312. முத்தம்.

afte Malay12,214 062

முத்தம்.

பாசத்தின் நெருக்கம்.
நேசத்தின் நெருக்கம்.
நெருங்கும் முத்திரை.
சிருங்கார மோகத்திரை.

உணர்வு வாயிற்படி.
உடற்சங்கமப் படி.
ஓத்தியுமெடுக்கலாம்.
ஓன்றுக்குள் ஒன்றாகலாம்.

தேனாற்றில் நீந்தி
தேனையே அருந்தி
இதழ் குவிப்பில்
இதழ் சிவத்தல்.

உயிரின் ஊக்குவிப்பு.
உணர்வின் தேடல்.
உள்ளத்துக் காதல்
உடலிற்கு அரங்கேற்றம்.

காதலின் எரிசக்தி.
கொடுப்பதும் எடுப்பதும்
கொள்ளளவு சமமானால்
காவியத்திற் குயர்த்தும்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
2013.

27873_600

23 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Bagawanjee KA
  மார்ச் 03, 2014 @ 10:10:57

  சத்தமில்லாமல் முத்தம் உட்டலில் இவ்வளவும் செய்வது அதிசயம் தான் !

  மறுமொழி

 2. கீதமஞ்சரி
  மார்ச் 03, 2014 @ 12:21:06

  அன்பின் வெளிப்பாடாய் அகம் நிறைக்கும் ஆனந்தம் அளிக்கும் முத்தத்துக்கு நிகராய் ஒரு முத்திரைக் கவிதை. வெகுவாய் ரசித்தேன் தோழி.

  மறுமொழி

 3. raveendran sinnathamby
  மார்ச் 03, 2014 @ 14:55:02

  உயிரின் ஊக்குவிப்பு.
  உணர்வின் தேடல்.
  உள்ளத்துக் காதல்
  உடலிற்கு அரங்கேற்றம்.//

  அருமையான வரிகள்.ஓசை கூடினால் இன்னும் வலிமை பெறும்.

  வதிரி-சி.ரவீந்திரன்.

  மறுமொழி

 4. yarlpavanan
  மார்ச் 03, 2014 @ 15:15:03

  “உணர்வு வாயிற்படி.
  உடற்சங்கமப் படி.
  ஓத்தியுமெடுக்கலாம்.
  ஓன்றுக்குள் ஒன்றாகலாம்.” என்ற
  அடிகளை விரும்புகிறேன்…
  சிறந்த கவிதை!

  மறுமொழி

 5. karanthaijayakumar
  மார்ச் 03, 2014 @ 15:21:21

  மழலைகளை கொஞ்சி மகிழ்வதற்கு நிகராய்
  வேறு ஆனந்தம் ஏது
  அருமையான கவிதை
  நன்றி சகோதரியாரே

  மறுமொழி

 6. Rajarajeswari jaghamani
  மார்ச் 03, 2014 @ 15:42:29

  காவியத்திற் குயர்த்தும்
  அருமையான ஆக்கம்..பாராட்டுக்கள்..!

  மறுமொழி

 7. திண்டுக்கல் தனபாலன்
  மார்ச் 03, 2014 @ 16:45:28

  கவிதை அருமை சகோதரி…

  வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 8. பி.தமிழ் முகில்
  மார்ச் 03, 2014 @ 21:12:40

  கவிதை அருமை கவியே.பகிர்வுக்கு நன்றிகள்…

  மறுமொழி

 9. ramani
  மார்ச் 04, 2014 @ 00:04:20

  அற்புதமான கவிதை
  மிக மிக ஆழமாகச் சிந்திக்கவும்
  அற்புதமாக அதை வடிவமைக்கவும்
  உங்களால் மட்டும் எப்படி இயல்பாக முடிகிறது என
  ஆச்சரியப்படவைக்கும் அருமையான கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 10. வேல்
  மார்ச் 04, 2014 @ 14:25:29

  பெயரனோ
  பெயர்த்தியோ
  பேதையோ
  பேரழகனோ

  யார் பெற்றாலும்
  யார் கொடுத்தாலும்
  முத்தம் இனிது

  அவ்வுணர்வினை
  அருமையாய் சொன்னீர்

  மறுமொழி

 11. iniya
  மார்ச் 22, 2014 @ 04:25:00

  உயிரின் ஊக்குவிப்பு.
  உணர்வின் தேடல்.
  உள்ளத்துக் காதல்
  உடலிற்கு அரங்கேற்றம்.

  அருமையான படமும் பாசம் பேசும் கவி வரிகளும் அழகு !
  வாழ்த்துக்கள்…!

  மறுமொழி

 12. கோவை கவி
  ஏப் 27, 2014 @ 17:00:30

  IN FB:-
  Tharini Po :-
  உயிரின் ஊக்குவிப்பு.
  உணர்வின் தேடல்.
  உள்ளத்துக் காதல்
  உடலிற்கு அரங்கேற்றம்…////அருமை….

  Yashotha Kanth:-
  அருமை அக்கா …

  Vetha.:- Thank you Tharini po and Yasotha…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: