்டும் இன்பம்!
கானகமல்ல இதயம்!
கூனலற்ற எண்ணமுயரட்டும்.
அருமையான எண்ணங்கள் அழகு மிளிரும் வரிகள் !
தொடர வாழ்த்துக்கள் தோழி
மார்ச் 02, 2014 @ 11:54:15
மிக நன்றி sis Iniya அன்பு வரிகளிற்கு.
மகிழ்ந்தேன்.