1. இடைவேளையின் பின்னர்…..

cey6th-24th-march14 038
cey6th-24th-march14 039
இலங்கை தொடும் விமானம்.

இடைவேளையின் பின்னர்…..

நீண்ட நாட்களின் (2010ற்கு) பின்னர் இந்தப் பங்குனி 5 ம் திகதி 2014 இலங்கை பயணமானேன். 6ம் திகதி மாலை 3.30க்கு பண்டாரநாயக்கா விமான நிலையம் அடைந்தேன்.

இது ஆனந்தச் சுற்றுலா அல்ல. நோயுற்ற என் தங்கையைப் பார்க்கச் சென்றிருந்தேன். தாய்நாடு செல்லும் மகிழ்வு சிறிதளவும் அல்ல. பொதுவாக நான் சிறிது ஆடம்பரமாக ஆடையணிவேன். இம்முறை சிறிது அடக்கி வாசித்து என் செயல்கள் அங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கவனமாகச் சென்றிருந்தேன்.

மனதுள் அழுதழுது உங்களுடன் சாதாரணமாக ஆக்கங்கள் போட்டு உறவாடிய படி இங்கு இருந்தேன். அங்கு சென்றதும் அழுதுவிடுவேனோ என்று பயந்தபடி இருந்தேன். தங்கையின் சாதாரணமான முகம் எனக்குத் தைரியம் தந்தது.

இறைவன் அருளால் தேறிவரும் தங்கை. இதயத்திற்கு அமைதி தந்தது.

பயணம் நன்றாக அமைந்தது. காலநிலையோ மிக வெப்பமாக, அது தாங்க முடியாததாக இருந்தது.
இலங்கையில் பல தெருக்கள் மிக நவீனமயமாக்கப்பட்டு அழகாகக் காட்சி தந்தது.

இங்கிருந்து இஸ்தான்புல் சென்று விமானம் மாறி மாலைதீவு மாலேயில் தரித்துப் பின்னர் இலங்கை சென்றது புது அனுபவம்.
cey6th-24th-march14 032
cey6th-24th-march14 034
மாலை தீவு(மாலே)

பயண அலுப்பு இன்னும் தீரவில்லை. தங்கள் ஆக்கங்களிற்குக் கருத்திட சிறிது தாமதமாகும் மன்னிப்புடன் மீண்டும் தொடருவேன்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
26-3-2014

26 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  மார்ச் 26, 2014 @ 11:20:44

  விரைவில் தங்களின் தங்கை நலம் பெறுவார்கள்…

  முதலில் நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்… பதிவுகள் + கருத்துக்கள் எல்லாம் அப்புறம்…

  மறுமொழி

 2. bagawanjee
  மார்ச் 26, 2014 @ 11:23:13

  விமான ஜன்னல் வழியே தெரியும் காட்சிகள் அருமை !

  மறுமொழி

 3. Rajarajeswari jaghamani
  மார்ச் 26, 2014 @ 13:11:14

  தங்கையின் சாதாரணமான முகம் எங்களுக்கும் தைரியம் தந்தது.

  மறுமொழி

 4. மணிக்கன்னையன்
  மார்ச் 26, 2014 @ 13:16:22

  தமக்கை விரைவில் குணமடைவார்கள் …தங்களின் வரவு கண்டு

  மறுமொழி

 5. Vathiri C Raveendran
  மார்ச் 26, 2014 @ 13:19:01

  விரைவில் தங்களின் தங்கை நலம் பெறுவார்.
  தாமதமாய் கருத்து வரலாம்.

  மறுமொழி

 6. ramani
  மார்ச் 26, 2014 @ 14:02:46

  தங்கள் தங்கை பூரண நலமடைய
  எல்லாம் வல்லவனை வேண்டிக் கொள்கிறோம்
  வாழ்த்துக்களுடன்…
  (முக நூலில் படம் கண்டேன்
  தங்களைக் கண்ட மகிழ்வு பூரணமாய்
  இருவர் முகத்திலும்… )

  மறுமொழி

 7. karanthaijayakumar
  மார்ச் 26, 2014 @ 14:57:09

  தங்களின் சகோதரியார் பூரண நலம் பெறுவார்
  கவலை வேண்டாம் சகோதரியாரே

  மறுமொழி

 8. வை. கோபாலகிருஷ்ணன்
  மார்ச் 27, 2014 @ 03:51:52

  //தங்கையின் சாதாரணமான முகம் எனக்குத் தைரியம் தந்தது.
  இறைவன் அருளால் தேறிவரும் தங்கை. இதயத்திற்கு அமைதி தந்தது.//

  மகிழ்ச்சியான சற்றே ஆறுதல் அளித்த செய்திகள்.

  மறுமொழி

 9. தென்றல்சசிகலா
  மார்ச் 27, 2014 @ 05:07:31

  தங்கை விரைவில் நலம் பெறுவார்கள். தாங்களும் ஓய்வெடுத்து பிறகு வாருங்கள் இங்கு.

  மறுமொழி

 10. கோமதி அரசு
  மார்ச் 27, 2014 @ 15:56:26

  தங்கை சாதாரணமாய் இருப்பது அறிந்து கடவுளுக்கு நன்றி.
  தங்கை விரைவில் பூரண உடல் நலம் பெற வாழ்த்துக்கள்.
  ஒய்வு எடுத்துவிட்டு பின் நிதானமாய் வாருங்கள்.

  மறுமொழி

 11. Dr.M.K.Muruganandan
  மார்ச் 28, 2014 @ 07:03:59

  உங்கள் தங்கை விரைவில் குணமடைவாள்.
  மிகுதி அனுபவங்களைச் சொல்லுங்கள்
  கேட்கிறோம்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 05, 2014 @ 08:33:12

   இனிய கருத்திற்கு மிக மகிழ்ச்சி.
   இனிய நன்றி Dr.
   தங்கள் ஆலோசனைப்படி நடந்தேன்.
   வரும் போது விமானப் பயணத்தால் காது அடைக்கவில்லை.
   மிக்க நன்றி. டாக்டர்.

   மறுமொழி

 12. iniya
  மார்ச் 29, 2014 @ 20:40:23

  ஓஹோ பயணம் சென்றிருந்தீர்களா அது தான் காணவில்லையா?
  நீங்கள் நன்றாக ஓய்வெடுங்கள் முதலில்.
  தங்கையின் உடல் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.

  மறுமொழி

 13. ஸாதிகா ஹஸனா
  மே 04, 2014 @ 12:49:12

  உங்கள் தங்கை நோயற்ற வாழ்வுடன் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழ என் பிராத்தனைகள் ,

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: