13. பம்பரம் சுத்துதே!…

after malay12,214 006

பம்பரம் சுத்துதே!…

சுத்துதே சுத்துதே பம்பரம் சுத்துதே!
உத்துவேகத்தின் அழகு உத்துங்கமாகுதே!
பத்துதே பத்துதே பரமானந்தம் பத்துதே
எத்தனை மகிழ்வு பேரனை அணைக்குதே!
ஓத்துதல் போலவே இன்பம் தருகுதே
சித்துவித்தையாய்த் தோற்றம் தருகுதே!
(உத்துவேகம் – மிகவிரைவு. உத்துங்கம் – உயர்ச்சி.
ஓத்துதல் – தாளம் போடுதல். சித்துவித்தை – மாயவித்தை)
28-3-2014

after malay12,214 008
after malay12,214 012

20 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  மார்ச் 28, 2014 @ 21:39:12

  மிகவும் ரசித்தேன்
  சில அருஞ்சொற்பதமும் அறிந்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 2. பி.தமிழ் முகில்
  மார்ச் 28, 2014 @ 22:54:08

  அழகான கவிதை கவியே. சில புதிய சொற்களும் அவற்றின் பொருளும் அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி கவியே.

  மறுமொழி

 3. கோமதி அரசு
  மார்ச் 29, 2014 @ 01:16:45

  பேரனுக்கு சுழற்றி விடும் பம்பரம் வாங்கி வந்து சுழல விட்டு பேரனை மகிழ்வித்துவிட்டு அப்படியே எங்களுக்கும் கவிதை விருந்து.
  வெற்றிக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்..

  மறுமொழி

 4. Bagawanjee KA
  மார்ச் 29, 2014 @ 02:21:11

  பம்பரம் மட்டுமா சுத்துது ,சாட்டையும் ,கட்டைப் பம்பரமும் போய் பிளாஸ்டிக் பம்பரம் ,,காலமும் மாறுது !

  மறுமொழி

 5. Rajarajeswari jaghamani
  மார்ச் 29, 2014 @ 02:44:14

  சுற்றும் பம்பரம்
  சுழலும் வார்த்தைகள்
  கோர்த்த கவிதை அழகு..!

  மறுமொழி

 6. karanthaijayakumar
  மார்ச் 29, 2014 @ 02:57:19

  பம்பரமாய்
  சுழலும்
  வார்த்தைகள்
  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 7. திண்டுக்கல் தனபாலன்
  மார்ச் 29, 2014 @ 03:13:33

  ஆகா…! ரசித்தேன்… வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 8. தென்றல் சசிகலா
  மார்ச் 29, 2014 @ 07:29:00

  மனம் அந்த காட்சியை நினைத்து மகிழ்கிறது. படங்களும் சிறப்புங்க.

  மறுமொழி

 9. வெற்றிவேல்
  மார்ச் 29, 2014 @ 12:46:05

  பம்பரம் இப்போ இப்புடி வருதா… நாங்க எல்லாம் கயிற சுத்தி விளையாடுவோம்… கயிறு இல்லாத காலத்தில் அரைஞாண் கயிற்றையும் ஆயுதமாக கொண்ட காலங்களும் உண்டு….

  கவிதை நல்லாருக்கு…

  மறுமொழி

 10. iniya
  மார்ச் 29, 2014 @ 21:07:23

  பயணக் களை நீங்கிவிட்டதோ பேரனுடன் சேர்ந்து பம்பரம் சுற்றியவுடன் நல்லது.அழகு கவிதையும் புதிய சொற்களும் தெரிந்து கொண்டேன். நன்றி ! வாழ்த்துக்கள்….!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: