2. இடைவேளையின் பின்னர் 2

cey6th-24th-march14 260

இடைவேளையின் பின்னர் 2

முதலில் உறவுகளை சந்தித்த மகிழ்வு.
பிறகு வியர்வை.
குளிரூட்டப்பட்ட நாடு போல டென்மார்க்.
இது நேர் எதிர்மாறு. ஆவியில் வேகவைப்பது போல உடல்.

தங்கை மகள் ” இந்தாங்கோ பெரியம்மா”.. என்று லமுனேற் செய்த ஒரு அட்டையைத் தந்தாள். அதை விசிறியாகப் பாவித்தேன். காற்றாடி சுற்றினாலும் அதை மீறி வியர்த்தது. திட்டமிட்டபடி முகநூல் நண்பர் திரு சிறி சிறீஸ்கந்தரஜா வீட்டிற்கு எனது தம்பியுடன் விஐயம் செய்தோம்.

மிகவும் இலட்சுமீகரமான அன்புடை தோற்றம் தந்த இவரது மனைவி மகளைக் கண்டு அளவளாவி வந்தோம்.
முகநூல் நண்பர் டாக்டர் முத்தையா கதிரவேற்பிள்ளை முருகானந்தம் (ஹாய் நலமா புளொ ஸ்பொட்.கொம்.) மிகவும் பரபரப்பாக நடமாடும் மனிதர் இவரை வீட்டில் ஆறுதலாகச் சந்திக்க முடியாது என்று இவரது வீட்டிற்கு செல்லாது கிளினிற்குச் சென்றோம். இவருடன் அளவளாவி. எனது 2 புத்தகங்களையும் கொடுத்தேன் .அவரும் தனது 3 புத்தகங்களை எனக்குத் தந்தார். நான் நின்ற 2 ஞாயிற்றுக் கிழமையும் இவரது ஆக்கம் – கட்டுரை – வீரகேசரி பத்திரிகையில் பார்த்தேன்.
மிகவும் அன்பான இளமைத் தோற்றம் கொண்ட இனியவர். நோயாளிகளை நிறுத்தி வைத்துத் தனது நேரத்தை எமக்குத் தந்தார். மிகவும் மகிழ்ந்தோம்
– மிக்க நன்றி. cey6th-24th-march14 051 cey6th-24th-march14 053 cey6th-24th-march14 054

பம்லப்பிட்டி கோயிலுக்குச் சென்றேன். இது நானாக நடந்து சென்றேன். போனவுடன் புறாக்கள் என்னைப் பறந்து வந்து சுற்றின. ஒருவேளை பக்தர்கள் பிரசாதம் போட்டுப் பழக்கியுள்ளனரோ!…சுற்றிப் பார்த்திட்டு ஒ!..உன்னிடம் .ஒன்றுமில்லையா எனக் கூட்டமாகப் பறந்து சென்றன…
கிளிக்கினேன். cey6th-24th-march14 110

ஆறுதலாக வணங்கிய பின் அமர்ந்திருந்து பார்த்த போது பச்சைப் பசேல் என கூரை மேலே தென்னை ஓலைகள் கண்ணையும், மனதையும் கவர்ந்தது. cey6th-24th-march14 111
புதிய கோயில் திறக்கவில்லை பூட்டியிருந்தது.
cey6th-24th-march14 274

அதையும் படம் எடுத்த பின் வீடு சென்றேன்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
30-3-2014

vilkku -2

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  மார்ச் 30, 2014 @ 07:49:56

  இனிய சந்திப்பு மகிழ்ச்சி சகோதரி…

  மறுமொழி

 2. Rajarajeswari jaghamani
  மார்ச் 30, 2014 @ 11:33:47

  அன்பான இனிய சந்திப்பு..!

  மறுமொழி

 3. Bagawanjee KA
  மார்ச் 30, 2014 @ 13:47:39

  Drமுருகானந்தம் அவர்களை நாங்கள் வலைப்பூ மூலமாக சந்தித்து வருகிறோம் ,தாங்கள் நேரில் சந்தித்தமைக்கு பாராட்டுக்கள் !

  மறுமொழி

 4. கோமதி அரசு
  மார்ச் 30, 2014 @ 14:34:56

  அருமையான சந்திப்பு..
  வாழ்த்துக்கள் சகோதரி.
  படங்கள் நன்றாக இருக்கிறது..

  மறுமொழி

 5. Dr.M.K.Muruganandan
  மார்ச் 30, 2014 @ 14:57:30

  உங்களைச் சந்தித்தமை மிக்க மகிழ்சியான தருணம்.
  குறுகிய கால தாய்நாட்டுப் பயணத்தில் என்னையும் சந்திக்க நேரம் ஒதுக்கியதற்கு நன்றி
  வேலையில் இருந்தபோதும் உங்களுடனான சில நிமிட நேரங்கள் பெறுமதியானவை.

  மறுமொழி

 6. இராய செல்லப்பா
  மார்ச் 31, 2014 @ 04:59:51

  உங்கள் எழுத்தைப் போலவே இளமையாக இருக்கிறீர்கள்! மருத்துவருடன் சந்திப்புக்குப் பிறகு இன்னும் உற்சாகமாக எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்!

  மறுமொழி

 7. yarlpavanan
  ஏப் 01, 2014 @ 16:31:20

  அறிஞர்கள் சந்திப்பு
  தாய் மண் உறவு
  பட்டறிந்த உணர்வுப் பகிர்வு
  எல்லாமே
  நிறைவைத் தந்திருக்கும் என
  நம்புகிறேன்!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: