311. எழுத்தெனும் உழவு.

feather_pen_and_ink_of_old_days_writing_materials-wide

எழுத்தெனும் உழவு.

பாரதி பனுவல்களிதோ! சுவை!
பாசமாய் அப்பா காட்டினார்.
பள்ளிக் கூடம் திருக்குறளை
அள்ளியள்ளி எனக்கு ஊட்டியது.
வளமுடை சமூகக் கருத்துகள்
வாழ்விற்கு வரமென வழிகாட்டியது.
வரிகளின் திறனால் காலத்திற்கும்
வாழ்கிறது எழுதியவர் சிறப்பு.

குட்டி வயதின் நாற்று
பட்டுக்கோட்டையார், கண்ணதாசன்
பட்டு வரிகளால் வேரிட்டதென்னுள்
கேட்ட இசைகளாலும் வரிகளுன்றியது
நானுமெழுதலாம் என்ற எண்ணம்
தானாயெழுந்தது தமிழின் காதலால்
மேலான குடும்ப சமூகசேவைகள்
காலானது எழுதுகோல் உழவிற்கு.

ஊடகங்களுள் புகுந்தேன் தமிழோடு
ஊடாடி உழவைத் தொடங்கினேன்.
செய்திவாசிப்பு, பாமாலை, சிந்தனைகள்
சிறுகட்டுரையெனத் தொடர்ந்தது பயணம்.
புழுதி துடைக்கும் உயர்வுடை
பழுதற்ற சமூகசேவை இது.
எழுதியெழுதி என்னை வளர்க்கிறேன்.
எழுதுவதால் என்னையுலகு அறிகிறது.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
2012.

divisor_manos

15 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  பிப் 26, 2014 @ 01:28:43

  எழுதுகோலை ஏந்தியவருக்கு
  ஊன்று கோல் தேவையில்லை
  உடல் மட்டுமல்ல உள்ளம்
  தளராது

  மறுமொழி

 2. Dindigul Dhanabalan (DD)
  பிப் 26, 2014 @ 02:53:10

  அருமை சகோதரி… பழுதற்ற சமூகசேவை தொடர வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 3. ramani
  பிப் 26, 2014 @ 12:06:55

  என்போன்றோருக்கு தங்கள் எழுத்து
  நல்ல வழிகாட்டியாகவும் உள்ளது
  தொடர்ந்து தங்கள் கவிதைப் பணியது தொடர
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 4. yarlpavanan
  பிப் 27, 2014 @ 06:44:34

  தங்கள்
  எழுத்து முயற்சி தொடர
  வாழ்த்துகள்…
  தங்கள் பதிவுகளில்
  பயன் தரும் தகவல் இருக்கும்
  அவை
  பலருக்கு வழிகாட்டலாகவும் இருக்கும்

  மறுமொழி

 5. iniya
  மார்ச் 01, 2014 @ 06:22:04

  எழுதும் வித்தை தெரிந்தவர் எழுதுங்கள். எண்ணத்தை வடியுங்கள்
  வரிகளாய் அது வாய்கால் வழியோடி புல்லுக்கும் பொசியட்டும்.
  நன்றி ! வாழ்த்துக்கள்….!

  மறுமொழி

 6. கீதமஞ்சரி
  மார்ச் 03, 2014 @ 12:19:15

  எழுத்தெனும் உழவால் எங்கள் உள்ளங்களில் தமிழை விதைக்கும் மாபெரும் நற்செயலைப் புரியும் தங்களுக்கு சிறப்பான பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 7. sujatha
  மார்ச் 04, 2014 @ 05:53:13

  எழுத்தறிவு ஒரு மனிதனை எந்தளவிற்கு சமூக பணிக்கு இழுத்து
  செல்கின்றது. அதிலும் தங்கள் தமிழ்பணியுடனான எழுத்துப்பணி
  தமிழனாக இருந்து வளர்ந்த பெருமையையும் தட்டிச்செல்கின்றது.
  வாழ்க தமிழ்!!!!! வளர்க தங்கள் பணி!!!!

  மறுமொழி

 8. கோவை கவி
  மார்ச் 03, 2018 @ 18:06:10

  Vetha Langathilakam:- Nanry M.Kumaran…
  2014
  Sakthi Sakthithasan :- அன்பினிய சகோதரி, எழுத எழுந்த உங்கள் ஆர்வத்தின் அடையாளங்களைத் தமிழ் வரிகளினால் அழகுற மெருகூட்டி தந்திருக்கும் பாங்கு அற்புதம்
  2014
  Vetha Langathilakam:- Mikka nanry S:S
  2014
  வசந்தா சந்திரன் :- அருமை.))

  2015Verona Sharmila :- அருமை..

  Vetha Langathilakam :- mikka nanry all of you.
  2015

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: